- Tuesday
- May 12th, 2026
யாழ்ப்பாணம், நாவந்துறை மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு கேரதீவு இறங்குதுறையில் தரித்து நின்றபோதே கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் எரியூட்டப்பட்டுள்ளது. குறித்த படகானது அன்ரன் சிலுவைதாசன் என்பவருக்குச் சொந்தமானது என்பதுடன், அப்படகினை நம்பி தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டுவந்த நிலையில், இவ்வாறு...
இலங்கை அரசியலில் நீடிக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. ஏற்கனவே இடம்பெற்ற அமர்வுகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்தது. சிலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த...
சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலே தான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக...
“நாடாளுமன்றில் சட்டரீதியாக எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறக்க தயாராக இருந்தேன்” என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். பலாத்காரமாக அல்லது வன்முறைகளால் என்னை வெளியேற்றுவது இலகுவான காரியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வீரகெட்டியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் .தனைத்...
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்புவிடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடிகள் மற்றும் நாடாளுமன்றில் இரண்டாவது தடவையாக நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தனது நிலைப்பாட்டை...
வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், குழப்பத்தில் ஈடுபட்டுள்ளது. கஜா புயல் தாக்கம் ஏற்பட்ட நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் இமையாணன் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முகமூடிகளை அணிந்து முகத்தை மறைத்துக்கொண்டு வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவினர், குறித்த வர்த்தக நிலையத்தை அடித்து நொருக்கி...
வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான கஜா புயல், தமிழகத்தைவிட்டு நகர்ந்து இன்று மாலை அரபிக் கடலை அடைகிறது.தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8ஆம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது....
கஜா புயல் காரணமாக யாழ். மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். கஜா புயல் தொடர்பாக நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யாழ். மாவட்டத்தில் நிலைக்கொண்டிருந்த கஜா புயல் நேற்று மாலை 6.10 மணிமுதல் இன்று அதிகாலை...
நேற்றையதினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது மகிந்த ராஜபக்ச தரப்பினர் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தினர். குறிப்பாக பொலிஸார் மீதான தாக்குதலில் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த கதிரை பொலிஸார்மீது விழுந்ததனால் பொலிஸார் சிலர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது....
மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவி நீக்கம் செய்யாவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழப்பநிலையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி...
“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச்சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக...
நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
மகிந்த ராஜபக்ச உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். “மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக மீண்டும் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர் இனிமேலும் பிரதமராகப் பதவி வகிக்க முடியாது, உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவரது அமைச்சரவை இனிமேலும் பதவியில் இருப்பதற்கு அருகதை இல்லை” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வுகள் 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வுகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நேற்று முன்தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. ஆனால், அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகள் நேற்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது....
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா மீது மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரச தரப்பினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் இவ்வாறு மிளகாய்த்தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியாவில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிலர் குழப்பம் விளைத்து மோதலில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைக்கு வழங்கப்படுகின்ற சத்துணவு திட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்தமைக்கு எதிராக வவுனியா முஸ்லீம் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, அவ்விடத்திற்கு வருகை தந்த சிலர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களோடு...
ஒரே சூலில் மூன்று பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் குழந்தைகளின் முகங்களைப் பார்க்காமல் மரணமடைந்துள்ளார்.இந்தத் துயரச் சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் ( 14.11.2018) இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த குறித்த தாய் திருமணமாகி நீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் கிடைக்காததால் கடந்த வருடம் இந்தியாவில் சிகிச்சை பெற்று கருத்தரித்த நிலையில் நாடு திரும்பியுள்ளார். இவருக்கு பிரசவ...
தற்போதைய அரசியல் சூழ்நிலை பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து வாழ முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் வடக்கு- கிழக்கை தனிநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம் எனவும முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்குள் நேற்று (வியாழக்கிழமை) நிலவிய குழப்பகரமான சூழல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”1987ஆம் ஆண்டில்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைவாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைப்பை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது. அதன்படி ஒரு லீட்டர் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 07...
தமிழகத்தில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள கஜா புயல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையின் வடக்கு, வடமேற்கு திசையில் காங்கேசன் துறையிலிருந்து சுமார் 75 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கஜா புயல் அடுத்த 6 மணித்தியாலங்களுள் மேற்கு நோக்கி நகர்வதுடன் படிப்படியாக குறைவடையுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts
