ரணிலுடன் இணைந்து செயற்பட தயார் இல்லை – தீர்ப்பை அடுத்து ஜனாதிபதி திட்டவட்டம்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் மீண்டும் இணைந்து செயற்படத் தயார் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பிலான உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாடியது. இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி...

ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்பு முரணானது என உயர் நீதிமன்ற தீர்ப்பு – முழுமையான விபரங்கள் இதோ!

பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரமத நீதியரசர் நளின் பெரேரா உட்பட எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினால் ஏகமனதாக இந்த மனுக்கள்...
Ad Widget

யாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழில் பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். யாழ்.கலைத்தூது கலையரங்கில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,...

தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்!- அரியாலையில் வீடும் வாகனமும் பலத்த சேதம்

யாழ்ப்பாணம் அரியாலையில் முகமூடி அணிந்த மர்ம வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசத்தினால் அப்பகுதியின் வீடொன்றும், காரொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளன. வங்கி முகாமையாளர் ஒருவரின் வீடே இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இவ்வாறு அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வாள்வெட்டு கும்பல் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை...

மீனவர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!

தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து டிசம்பர் 15ஆம் திகதி வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்இ மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட...

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இராணுவம் விளக்கமளிக்க வேண்டும்: யஸ்மின் சூக்கா

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு இலங்கை இராணுவம் விளக்கமளிக்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் 2019 மே 17 முதல் 19 வரை காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம்...

யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்த யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி பெரும்பான்மையால் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள மாநகர சபையின் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வரும், வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படுமென எதிர்வு கூறப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக தமிழ்த்...

தேசியப் பாடசாலைகளில் தரம்6இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை தேசியப் பாடசாலைகளில் தரம் 6இல் இணைப்பதற்கான வெட்டுப்புள்ளியை கல்வி அமைச்சு வெளியிட்டது. வடக்கில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி 176 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய இரண்டுக்கும் 164 புள்ளிகள்...

வட்டுக்கோட்டையில் சொந்த வீட்டிலேயே நகைகளை சூறையாடிய யுவதி சிக்கினார்!

வட்டுக்கோட்டை கிழக்கில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என்று வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முறைப்பாட்டாளரின் மகள்தான் நகைகளைத் திருடினார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வட்டுக்கோட்டை கிழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகள் திருட்டு என வீட்டின் குடும்பத்தலைவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார்...

தமிழகத்திலிருந்து ஒருதொகுதி இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த இலங்கையைச் நேர்ந்த 42 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார். 19 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பியதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மூன்று...

ஐக்கிய தேசிய கட்சியுடனான ஒப்பந்தம் குறித்து கூட்டமைப்பு விளக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியுடனான ஒப்பந்தம் தொடர்பில் கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. பொறுப்புக்கூறல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்ததாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டமைப்பு இரகசிய ஒப்பந்தம் செய்து தமிழீழத்தை அடையப் போவதாக மஹிந்த...

தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் ஓரம் கட்டுகின்றது: விக்னேஸ்வரன்

தமிழ் மக்களை ஓரங்கட்டும் செயற்பாட்டினை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பளை பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரச அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் பொது...

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக செயற்படுவதற்கு நம்பிக்கைக்கு உரியவர் என்று நாடாளுமன்றத்தால் நம்பிக்கைப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஜேவிபி வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வைப்...

யாழில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்

யாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று ( செவ்வாய்க்கிழமை) இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்கள், அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இரண்டாம்...

நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக போக்குவரத்துச் சபை கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய சாலை நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பிராந்திய முகாமையாளரை மாற்றுமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய இணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்டோர்...

இலங்கை நீதிமன்றங்களுக்கு புத்தாண்டு விடுமுறை!

இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.குறித்த விடுமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 7ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது. அந்தவகையில் 2019ஆம் ஆண்டின் புத்தாண்டின் பின்னர் ஜனவரி 7ஆம் திகதி நாட்டின் சகல நீதிமன்றங்களும் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் ஆகையால் தான் இலங்கையிலுள்ள உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் மிகவும்...

அரசாங்கத்தின் தரப்பாக செயற்படப் போவதில்லை: மாவை

அரசாங்கத்தின் தரப்பாக ஒருபோதும் செயற்படப் போவதில்லை என்றும், தாம் எப்போதும் எதிர்க்கட்சியிலேயே செயற்படப் போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தமது நிலைப்பாடு குறித்த கடிதத்தை சபையில் சமர்ப்பித்த அவர், தமிழ், சிங்கள...

யாழில் நிறைவுற்றது இன ஐக்கியத்திற்கான முச்சக்கர நாற்காலி பயணம்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையில் தெற்கே தெய்வேந்திர முனையில் ஆரம்பித்த நாட்டில் சமாதானமும் சாந்தியும் வேண்டி கோப்ரல் கருணாரட்டவின் முச்சக்கரநாற்காலி வண்டி பயணமானது நேற்று பிற்பகல் 4 மணியளவில் பருத்தித்துறை பேதுறு முனையில் நிறைவு பெற்றது. பருத்தித்துறை பேதுறு முனையை சென்றடைந்ததும் நான்கு மத தலைவர்களின் ஆசிர்வாத பிரார்த்தனைகளுடன் நிறைவு விழா இடம்பெற்றது....

மன்னார் மனித புதை குழியிலிருந்து 21 சிறுவர்களின் எலும்புக் கூடுகள் மீட்பு!!

மன்னார் மனித புதை குழியிலிருந்து இது வரை 21 சிறுவர்களுடைய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். இந்தப் புதை குழியில் இருந்து இதுவரை 276 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில்...

ரணிலுக்கான ஆதரவின் போது விதிக்க வேண்டிய நிபந்தனைகளை சுட்டிக்காட்டி சம்பந்தனிற்கு ஸ்ரீகாந்தா கடிதம்!

அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்துவதற்குரிய அழுத்தத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு நேற்று (செவ்வாய்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு...
Loading posts...

All posts loaded

No more posts