ரணிலுக்கான ஆதரவின் போது விதிக்க வேண்டிய நிபந்தனைகளை சுட்டிக்காட்டி சம்பந்தனிற்கு ஸ்ரீகாந்தா கடிதம்!

அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்துவதற்குரிய அழுத்தத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு நேற்று (செவ்வாய்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் போது விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகள் தொடர்பிலும் ந.ஸ்ரீகாந்தா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் போது நிபந்தனைகளாக விதிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts