அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை – மாவை

போரின் போது இடம்பெயர்ந்த மக்களுக்காக வீடுகளை கட்டிகொடுப்பதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் மாவை சேனாதிராஜா இதனை சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும்...

யாழில் முழு அடைப்பு, கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும், முழுஅடைப்பிற்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டியும் திங்களன்று ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வினை முன்னிறுத்தி இடம்பெறவுள்ள இந்த போராட்டத்திற்கு அனைவரது ஆதரவும் அவசியம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்...
Ad Widget

அரச வேலைவாய்ப்பை பெற தமிழ், சிங்கள மொழிகள் அவசியம் – மனோ வலியுறுத்தல்

எதிர்காலத்தில் அரச வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளும் அவசியமென அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மொழியை கற்போம் மனதை வெல்வோம் வேலைத்திட்டத்தின் கீழ், மோதர பாடசாலைகளை மையப்படுத்திய மொழிக்கற்கை பயிற்சி, தேசிய மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) வட...

யாழில் மீண்டும் விசேட தேடுதல் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கொக்குவில், இணுவில், தாவடி போன்ற பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று காங்கேசன்துறை, பலாலி, மானிப்பாய், பிறவுன் மற்றும் பருத்தித்துறை வீதிகளிலும் ஆங்காங்கே பொலிஸார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்....

தர்மபுரத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிலுள்ள தர்மபுரம் 2ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடுப்பஸ்த்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தர்மபுரம் மேற்கு 6 யூனிட்டைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான அரசசிங்கம் கௌரியனந்தம் (28 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவம்...

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் தமது உறவுகளுக்கு நீதி கோரி நடாத்தப்படவுள்ள பூரண கடையடைப்பு மற்றும் கவனீயர்ப்பு பேரணிக்கு எமது கட்சி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக தமது உறுவுகளைத் தேடி வீதிகளில் போராட்டம் நடாத்திவரும் உறவுகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. ஸ்ரீலங்கா அரசானது அவ்வப்போது சில கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன்...

ரயில் சேவைகள் தாமதம்!

கல்கிஸ்ஸை, காங்கேசன்துறை, மருதானை - மாத்தறை வரையான ரயில் சேவைகள் தாமதம் அடைந்திருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. டீசல், மின்சார ரயில் எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் காரணமாகவே இந்த ரயில்சேவைகள் தாமதம் அடைந்திருப்பதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் மக்களும் தம்மால் முடிந்தளவுக்கு சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர மட்டங்களில் எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல்...

250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

யாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் பேணும் வர்த்தக மையம் ஒன்றை அமைப்பதற்காக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் நேற்று (வியாழக்கிழமை) அலரிமாளிகையில் வைத்து, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும், அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் அனைத்துலக வணிக அமைச்சின் செயலர் கொடிகாரவும்...

இராணுவ வீரர்களை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி

இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தக்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றமை குறித்து ஜனாதிபதியிடம் கொழும்பிலுள்ள ஊடகமொன்று கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவத்தினர் குருதி சிந்தி...

முழு அடைப்புப் போராட்டம் குறித்து கூட்டமைப்பு மௌனம்!

எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டம் குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் சிவில் சமூக அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் எதிர்வரும் 25ஆம் திகதி (திங்கட்கிழமை) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த...

யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்

.சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் மோட்டார் சைக்கிளில் நேற்று புதன்கிழமை இரவு சென்ற கும்பல் ஒன்று வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினருக்கு வீட்டு உரிமையாளர்...

சம்பிக்க ரணவக்க, யாழில் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்

யாழ்ப்பாணம் வந்துள்ள மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க யாழ் மாவட்டத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டதுடன் புதிய அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார். அத்துடன் யாழ் புகையிரதம் நிலையம் முன்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிலையான திட்டத்தினையும் அவர் ஆரம்பித்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து யாழ்...

தமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்

தமிழ் மக்களின் அரசியல் உரித்துக்களை பெற்றுக்கொள்ளும் பயணத்தில், அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்திற்கு இன்று(வியாழக்கிழமை) காலை விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது அவர் யாழ் மாவட்டத்தை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை...

கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவினை வழங்குவதில் பயனில்லை – சுரேஸ்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுக் காண, எந்தவொரு அரசாங்கமும் தீர்வினை முன்வைக்காத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவினை வழங்குவதில் எந்தவொரு பயனும் இல்லை என்று ஈ.பி.ஆர்.எப். கட்சியின் தலைவரான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும், அர்த்தமற்ற ஆதரவினை வழங்கி அரசாங்கத்தை...

பத்திரிகையாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது – பொலிஸாருக்கு நீதிவான் அறிவுரை

சமூகத்துக்காகவே பத்திரிகையாளர்கள் கடமையாற்றுகிறார்கள். அவர்களின் கடமைக்கு இடையூறு வழங்கக் கூடாது. பத்திரிகையாளர்களை தாக்கவோ தாக்க முயற்சிக்கவோ கூடாது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், பொலிஸாரை அறிவுறுத்தினார். கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான செய்தியை காணொலிப் பதிவைச் செய்துகொண்டிருந்த ஊடகவியலாளரைத் தாக்கிய கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியை...

குருநகர்ப்பகுதியிருந்து கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை

யாழ் குருநகர்ப்பகுதியிருந்து கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இரண்டு நாள்களாகியும் கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 25 பேர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த காணாமல் போயுள்ள மீனவர்களும் அவர்களில் அடங்கலாம் என நம்பப்படுகிறது....

பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் நால்வர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து வாள் மற்றும் கோடரியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (20) இரவு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அவர்களது வீடுகளிலேயே வைத்து கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 2...

மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கான ஒரு எச்சரிக்கையா? – நாடாளுமன்றில் கூட்டமைப்பு!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கான ஒரு எச்சரிக்கையா என சந்தேகம் எழுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். சபாநாயகர் தலைமையில் நேற்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பது மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு...

வடக்கு இளைஞர்களை குறிவைக்கிறார் கோட்டா!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்து பேச்சு நடத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிச்சம் என்ற அமைப்பின் செயற்பாடுகளை இவ்விரு மாகாணங்களிலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கான செயல் திட்டங்கள் குறித்தே இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இதன்படி அடுத்த மாதத்துக்குள் மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், தொகுதி மட்டத்திலான செயற்பாட்டாளர்களுக்கான...
Loading posts...

All posts loaded

No more posts