சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே நீதிக்கான ஒரேவழி ஐ.நாவில் கஜேந்திரகுமார்

13-03-2019 ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான அவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் விடயம் 4ல் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்கு வருமாறு. ஐ.நா மனித உரிமைகள் பேரவை நாற்பதாவது கூட்டத்தொடர் விடயம் 4 : பொதுவிவாதம் உரையாற்றியவர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த அறிக்கையானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டிணைந்து...

சர்வதேச குற்றவியல் நீதி விசாரணை கோரும் பல்கலை மாணவர் பேரணிக்கு ஆதரவு

ஐ.நா பாதுகாப்புச் சபையூடாக சர்வதேச குற்றவியல் நீதி விசாரணை கோரும் பல்கலை மாணவர் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுக்களால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பது யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் தெரியாமலுள்ளது. கடந்த 10...
Ad Widget

பாதாள உலகக் குழுத் தலைவர் மதூஷின் வடக்கு முகவராக யாழ்.வர்த்தகர் துஷ்யந்தன்!

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவர் என அறிமுகப்படுத்தப்பட்டு டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷின் வடக்கு மாகாண முகவராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செயற்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை சிங்கள ஊடகமான லங்காதீப வெளியிட்டுள்ளது. மாகந்துரே மதூஷின் கைதையடுத்து அந்த ஊடகம் வெளியிட்டுவரும் விசாரணை...

வடக்கு மக்களின் மகஜர்களை ஐ.நா.வில் கையளிக்க முடியாதென்கிறார் மஹிந்த!

ஐ.நா. செல்லும் வடக்கு ஆளுநர், வடக்கு மக்களின் மகஜர்களை அங்கு முன்வைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டது. அவ்வாறு கையளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஒன்றும் தபால் நிலையம் அல்ல என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை...

பால்மா விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி

முன்மொழியப்பட்ட இறக்குமதி பால்மா விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பருத்தித்துறையில் ஒருவர் தனக்குத் தானே தீவைப்பு

பருத்தித்துறை மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (13) காலை 08 மணியளவில் நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இவ்வாறு தனக்குத் தானே தீமூட்டியவர் இனங்காணப்படவில்லை. சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்புலன்ஸுக்கு அறிவித்துவரை அவரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது....

முல்லைத்தீவில் ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொள்ளை!

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் களவாடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளரின் வீட்டில் நேற்று பகல் வேளை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான இரண்டு கமராக்கள் மற்றும் மடிக்கணணி என்பன திருடப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில்...

எரிபொருளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாயினால் அதிகரிப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 137 ரூபாயாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாயினால், அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதன் புதிய விலை 157 ரூபாயாகும்....

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஆசிரியர் சங்கம்

பல கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதிபர்கள், இலங்கை கல்வி சமூக சம்மேளனம், உள்ளிட்ட கல்வித்துறையுடன் தொடர்புபட்ட 30 தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிபர்,...

இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிப்பு

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் நாற்பதாவது கூட்டத்தொடரில் தமிழர் மரபுரிமைப் பேரவையினால் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான குறித்த அறிக்கை, ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் இந்த கூட்டத்தொடரில்...

முகாமையாளர் கொலையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின!

கிளிநொச்சி காப்புறுதி நிறுவன முகாமையாளர் கொலை விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. காப்புறுதி முகாமையாளரை கொல்லப் போகின்றேன் என சந்தேகநபர் தனது மனைவியிடம் முதல்நாள் தெரிவித்துவிட்டே இந்த கொலையை செய்தார் என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உதயநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளரான வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (32) என்பவர்...

ஐ.நாவில் கால அவகாசம் வழங்க கூட்டமைப்பு முனைப்புக் காட்டுவதற்கு சலுகைகள்தான் காரணம்: விக்னேஸ்வரன்

“அரசுக்கு அனுசரணை வழங்குவதால் கிடைத்துள்ள செல்வச் செழிப்புக் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மயங்கியுள்ளது. அதனாலேயே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அரசுக்கு மேலும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றார்கள்” இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகத்தால் வாரந்த...

இலங்கை தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் யாராலும் அசைக்கமுடியாது: விவேக்

இலங்கை தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் கூறியுள்ளார் அத்தோடு, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதென அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று...

தமிழினத்திற்கு நீதி வலியுறுத்தும் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வாகன பவனி!

யாழ். பல்கலை மாணவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வட மாகாணம் தழுவிய வாகன பவனி யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாகன பவனி யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. யாழ். மாவட்டம் முழுவதும் பயணிக்கவுள்ள இந்த வாகன பவனி, அதனை தொடர்ந்து வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்லவுள்ளது. தமிழின...

சனியன்று இடம்பெறும் மக்கள் எழுச்சிப் பேரணி முக்கியத்துவமானது – யாழ்.பல்கலை. சமூகம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் சபையின் 40ஆவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலப்படுதியில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நிரந்தர மற்றும் பயனுறுதி வாய்ந்த தீர்வை நோக்கி நகர்த்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் வரும் சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் பேரணி முக்கியத்துவம் வாய்ந்த்து என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற...

11 இளைஞர்கள் கடத்தல்: குற்றச்சாட்டை ஏற்றார் அட்மிரல் கரன்னகொட

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைப் பிரிவு தமது கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வழக்கில், 14ஆவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாக இருந்து வந்தார். உயர் நீதிமன்றத்தின் மூலம், கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை...

மதுபான நிலையம் அமைக்க பாடசாலை உள்ளிட்ட அமைப்புக்கள் சம்மதக் கடிதங்கள் வழங்கியமை வேதனையளிக்கின்றது!! – அரசாங்க அதிபர்

ஓமந்தையில் மதுபான நிலையம் அமைப்பதற்கு பாடசாலை மற்றும் ஆலய நிர்வாகம் உள்ளிட்ட அமைப்புக்கள் சம்மதக் கடிதங்கள் வழங்கியமை வேதனையளிப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வவுனியா மாவட்ட செலயகத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்கள் மத்தியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். இது...

மக்களின் நலனை கருத்திற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக செயற்பட முடிவு!!

அதிகார பகிர்வு தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக செயற்பட முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். பத்தரமுல்லவில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையத்தில் தமிழ் தேசிய...

எம்மை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது: மாவை

தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, மனித உரிமை விடயங்களில் அரசாங்கம் எதிராக நிற்கக்கூடாதென்றும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர்...

மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் – இராணுவத் தளபதி கூறும் கருத்து!

மன்னார் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலும்புக்கூடுகள் பல நூற்றாண்டுகள் பழைமையானவை என்று தெரியவந்ததை அடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர்...
Loading posts...

All posts loaded

No more posts