- Thursday
- May 7th, 2026
யாழ். நாகா்கோவில் பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தை பொங்கல் தினத்தில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த விடயம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினரை நாகர்கோவில் பகுதிக்கு...
கட்சிக்குள் மூடிய அறைக்குள் கதைத்த விடயங்களை ஊடகங்களிற்கு தெரிவித்து, செய்தியாக்கி குளிர்காய்பவர்கள் இருக்கிறார்கள். இதுதான் கட்சிக்கு விரோதமான விடயம். யாருக்கு வேட்புமனு வழங்கலாம், வழங்கக்கூடாது என நான் மூடிய அறைக்குள் பேசியது கட்சிக்கு விரோதமானது அல்ல என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அண்மையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகளை சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜாசிங்க தெரிவித்ததாவது; கோரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் தேவையான...
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வியாபாரத்துக்கு என எடுத்துச் செல்லப்பட்ட உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளை பக்கெட் செய்து கொண்டிருந்த போது 2 பெண்கள், 2 ஆண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தெல்லிப்பளை, வித்தகபுரம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்த நான்கு பேரும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 5...
முல்லைத்தீவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் விஜிதரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றிலிருந்து கடந்த வாரம் முல்லைத்தீவு வந்த குடும்பஸ்தரின் விமான பயணத்தின் போது சீனாவினை சேர்ந்தவர்களும் இவரோடு பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் அவர் தனது சொந்த ஊரான...
இலங்கையின் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த அழைப்பினை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், இறுதி யுத்தத்தில் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பாக...
இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 12 வைத்தியசாலைகளில் அனுமதிக்கலாம் என அரசு அறிவித்திருக்கின்றது. இதன்படி ராகமை, கம்பஹா, நீர்கொழும்பு, கண்டி, கராப்பிட்டிய, அனுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு, பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியும் எனவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக் கலாம் என்ற சந்தேகத்தின் பெயாில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக சு காதார அமைச்சு அதிகாாி ஒருவா் கூறியிருக்கின்றாா். இன்று காலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்ட சுகாதார அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,...
செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீா்த்த கேணில் சிறுவனின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கின்றது. ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் எதிர்வரும் காலங்களில் ஏற்படப்போகும் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியுமென முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் சபா.குகதாஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது,...
நிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கதிற்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் கலந்து...
கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒரு சீன பெண்ணுக்கே இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 43 வயதான குறித்த பெண் சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து இலங்கைக்கு வருகை...
யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் மீண்டும் இராணுவ சோதனை சாவடிகள் ஆரம்பிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பேருந்துகள் தொடக்கம் சகல வாகனங்களும் மக்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனா். ஓமந்தை, புளியங்குளம் பகுதிகளில் கடந்த இரு நாட்கள் தொடா்ச்சியாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது பெருமளவு கஞ்சுா போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் (ஏ-9) வீதியில்...
புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் தற்போது கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சிறப்பு பரிசோதனைகளிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வெளிநாட்டவர்களும் இதில் அடங்குவர். அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரும் மலேசியாவின் கோலாலம்பூருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில்...
மாற்று அணி, கூட்டமைப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது மாறாக தமிழ் மக்களின் ஒற்றுமையை மிகவும் மோசமாக பிளவுபடுத்துமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் தற்போது எந்ததொரு பிரச்சினையும் கிடையாது. அதாவது கூட்டமைப்பின்...
வெளிநாடுகளுக்கான அனைத்துக் குழுக்களின் விஜயங்களையும் நாளை தொடக்கம் இரத்துச் செய்வதற்கு சீன வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தீர்மானித்துள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சீன அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. வூஹான் மாகாணத்தின் அதிகாரிகள் இது தொடர்பில் குறிப்பிடுகையில், இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் 230...
நந்திக்கடல் உட்பட வன்னிப் பிரதேச களப்புக்களை அபிவிருத்தி செய்து நன்னீர் மீன்வளர்ப்பிற்கு ஏதுவான சூழலை எற்படுத்துவன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர கவனம் செலுத்தி வருகின்றார். குறிப்பாக நந்திக்கடலில் தேங்கிக் கிடக்கும் கழிவுளை அகற்றுவதற்கும் மணல் திட்டுக்களை அப்புறப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சரினால்...
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குத் தேவையான வைத்திய பரிசோதனைக்கு இணையத்தள பதிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வைத்திய பரிசோதனைக்கான நாள் மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக பதிவுசெய்வதற்கு இன்று (திங்கட்கிழமை) முதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இதற்கென அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தள செயலி இன்று முதல் செயற்பாட்டுக்கு வரவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல்...
பருத்தித்துறை பிரதேச சபையின் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியளவில் இந்த வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செபமாலை செபஸ்ரியன் என்பவர் கையில் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
கொரோனா வைரஸ் காரணமாக கொழும்புக்கு வரும் அனைவரையும் மூக்கு கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நெரிசலான பகுதியில் கூடும் அனைவரும் முகத்திற்கு மூக்கு கவசம் அணியுமாறு கொழும்பு தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்தார். கொழும்பு நகரத்தில் உள்ள பொது இடங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்குள் நுழையும்போது இந்த முறையை பின்பற்றவும் ஊழியர்களுக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
