- Thursday
- May 7th, 2026
காணாமற்போனவர்கள் எங்கே, எப்போது, யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதை ஜனாதிபதி கூறவேண்டும் – விக்னேஸ்வரன்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி தாம் நடத்திய விசாரணை பற்றிய முழு விவரங்களையும் முதலில் வெளிப்படுத்த வேண்டும் அல்லது அவ்வாறு அவர் நம்பத்தகுந்த விசாரணை எதனையும் நடத்தவில்லையானால் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு அவர் வழிவகுக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில்...
இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (24) யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது 42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியது இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் #கிளிநொச்சி_பல்கலைக்கழக_வளாகத்திற்கு பயன்படுத்தப்படும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்...
யாழ்ப்பாணம் சுகாதார ஊழியர்கள் நிரந்த நியமனம் வழங்கப்படும் வரை தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் தமது தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர். நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நேற்றுமுன்தினம் ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பில் இன்றைய தினம்...
யாழ்.மாநகரசபை விவகாரங்களை கவனிப்பதற்காக வடமாகாண ஆளுநா் ஓய்வுபெற்ற கேணல் தர இராணுவ அதிகாாி ஒருவரை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து யாழ்.மாநகரசபை உறுப்பினா் வ.பாா்த்தீபன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், பல அனுபவம் வாய்ந்த கல்விபுலமை சார் தொழில் சார் அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் இங்கேயே வாழுகின்ற நிலையில் ஒரு பெருபான்மைய இனத்தவரினை ஒரு இராணுவ...
உலகை உலுக்கும் பாம்பு வைரஸ் தொற்று; வடக்கு மக்களும் விழிப்போடு இருக்கவேண்டும் – மருத்துவர் யமுனாந்தா
“சீனாவை தாக்கி அங்கு மக்களை உயிரெடுத்து வரும் கோரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, தாய்லாந்து, சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கும் தொற்றியுள்ளது. எனவே வடக்கு மாகாணத்திலும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்போடு இருக்கவேண்டும்” இவ்வாறு மருத்துவர் சி. யமுனானந்தா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; தற்போது உலகம் முழுவதும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோரோனா வைரஸ் என்ற...
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் சில போடப்பட்டுள்ளன. குறித்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலைய கட்டடத்திற்கு மேல் உள்ள மட்டு ஊடக அமையத்தின் அலுவலகத்திற்குள் போடப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மட்டு ஊடக அமையத்திற்குள் ஊடக சந்திப்பிற்காக ஊடகவியலாளர் சென்று அலுவலகத்தை திறந்த போது குறித்த...
இடைநிறுத்தப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன இனை அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட விரிவுரையாளர்களுடன் நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பாக அமைச்சர் பந்துல...
ராணுவச் சிப்பாயைத் தாக்கியவரும் அவரது சகோதரனும் தலைமறைவாகியிருந்த நிலையில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் சகோதரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள யாரும் வசிக்காத வீடொன்றில் சந்தேகநபர், நண்பர்களுடன் இருந்தவேளை, அந்த வீட்டநேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் ராணுவத்தினர் சுற்றிவளைத்து அவரைக் கைது செய்தனர் என்றும் பொலிஸார் கூறினர். வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பகுதியில்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் அடங்கிய இறுவெட்டை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் ஒரு வருடத்தின் பின்னர் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சட்ட மா அதிபரிடம் எழுத்துமூலம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு தருமபுரம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்...
அமைச்சர் விமல் வீரவன்ச அரசியலமைப்பை மீறியுள்ளதுடன் அமைச்சராக பதவியேற்கும் போது முன்னெடுத்த சத்தியப்பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வட மாகாண சபையில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விமல் வீரவன்ச, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பெயர்பலகையை மாற்றியமைத்தமை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர்...
தம்பி தொடக்கிவிட்ட கூட்டு, தவறான தலைவர்களின் கைகளுக்கு மாறிவிட்டால் என்ன நடக்கும்? கொள்கைகள் பறிபோவன. சுயநலம் தலைவிரித்தாடும் என்று முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர் பூ. லஷ்மன் அல்லது மருத்துவ நிபுணர் சிவன் சுதன் போன்றவர்கள் தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டால் கட்டாயம் அவர்களுடன் கலந்தாலோசிக்க...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. “மனிதராகச் செயற்பட்டால்தான் வாழமுடியும். மனிதப் பிறப்பாக இருந்து கொண்டு மிருகமானால் வாழமுடியாது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான்...
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் மக்களிடம் அதிகரித்த வீதத்தில் அறவிடப்படும் ஆதன வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர் ஒருவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நகரில் உணவகங்கள், மருத்தகங்கள் தவிர ஏனைய வியாபார நிலைய வர்த்தகர்கள் தமது வர்த்தக செயற்பாடுகளை கைவிட்டுள்ளனர். இதன் காரணமாக கிளிநொச்சி...
கொடிகாமம் மிருசுவிலில் ஆண் ஒருவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் தன்னை வன்புணர்வதற்கு வந்ததாகவும் தன்னைப் பாதுகாக்கப்பதற்காக அவரை தாக்கியதாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கினார் என்று காவற்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கட்சி ஒன்றினை சேர்ந்தவர் என்றும்...
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் இருந்து வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்ளும் போது அதற்கு தேவையான நாளை தெரிவுசெய்வதற்கு Online மூலம் விண்ணப்பிக்கக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வு செத்சிரிபாய போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சில் போக்குவரத்து சேவை முகாமைத்துவ மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ள...
மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கான புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இணையகத்தளத்தின் முகவரி www.mahapola.lk என்பதாகும். இதுதொடர்பான நிகழ்வு தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் பந்துல குணவர்த்தன இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று முதல் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் சகல தகவல்களையும் இணையத்தளத்தில்...
பல்நோக்கு அபிவிருத்தி செயலணியினூடாக குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாதிரி விண்ணப்பப்படிவம் ஜனவரி 20ஆம் திகதி செய்தித்தாள்களில்…… நேர்முகப் பரீட்சை பெப்ரவரி 26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள்….. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகளுக்கு 06 மாதகால பயிற்சி…… பயிற்சிக் காலத்தில் 22,500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு… பயிற்சியின் பின்னர்...
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தொடர்ந்து தங்குவதற்கான எந்தவொருக் கோரிக்கையையும் அரசாங்கத்திடம் தான் விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2015 செப்டெம்பர் மாதம் இலங்கை நாடாளுமன்றத்தின்...
யாழ்ப்பாணம், பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட சிங்கள மாணவி கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு கழுத்து படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவரது கணவரே இந்தக் கொலையை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த கொலைச் சம்பவம் பண்ணை கடற்கரைப்...
யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் புதன்கிழமை மதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த பெண்ணுக்கும் குறித்த இராணுவ சிப்பாய்க்கும் இடையில்...
Loading posts...
All posts loaded
No more posts
