மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயம் – மீறினால் கைது!

மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மரக்கறி மொத்த விற்பனை நிலையத்திற்கு வௌியே விற்பனை செய்யப்படும் போது, சில்லறை விலையாக ஒரு கிலோகிராமிற்கு 40 ரூபாய் மாத்திரமே மேலதிகமாக அறவிடப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கரட் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த விலை 150 ரூபாய், லீக்ஸ் 1 கிலோகிராமின் உச்சபட்ச மொத்த...

வடக்கு மாகாண மக்களுக்கு குமார் சங்கக்கார நிதியுதவி!

வடக்கு மாகாண மக்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண மக்களுக்காக நிதியுதவி வழங்கியுள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் குமார் சங்கக்கார 1.6 மில்லியன் ரூபாய் நிதியை வழங்கிவைத்தார். பத்தரமுல்லையிலுள்ள வட மாகாண ஆளுநர் உப காரியாலத்தில் இந்தச்சந்திப்பு இடம்பெற்றது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து குமார்...
Ad Widget

தாய்நாட்டுக்கு வருகை தர எதிர்பார்த்துள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் விடுக்கும் வேண்டுகோள்!

கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிக்கும் வரை தாம் வாழும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு தாய்நாட்டிற்கு வருகை தருவதற்காக எதிர்ப்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டினுள் வைரஸ் வருவது மற்றும் பரவுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வருகை தருவதை முழுமையாக...

மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு என்ற செய்தி எங்களை வருத்தமடைய வைத்துள்ளது – UNRC

யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை பெற்ற குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பளித்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தி தங்களை மிகவும் வருத்தத்திற்குள்ளாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 வயது குழந்தை இரு இளைஞர்கள் உட்பட 8 பேர் படுகொலை செய்த...

ஊரடங்குச் சட்டத்தினை மீறிய 25 பேர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறி குற்றச்சாட்டில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊரடங்கு தளர்த்தப்படாத நிலையில் காரணங்கள் எவையுமின்றி வீதிகளில் நடமாடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி விசேட செயலணி தனது பணிகளை ஆரம்பித்தது

கொரோனா வைரஸ் காரணமாக ஆபத்தை எதிர் நோக்கியுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒட்டுமொத்த மக்கள் வாழ்வினையும் உரிய முறையில்நடாத்திச் செல்வதற்கு அத்தியாவசியமான பொதுச் சேவைகளை வழங்குதல், வழிநடாத்தல்,ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிமேதகு ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களினால்நியமிக்கப்பட்ட விசேட செயலணி தற்போது தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. கௌரவ பிரதம அமைச்சர் அவர்களின் முழுமையான கண்காணிப்பின்...

சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு Working Capital தேவைக்காக 4 வீத வட்டியுடனான கடன்!!

மத்திய வங்கியால் 24.03.2020 வெளியிடப்பட்ட சுற்று நிருபம் இது. சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு Working Capital தேவைக்காக 4 வீத வட்டியுடனான கடன்களை 6 மாதம் வட்டியின்றியதாகவும் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது அதற்கான விண்ணப்பங்களை 30.4.2020 வரை வழங்க வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. கிடைக்கும் விண்ணப்பங்களை 45 நாட்களுக்குள் இறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்று நிருபத்தினை பார்வையிடுவதற்கு

நாட்டில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஊரடங்கு அமுலில் இருள்ள காலப்பகுதியில் எக்காரணங்கள் கொண்டும் வெளியில் வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. கடுமையாக ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. திறக்கப்பட்ட மருந்தகங்கள் , பலசரக்கு கடைகள் அனைத்தையும் மறு அறிவித்தல் வரும் வரை மூடுமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே கொண்டுவந்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான செயலணி...

அரச துறை ஊழியர்களது ஏப்ரல் சம்பளம் 10ஆம் திகதிக்கு முன் வழங்கப்படும்!!

அரச துறை உத்தியோகத்தர்களில் ஏப்ரல் மாத சம்பளம் வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்டும் என்று திறைசேரியின் செயலாளர் அறிவித்துள்ளார். அரச துறை உத்தியோக்கத்தர்களின் ஏப்ரல் மாதம் சம்பளம் வரும் 7 ஆம் திகதி என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கோரோனா வரைஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டத்தால் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த...

யாழ்.போதனா வைத்தியசாலை மாதாந்த கிளினிக் செல்லும் மக்களுக்கான அறிவித்தல்!

யாழ்.போதனா வைத்தியசாலை மாதாந்த கிளினிக் ஊடாக பயன் பெறும் யாழ்.தீவக மக்கள் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கொரோனோ தொற்று தாக்கம் காணரமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் நோயாளர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்றவர்கள் எதிர்நோக்கும் பாதிப்பையடுத்து யாழ் போதனா வைத்தியசாலை...

யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கே கொண்டு வந்து பொருள்கள் வழங்கும் வணிக நிலையங்களின் விவரம் வெளியீடு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உலர் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் விவரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருள்கள் மற்றும் மருந்துகள் தொடர்பில் தொலைபேசி ஊடாக ஓடர் வழங்கினால் வீடுகளுக்கு கொண்டு அவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ்...

மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக பிரகடனம்!

எதிர்வரும் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னரும் இதுபோன்றதொரு காலப்பகுதி அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கான வேலைத்திட்டம்

கோவிட் 19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசியமான மருந்துப் பொருட்களைச் சிரமமின்றி பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றைத் தயாரிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனஞ் செலுத்தியுள்ளது. அத்தியாவசிய பொதுச் சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடாத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின் தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் மற்றும்...

அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் தொடர்பாக போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் : கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் தொடர்பாக போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பிரதம அமைச்சர் மஹிந்த அவர்கள் சமூக ஊடகங்களிடம் வேண்டிக்கொள்கிறார். கோவிட் 19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதுடன், மக்களுக்கு அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் தொடர்பாக போலியான தகவல்களை சமூகமயப்படுத்துவோருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக கவனஞ்...

தமிழ் ஊடகவியளார் கவனத்திற்கு!

பதிவு செய்வதற்கு

வடக்கு மாகாணத்துக்கான விசேட நடைமுறைகள் அறிவிப்பு

ஊரடக்கு வடக்கில் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ஆளுனரின் பணிப்பில் அரசாங்க அதிபர்கள் கட்டளைத்தளபதி பொலி அதிகாரிகள் சுகாதரத்துறையினர் அனைவரும் கலந்துகொண்டு நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன வடக்கு மாகாணத்துக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள் உள்ளுர் பலசரக்கு கடைகள் திறக்கலாம் கடையை சுற்றியுள்ள மக்கள் வாகனத்தில் செல்லாமல் ”நடந்து” சென்று...

சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு 4 வீத வட்டியில் கடன் வழங்க அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு Working Capital தேவைக்காக 4 வீத வட்டியில் கடன் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான வட்டியை 6 மாதத்திற்கு நிறுத்திவைக்கவும் அறிவுறுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் மத்திய வங்கியால் வழங்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.  இதன்படி அதற்கான விண்ணப்பங்களை 30.4.2020  வரை...

மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி சேவைகள் மற்றும் திறைசேரி ஆகியவும் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டது.

மத்திய வங்கி, வணிக வங்கிகள், காப்புறுதி சேவைகள் மற்றும் திறைசேரி ஆகியவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், அவற்றின்...

48 மணித்தியாலங்களில் நாட்டில் கோரோனா தோற்றுள்ள எவரும் இல்லை!!

நாட்டில் இன்று (மார்ச் 26) வியாழக்கிழமை மாலை 4.45 மணிவரையான 48 மணிநேரத்தில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார். நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 102 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பெற்று...

மிக அவசிமின்றி யாரும் வெளியில் செல்ல அனுமதி இல்லை – பிரதிப் பொலிஸ் மா அதிபர்!!

ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் மிக அவசர தேவையின்றி வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை என்றும், ஒரு பிரதேசத்திருந்து இன்னொரு பிரதேசத்திற்கு செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்hறு தெரிவித்தார். ‘ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் ஒரு...
Loading posts...

All posts loaded

No more posts