Ad Widget

வடக்கு மாகாணத்துக்கான விசேட நடைமுறைகள் அறிவிப்பு

ஊரடக்கு வடக்கில் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ஆளுனரின் பணிப்பில் அரசாங்க அதிபர்கள் கட்டளைத்தளபதி பொலி அதிகாரிகள் சுகாதரத்துறையினர் அனைவரும் கலந்துகொண்டு நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

வடக்கு மாகாணத்துக்கு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகள்

  1. உள்ளுர் பலசரக்கு கடைகள் திறக்கலாம் கடையை சுற்றியுள்ள மக்கள் வாகனத்தில் செல்லாமல் ”நடந்து” சென்று வாங்கலாம்.
  2. வெதுப்பங்கள் இயங்கலாம். உற்பத்திகளை வீடுவீடாக வாகனங்களில் கொண்டு சென்று விற்கலாம்
  3.  பல்பொருள் அங்காடிகள் திறக்க முடியாது 500 ரூபா 1000 ரூபா பொதிகளாக்கி வீடுவீடாக சென்று விநியோகிக்கலாம்
  4. கடலில் மீன் பிடிக்க அனுமதி. மீன் பிடித்து வீடுவீடாக கொண்டு சென்று விற்கலாம்.மீன்சந்தைகள் கூட முடியாது.
  5. அரிசி உற்பத்திக்காக மட்டும் ஆலைகள் இயங்கலாம்.வெளிமாவட்டத்தில் இருந்து அரிசி  விநியோம் செய்யப்படலாம்.
  6. மரக்கறிகளும் ”உள்ளுர் வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்பட்டு” கொண்டு சென்று விற்கலாம். சந்தைகள் திறக்கப்பட மாட்டாது.
  7. ஐஸ் கட்டி தொழிற்சாலைகள் இயங்கி மீன்பிடிக்கு தேவையானவைற்றை மட்டும் உற்பத்தி செய்யலாம்
  8. மருந்தகங்கள் திறக்கலாம் உரிய கிளினிக்கொப்பியுடன் சென்று வாங்கலாம்
  9. நோயாளர்கள் கிளினிக்கொப்பியுடன் அருகில் உள்ள வை்த்திய சாலைக்கு செல்லலாம்
  10. அனைத்து நடவடிக்கைகளிலும் நோய் தொற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்

Related Posts