பாதுகாப்பு அமைச்சின் செயலர் கிளிநொச்சிக்கு விஜயம்!

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன இன்று (17-04-2020) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவருடன் விமானப்படைத் தளபதியும் வருகைதந்திருந்தார். இன்று காலை பலாலி விமான நிலையத்திற்கு விசேட விமானம் மூலம் விஜயம் சென்ற இவர்கள் அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சி இரணைமடு நெலும் பியச மண்டபத்திற்கு வருகை தந்திருந்தார்கள்....

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலம் நீடிப்பு

கோவிட் – 19 தொற்று நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அரச சேவைகள் சீராக ஆரம்பிக்கப்படும் வரை காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை நீடிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீர, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 10 ஆம் திகதி முதல் சாரதி அனுமதிப்பத்திரம் காலவதியாகும் சாரதிகள், அதனை புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 15 ஆம்...
Ad Widget

யாழில் சரியான நிலமை ஏற்படும் வரை ஊரடங்கு தொடரும் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

“கோரோனா வைரஸ் தாக்கம் அபாயம் உள்ள மாவட்டங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று. இங்கு அதிகளவான மக்கள் வசிக்கின்றனர். இந்த ஆபத்தான நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டுமாயின் சரியான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டும். அதனால் சரியான நிலமை ஏற்படும் வரை ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவேண்டியுள்ளது” இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார். பாதுகாப்புத்...

கோப்பாயில் இரு நாட்களில் 50 பேர் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய குற்றச்சாட்டில் கடந்த இரு நாட்களில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியமை மற்றும் வியாபார நடவடிக்கைகளில் உரிய அனுமதியின்றி ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் குறித்த 50 பேரும் கைது செய்யப்பட்டதாக...

யாழில் 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே கொரோனா தொற்றியது- வைத்திய பணிப்பாளர் அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் யாழில் வேறுவழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சும், பொறுப்புவாய்ந்த சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாகச் செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்....

போக்குவரத்து சேவையை 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த தீர்மானம்!

அரச, தனியார் போக்குவரத்து சேவையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் மாத்திரம் இந்த சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து அமைச்சில் இன்று(வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போதே குறித்த...

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்பாணம் விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன யாழ்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். இவருடன் விமானப்படை தளபதி எயா ர்மார்சல்சுமங்கல டயஸ் ஆகியோரும் வந்திருந்தனர். வடக்கில் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக யாழிற்கு வருகை தந்துள்ள இவர்கள் பலாலி விமான படை தளத்தில் முப்படையினர் போலீசார் மத்தியில் பாதுகாப்பு...

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து மீள் பரிசீலனை வேண்டும் என வலியுறுத்து!

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். தொற்று நோயியல் நிபுணர்கள், விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைப்பெற்று பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பான முடிவுகளை அரசாங்கம் எடுக்க...

சண்டிலிப்பாயில் 16 பேரிடம் சோதனை; ஒருவருக்கும் பாதிப்பில்லை

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட 15 பேரிடமும் காரைநகரைச் சேர்ந்த ஒருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது. இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ்...

36 வகை பயிர்ச் செய்கைக்கு 4 சதவீத வட்டியில் 5 லட்சம் ரூபாய்வரை விவசாயக் கடன்

புதிய விரிவான (நவ சபிரி) கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 4 சதவீத வட்டியின் அடிப்படையில், 36 வகையான பயிர்களை பயிரிடுவதற்காக ரூபா 5 இலட்சம் வரையான வங்கிக் கடன் வழங்கப்படவுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் விடுக்கப்பட்டள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அச வங்கிகள் மூலம் வழங்கப்படவுள்ள இந்தக் கடனின் மீளச் செலுத்தும்...

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு தளர்த்த உடனடிச் சாத்தியமில்லை!

“யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்த தற்போது சாத்தியமில்லை. வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த 4 மாவட்டங்களிலும் அடுத்த வாரம் முதல் ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க முடியும் என்று பரிந்துரைகளை வழங்கவுள்ளோம். அதுதொடர்பில் மாவட்டச் செயலாளர்களுடன் பேச்சு நடத்தப்படவுள்ளது” இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடாது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறைவடைந்துள்ளதை கருத்தில் கொண்டு ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ஆனந்த இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “ “கொவிட் -19” எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் ஏனைய நாடுகளில்...

பலாலி முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது?- அங்குள்ளவர்களே பொறுப்பு- சத்தியமூர்த்தி

தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்பாடாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பார் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர்...

பிரதம அமைச்சர் அவர்கள் எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்தில் இணைந்துக் கொண்டார்

பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெலியத்தை அபிநவாராமை விகாரையில் நேற்று (2020.04.15) எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்தில் இணைந்துக் கொண்டார். முற்பகல் 09.17 எனும் எண்ணெய் தேய்ப்பதற்கான சுபநேரத்தில் அபிநவாராமாதிபதி போலானே ஆனந்ததேரர் அவர்களினால் பிரதம அமைச்சர் அவர்களுக்கு சம்பிரதாயப்படி எண்ணெய் தேய்க்கப்பட்டது. சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைபிடித்து இந்த நிகழ்வில் ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள், பாராளுமன்ற...

ஜனாதிபதி செயலணி – ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் அதிகாரிகளுக்கிடையில் சந்திப்பு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப் நிறுவனம்) அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (2020.04.15) பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. கோவிட் 19 வைரஸ் நிலைமை காரணமாக உலகம் முழுவதும் தேவைப்படும் பாதுகாப்பான ஆடைத் தயாரிப்புகளுக்கு (Personal protective Equpments ) காணப்படும் கேள்விக்கு ஏற்ற வகையிலான...

அரியாலையைச் சேர்ந்த வயோதிபர்கள் இருவருக்கே கோரோனா வைரஸ்!!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்களில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளதாக நேற்று அடையாளம் காணப்பட்ட இருவரும் முதியவர்களான ஆணும் பெண்ணும் என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அரியாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணுக்கும் 61 வயதுடைய பெண்ணுக்குமே கோரோனா வைரஸ் தொற்றுள்ளதாக பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது. இவர் இருவரும் கடந்த மார்ச்...

ரிசாட்டின் சகோதரருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு !!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தகுதி தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உயிர்த்த...

19 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு 10 மணிநேரம் தளர்வு

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் ஏனைய 19 மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை ஏப்ரல் 16ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன், காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மாலை 4 மணிக்கு...

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கோரோனா வைரஸ் உறுதி!!

யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (ஏப்ரல் 15) புதன்கிழமை 23 பேருக்கு கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட 4 பேர் பலாலி தனிமை படுத்தப்பட்ட நிலையத்தில் உள்ள...

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைப்பதில் சிரமம்

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து சர்வதேச நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 5000 பேரளவில் இலங்கைக்கு வருவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் எனினும் தூதரகங்களின் மூலமாக அவர்கள் குறித்து ஆராய்வதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. 900 இலங்கையர்களை விரைவில் வரவழைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அரசாங்கம் கூறுகின்றது. வெளிநாடுகளில் பணிபுரியும், கல்விகற்கும் இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு...
Loading posts...

All posts loaded

No more posts