யாழில் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்தனர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 21 பேரில் 6 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக இரணவில வைத்தியசாலையில் இருந்து வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்புகின்றார் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார். இந்நிலையில் ஏற்கனவே 5 பேர் குணமடைந்துள்ள நிலையில் வீடு திரும்பும் வவுனியாவைச் சேர்ந்தவருடன் சேர்த்து இதுவரை 6...

காரைநகரில் பேருந்து விபத்து!

காரைநகரிலிருந்து யாழ்ப்பாண நகரம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து கடலுக்குள் பாய்ந்ததில் நடத்துநர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காரைநகர்-யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
Ad Widget

மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மரம் ஒன்றில் ஏறிய சிறுவன் அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது. இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்தார். சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணையை கோப்பாய்...

முழங்காவில் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட மேலும் ஒருவருக்கு கொரோனா – வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், முழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்து நேற்று போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி. (மேற்படி பெண் கடந்த 11 ஏப்ரல் முழங்காவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டவர். அவருடைய...

200 நோய்களைக் கண்டறிந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் திறனைக் கொண்ட ரோபோ இலங்கையில் கண்டுபிடிப்பு!!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரோபோ (நெக்ஸ்ட்போட்ஸ்) இன்று நேற்றைய தினம் பிரதமருக்கு வழங்கிவைக்கப்பட்டது கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான பமுதிதா பிரேமச்சந்திராவினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ 200 நோய்களைக் கண்டறிந்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. தொற்றுநோய்களின் போது பயன்படுத்துவதற்காக இந்த ரோபோவை மேலும் மேம்படுத்த அரசு பரிந்துரை செய்துள்ளது.

இலங்கையை எவ்வாறு கொரோனா தாக்குமென்பதை தற்போது எதிர்வுகூற இயலாது என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் கொத்தணிமுறையில் பரவுதல் அல்லது பரவாதிருத்தல் தொடர்பில் தற்போதைக்கு எதிர்வு கூறமுடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது : கடற்படையினரில் தொற்றுக்குள்ளானவர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவர்களது குடும்பத்தினர் , பிரதேசவாசிகள் எதிர்காலத்தில் தொற்றுக்குள்ளாகக்...

சிவபூமி அறக்கட்டளைக்கு மற்றொரு விருது; சிறுவர் மனவிருத்திப் பாடசாலை தேசிய நிலையில் முதலிடம்

இலங்கை சமூக சேவைகள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட சுய அபிமானி 2019ஆம் ஆண்டு திட்ட ஆய்வில் வடமாகாணம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இயங்கும், கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளது. 2003ஆம் ஆண்டு கலாநிதி ஆறு.திருமுருகனால் நிறுவப்பட்ட இந்தப் பாடசாலை சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் மூன்று தடவை...

ஈபிடிபி பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு!!

சாவகச்சேரி பிரதேச சபையின் ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 7.30 மணியளவில் மறவன்புலவில் உள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்தோர், பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச சபையின் மறவன்புலவு வட்டார...

நாட்டில் கோரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – சீன பதில் தூதுவரிடம் ஜனாதிபதி

நாட்டின் கோரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு நாள்களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணங்களை விளங்கிக்கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹு வெயிடம் தெரிவித்தார். “இலங்கை சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக...

இணுவிலில் சட்டத்துக்கு புறம்பாக சிசுவை அகற்றி புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் ஜோடி கைது!!

இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் கருவில் வளர்ந்த சிசுவை குறை மாதத்தில் நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. அந்த சிசுவை அவர்கள் விடுதியின் முற்றத்தில் வெட்டிப் புதைத்துள்ளனர். யாழ்ப்பாணம் மூத்த...

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை – வர்த்தமானி அறிவித்தல் இரத்து

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவிப்பில், மொத்த வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை 100 ரூபாய் ஆக இருந்தது, பக்கெட்டுகளுக்கு 105 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நுகர்வோர் அதிகார சபையினால் குறித்த வர்த்தமானியை இரத்து செய்யும் வகையிலான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நினைவுகூரல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுகூரல் நிகழ்வு யாழில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத் துறைக்காக உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர். ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005...

அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும்- தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிவிப்பு

கொவிட்-19 அபாயத்தை முறையாக எதிர்கொள்வதற்கு பொது நலனை முன்னிறுத்த அரசாங்கத்திடம் 8 கேள்விகளுக்கான பதிலை கேட்டுநிற்கிறது தமிழ் சிவில் சமூக அமையம். தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப் பேச்சாளர்களான அருட்பணி வீ. யோகேஸ்வரன் மற்றும் கலாநிதி குமரவடிவேல் குருபரன் ஆகியோரினால் இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த அறிவிப்பில், “ஒரு பொது சுகாதார அபாயக் காலப்பகுதியில்...

இன்று இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இன்று இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் நான்காம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு முதல்...

யாழ்ப்பாண படையினர் கிருமி ஒழிப்பு நடவடிக்கையில்!!

covid-19யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 52 மற்றும் 55 ஆவது படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினரால் சுன்னாகம், கொகுவில், சன்னகன்னை, தெல்லிப்பளை, நல்லூர், உடுவில், திருநல்வேலி, வல்வட்டிதுறை, கொடிகாமம், சாவகச்சேரி, அச்சுவேலி, நெல்லியடி, பளை, கோயில்வயல், ஐய்யகச்சி, முகாவில், முல்லியன், அம்பன், வெத்திலைகேணி, போக்கருப்பு மற்றும் மருதங்கேனி பிரதேசங்களில் பொது இடங்களில்...

யாழ். மாநகர சபை அமர்வு: தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி வெளிநடப்பு

யாழ். மாநகர சபையின் அமர்வு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. மாநகர சபையில் உள்ள சபை மண்டபத்தில் சமூக இடைவெளியைப் பேணி கூட்டத்தினை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமர்வு இடம்பெற்றுள்ளது. கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, அதிகாரம் இல்லாத குறித்த கூட்டத்தில்...

வட்டுக்கோட்டையில் ஊரடங்கு வேளையில் 4 பாடசாலைகளில் திருட்டு; மூவர் சிக்கினர்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 ஆரம்ப பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரை வரும் மே 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட திருடப்பட்ட பொருள்கள் நீதிமன்றில் சான்றுப்பொருள்களாக பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டன. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை...

யாழ்ப்பாணம் உள்பட 21 மாவட்டங்களில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை வெள்ளிவரை தொடரும்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய 21 மாவட்டங்களில் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் நேற்று (28) காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. தினமும் அதிகாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும்...

கடன் தவணைப் பணம் வசூலிப்பதில் நிதி நிறுவனங்கள் – வாழ்வாதாரம் இல்லாதோர் பாதிப்பு!

நுண்நிதக் கடன்கள் மற்றும் நிதி நிறுவன கடன்களை வசூலிப்பதற்கு ஊழியர்கள் வீடுகளுக்கு வந்து நெருக்கடிகளை தருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால பகுதியில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மக்கள் பெற்ற கடனுகளுக்கான தவணை கட்டணங்களை மூன்று மாத காலத்திற்கு மீள பெற வேண்டாம் என அரசினால் மத்திய வங்கி ஊடாக...

நான் வாழப்போகும் சில நாட்களாவது மகனுடன் வாழ விடுங்கள்!- முருகனின் தாய்!!

“முருகனின் நினைவோடே அவரது தந்தை மரணித்துவிட்டார். நான் வாழப்போகும் சில நாட்களாவது எனது மகனோடு வாழ வேண்டும் என ஏங்குகிறேன்” என தமிழக சிறையில் வாடும் முருகனின் தாயார் தெரிவித்துள்ளார். இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஈழத் தமிழரான முருகனின் தந்தையார் நேற்று அதிகாலை சாவகச்சேரி வைத்திசாலையில் காலமானார். பளை...
Loading posts...

All posts loaded

No more posts