இலங்கை மத்திய வங்கி கொவிட் – 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள், தனிநபர்களின் வசதிக்காக முடிவுத் திகதி நீடிப்பு

இலங்கை மத்திய வங்கி கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் வசதிக்காக முடிவுத் திகதியை நீடித்துள்ளது. கொவிட் - 19 பரம்பலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி கடன் பிற்போடுதல் மற்றும் இரண்டு மாத தொழிற்படு மூலதனத்திற்காக...

குடத்தனையில் மணல் கடத்தல் விவகாரம்; 4 பெணளுக்கும் பிணை!!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பெண்களையும் பிணையில் விடுவித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. “மணல் கடத்தல் கும்பல்களை நாம் ஆதரிக்க முடியாது. அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் எந்தக் குற்றமும்...
Ad Widget

பருப்பு, ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நீக்கம்!!

மைசூர் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றின் அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் நீக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் சாந்தா திசானநாயக்க கையொப்பத்துடன் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய மைசூர்...

அல்லைப்பிட்டியில் பற்றைக்கு விசமிகளால் தீவைப்பு!!

யாழ்ப்பாணம் தீவகம் – அல்லப்பிட்டிப் பகுதியில் பாடசாலைக்கு அருகிலுள்ள பற்றைக் காணியில் விசமிகளால் மூட்டப்பட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் மாநகர தீயணைப்பு பிரிவு மற்றும் அப்பகுதி பொது மக்கள் இணைந்து தீயினை அணைத்துள்ளனர். அல்லப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி நீண்ட காலமாக துப்பரவு...

குடத்தனை சம்பவத்தில் காயமடைந்த பெண்களிற்கு உணவு கொண்டு சென்ற 2 பெண்கள் கைது!

வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று (1) மாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று குடத்தனையில் மணல் கடத்தல்காரர் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்ய பொலிசார் முயன்றபோது, பெண்கள் ஒன்று சேர்ந்து அதற்கு இடையூறு ஏற்படுத்தினர். பொலிசாரால் பெண்கள் தாக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். எனினும், பொலிசார் அதை மறுத்தனர். இந்த நிலையில்,...

ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர ஏனைய 21 நிர்வாக மாவட்டங்களிலும் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு அமுல்செய்யப்பட்டு வருகின்றது. அந்த 21 மாவட்டங்களிலும் நேற்று இரவு 8.00 மணிக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் திங்கட் கிழமை அதிகாலை 5.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. பின்னர் அன்றைய தினம் முதல் இரவு 8.00 மணியிருந்து...

யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முழங்காவில் முகாமைச் சேர்ந்த மற்றொருவருக்கு கோரோனா உறுதி!

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். தென்னிலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு கோரோனா தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

தரம் 10 – 13வரை முதல்கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்கத் திட்டம்!!

நாடுமுழுவதும் பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக ஆரம்பிக்க கலந்துரையாடப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் -10 தொடக்கம் தரம் – 13 வரை முதல் கட்டமாக ஆரம்பிக்கத் திட்டமிடப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம். ரத்நாயக்க, கொழும்பு ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார். “கோரோனா தொற்றுப் பரவலைத் தொடர்ந்து மார்ச் மாதம் 13ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளை...

முகக் கவசம் அணிந்தால்தான் ‘ஊரடங்கு பாஸ்’ செல்லுபடியாகும்!!

பொலிஸ் அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்கள் சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக் கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும்...

இலங்கை பின்பற்றி வந்த பொருளாதாரக் கொள்கையிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்

இது வரை காலமும் உலகம் அங்கீகரித்த திறந்த பொருளாதாரக் கொள்கையின் ஆற்றலை கோவிட் தொற்று கேள்விக்குட்படுத்தி வருகிறது. அத்துடன் கோவிட்-19 தொற்றுநோய் இலங்கை பின்பற்றி வந்த பொருளாதாரக் கொள்கையிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற பாடத்தைக் எமக்கு கற்பித்து வருகிறது என்று பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....

கடந்த காலத்தின் அனைத்து கஷ்டமான சந்தர்ப்பங்களையும் உழைக்கும் மக்களுடன் சேர்ந்து வெற்றிகொண்ட நாம் கொவிட் 19ஐயும் வெற்றிகொள்வோம்

வரலாறு நெடுகிலும் நாம் முகம் கொடுத்த,வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் நேரடி பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களும் முன்னிற்பவர்களும் நாட்டின் உழைக்கும் மக்களாகும். கடந்தகாலத்தின் அனைத்துகஷ்டமான சந்தர்ப்பங்களையும் உழைக்கும்மக்களுடன் சேர்ந்து வெற்றிகொண்ட நாம் கொவிட் 19ஐயும்வெற்றிகொள்வோம் என்பது உறுதி. மே தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளியிட்டுள்ள இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய...

யாழ்.மாவட்ட மக்களுக்கு 940 மில்லியன் பெறுமதியான நிவாரணம் வழங்கப்பட்டது- அரச அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் யாழ். மக்களுக்கு 940 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன், குறித்த உதவியானது அரசாங்கம், தன்னார்வ தொண்டு...

யாழில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் மேலும் மூவர் குணமடைந்தனர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 22 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த மூவர் யாழ்ப்பாணத்தில் அவர்களது வீடுகளுக்குத் திரும்புகின்றனர் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிட்டார். இந்நிலையில் ஏற்கனவே 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்று வீடுதிரும்பும் 3 பேரையும் சேர்த்து...

வடமராட்சி கிழக்கில் மக்கள் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல்!!

வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் பொலிஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்குச் செல்ல பயந்த நிலையில் தமது வீடுகளில் தங்கி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்று. நேற்று வியாழக்கிழமை...

ஊரடங்குச் சட்ட காலத்தில் பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 20ஆம் திகதியிலிருந்து இன்று மே முதலாம் திகதிவரை பொலிஸாருக்கு எதிராக 9 முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து...

சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் ரிஐடியினர் விசாரணை!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கொக்குவிலில் உள்ள சட்டத்தரணி மணிவண்ணனின் வீட்டுக்கு நேற்று (ஏப்ரல் 30) பிற்பகல் 2 மணியளவில் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சில ஆவணங்களைக் காண்பித்து சுமார் 30 நிமிடங்கள் குறிப்பெடுத்துச் சென்றுள்ளனர். மாவீரர் தினம் அனுசரித்தமை...

மூன்று மாத விடுவிப்பை கோரியுள்ளார் வடக்கு ஆளுநர் சார்ஸ்!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுப்புக் கோரியுள்ளார் என்று அறிய முடிகிறது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளார். இன்று மே முதலாம் திகதி தொடக்கம் வரும் மூன்று மாதங்களுக்கு அவர் இந்த விடுப்பைக் கோரியுள்ளார். அத்துடன், ஆளுநரின் பணிகளை ஒழுங்குபடுத்தி நிர்வாகத்தை முன்னெடுக்க வடக்கு மாகாண...

யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க ஒப்புதல்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாயால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கோதுமை மாவுக்கு பிறிமா நிறுவனத்தால் வழங்கப்பட்ட 3 ரூபாய் விலைக்கழிவு இடைநிறுத்தகப்பட்ட நிலையில் இந்த அனுமதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 450 கிராம்...

சிசுவை அகற்றிப் புதைத்த பெண், இளைஞனுக்கு விளக்கமறியல்!!

மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து சட்டத்துக்குப் புறம்பாக சிசுவை அகற்றி மண்ணில் புதைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் முன்வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார். அத்துடன், பெண்ணை வரும் மே 4ஆம் திகதிவரையும் அவருடன் தொடர்பிலிருந்தார் என்ற...

யாழில் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்தனர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 21 பேரில் 6 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக இரணவில வைத்தியசாலையில் இருந்து வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீடு திரும்புகின்றார் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார். இந்நிலையில் ஏற்கனவே 5 பேர் குணமடைந்துள்ள நிலையில் வீடு திரும்பும் வவுனியாவைச் சேர்ந்தவருடன் சேர்த்து இதுவரை 6...
Loading posts...

All posts loaded

No more posts