- Monday
- May 4th, 2026
யாழ். பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும் நேற்று மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தொற்றுச் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த பரீட்சைகள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும்...
தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பதை நிறுத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பசில் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ராஜபக்ஷவினரின் நோக்கம்...
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் மாத்திரம் இதுவரையில் 519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை 800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக கடந்த மார்ச் முதல் ஜுலை மாதம் வரை வருகைதந்த அவர்களின் உறவினர்களே இவ்வாறு...
வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள், மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து என்.ஐீ.ரி என்ற அநாமதேய அமைப்பு அநாமதேய துண்டுபிரசுரம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளிலேயே குறித்த துண்டுப்பிரசுரங்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவு பதிவாகி வருகின்றன. மேலும் இத்தகைய சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள்...
தேர்தல் திணைக்களத்துடன் இணைந்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று கோரோனா கட்டுப்பாட்டு செயலணியின் பிரதிநிதி பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர், ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்தினார். அதன்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்க இன்றைய...
பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதுக்க நேற்று(ஞாயிற்றுக்கிழமை) பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இந்த நிலத்திற்குள் நுழையும்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் முதலாம் படி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.யமுனானந்தா எச்சரிக்கை செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வடமகாணாத்தில் கொரோணாவின் இரண்டாம் அலை பரவகடகூடிய ஏது நிலை உள்ளது. மக்கள்...
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கும் முப்படை மற்றும் பொலிஸார் உள்பட சுகாதார சேவையினருக்கு தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க இறைவனை வேண்டி 108 நாள்கள் விரதமிருந்த 81 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் ஒருவர், தனது நேர்த்தியை நிறைவு செய்யும் வயைில் தலை முடியை காணிக்கை செய்துள்ளார். யாழ்ப்பாணம் கரவெட்டிப் பகுதியைச்...
குப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வெடிபொருள் வெடித்ததில் கைகளில் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கீரிமலை கோவில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குப்பைக்குள் காணப்பட்ட பற்றியுடன் கூடிய வீரியம் குறைந்த வெடிபொருள் ஒன்றை நால்வரும் கண்டெடுத்துள்ளனர்....
அரச பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் பாடசாலைகள், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள விசேட...
உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், குரும்பசிட்டி வசாவிளான் பகுதியைச் சேர்ந்த அனோஜன் கஜேந்தினி (வயது 17) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். மேலும் அவரது கணவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார். உரும்பிராய் சந்திக்கு அண்மையில், இவர்கள்...
கொரோனா வைரஸ் தொற்று சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் அதிகாரி வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களில் 500 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது....
முன்னாள் கமத்தொழில் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அங்கஜன் இராமநாதன் அவர்களது தென்மராட்சி இளைஞர் அணியினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தற்காலிக வீடு ஒன்று சாவகச்சேரி மந்துவில் மேற்கு பகுதியில் J/346 கிராம சேவகர் பிரிவில் அமைத்து கொடுக்கப்ட்டது. அந்த வீட்டினை கௌரவ அங்கஜன்...
ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் வடக்கு பகுதியில் இராணுவம் இருப்பதைப் பற்றி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள ஒரு மின்னஞ்சல் அறிக்கையில், வடக்கில் படையினரை நிலைகொள்ளச் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என அவர்...
வடமாகாண கல்வியமைச்சின் கீழ் உள்ள பாசாலைகளில் கற்பித்தல் பணியில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்களை விசேட மருத்துவ குழுவின் முன் பரிசோதிக்க மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் உள்ள 184 ஆசிரியர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அவர்கள் தொடர்பாக கல்வியமைச்சுக்கு நெருக்கடிகள்...
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தின் ஆலோசகர் மற்றும் மாரவில புனர்வாழ்வு நிலையத்தில் தொற்றுக்குள்ளான பெண் ஆகியோர் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தியமை கண்டறியப்பட்டிருப்பதாக தொற்று நோய் பிரிவு தலைவர் கூறியுள்ளார். பஸ்களில் பயணித்த குறித்த ஆலோசகருடன் தொடர்புடையோரை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் மாரவில் பிரதேசத்தில் கொரோனா தொற்றிற்கு உள்ளான பெண்...
கொரோனா வைரஸ் தொற்று சமூக பரவலாக மாற்றமடைவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். “அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு மைய ஆலோசகர்கள் 8 பேரை விடுமுறையில் இருந்து அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையம் கொரோனா சிகிச்சை நிலையமாகவும் மாற்றப்படவுள்ளது.” – என்றார். புனர்வாழ்வு மைய ஆலோசகருக்கு...
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் 08 ஆம் திகதியன்று குடும்பத்தில் ஏற்பட்ட தகராற்றினை தொடர்ந்து தனது 5 வயது சிறுமி மீது சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிசிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் – நுகர்வை ஒழித்தல் போன்றவற்றை அந்தப் பகுதி இராணுவ அலுவலகர் முன்னெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர்...
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் ஊழியர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்றையதினம் (வியாழக்கிழமை) உத்தரவிட்டது. அத்தோடு இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட கைலாயம் அல்லது ஜெகன்...
Loading posts...
All posts loaded
No more posts
