திருக்கோணேஸ்வரத்தை தாரைவார்க்கப் போவதில்லை, பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார் சம்பந்தன்

தமிழர் தலைநகரமான திருகோணமலையையும் திருக்கோணேஸ்வரத்தையும் ஒருவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருக்கோணேஸ்வரம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்றும் பாடல்பெற்ற தளங்களில் ஒன்று எனவும் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன் இதற்கு பௌத்த மதத்தலைவர்கள் உரிமை கோரமுடியாது என்றும் தெரிவித்தார். கோணேஸ்வரம் ஆலயம் பற்றி வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய...

எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து! தேசிய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!!!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்து என தேசிய புலனாய்வு பிரிவு வழங்கிய எச்சரிக்கைக்கு அமைவாக அவருக்கான விசேட அதிரடிப்படை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று...
Ad Widget

வாள்வெட்டுக் கும்பலின் வீடொன்றில் இருந்து கைக்குண்டு, இராணுவச் சீருடைகள், வாள்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்கள் தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வீடு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. நீர்வேலி கரந்தனில் உள்ள அந்த வீட்டின் வாழைத் தோட்டத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள்...

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று!

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள்...

டிப்பர் வாகனம் மோதியதில் 18 மாடுகள் உயிரிழப்பு!

கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்துள்ளன. கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விசுவமடு பகுதியில் இருந்து 35 வீதியூடாக வேகமாக வந்த டிப்பர் வாகனம் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த மாடுகளை மோதித் தள்ளி விட்டு குறித்த டிப்பர் வாகனம்...

வடமாகாணத்தில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கமரா! கனரக வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு!-ஆளுநர்

வடக்கில் விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து அதிகாரிகள் செயற்படவேண்டும். என பணித்திருக்கும் வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சாள்ஸ், பிரதான வீதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தவதுடன், கனரக வாகனங்கள் பயணிப்பதற்கான நேர கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஆளுநர் பொறுப்புவாய்ந்த தரப்புக்களுக்கு பணித்துள்ளார். வட மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் வீதி விபத்துக்கள் மற்றும் சட்ட...

தனு ரொக், விக்டர் டிலான் இருவரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் நீதிமன்றங்களில் விக்டர் டிலான் மற்றும் தனு ரொக் என்பவரும் கைது சந்தேகத்தின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பொலிஸ் நிலைய இரகசிய போலிஸார் நவாலியில் நேற்று மாலை முன்னெடுத்த நடவடிக்கையின் போது, அவர்களைக் கண்டுவிட்டு தப்பி ஓட முற்பட்ட போதே இருவரும் கைது செய்யப்பட்டனர். வீடொன்று...

யாழ்.செயலக ஊழியர் மீது வாள்வெட்டு; மல்லாகத்தில் ஐவர் கைது

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரின் நடவடிக்கையில் சந்தேக நபர்கள் நேற்றையதினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாகத்தில் வைத்து சந்தேக நபர்கள் ஐவரும் கைது...

கடலோரங்களில் பிதிர்க்கடன்களை செலுத்த அனுமதி!

ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. குளங்கள் மற்றும் கடலோரங்களில் தந்தையை இழந்த உறவுகள் அவர்களுக்கான வருடாந்த நினைவு கூரலையும் அதற்கான பிதிர்க் கடன்களையும் நிறைவேற்றி வருவது வழமை. ஆனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால்...

திருக்கோணேஸ்வரம் இந்து பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு- மேதானந்த தேரருக்கு அங்கஜன் கண்டனம்

திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் பற்றிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து மக்களின் வரலாற்றுத் தொன்மையான வழிபாட்டுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் பாடல்பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தை கோகர்ண விகாரை என தேரர் குறிப்பிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவர்...

நல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது என்கிறார் மேதானந்த தேரர்- ஆதாரம் இருக்கிறதாம்!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி கோயில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவராலேயே கட்டப்பட்டதாக தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அநுராதபுர காலத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரை மீதே திருகோணமலை, திருக்கோணேச்சர ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த அவர், இவற்றுக்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். என்றபோதும்...

சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் முறையை மாற்றி அவற்றை உயர் மட்டத்தில் நடத்தி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் -பிரதமர் மஹிந்த

கடந்த அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு உண்மையாகவே சுயாதீனமா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால் மிகவும் உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (2020.07.06) காலை வீரக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்...

யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த சிறிதேவி ரயில் தடம்புரள்வு!!

வவுனியாவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டமையினால் வடக்குக்கான தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. காங்கேசன்துறையிலிருந்து இன்று காலை கொழும்பு பயணித்த சிறிதேவி தொடருந்தே வவுனியா இரட்டைப் பெரியகுளத்தில் ரயில் பாதையை விட்டு விலகியதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதனால் வடக்குக்கான தொடருந்து சேவைகள் மதவாச்சியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலக தேர்தல் அலுவலகம் முன் ஊழியர் மீது வாள்வெட்டு!!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக இனம் தெரியாத நபர்களினால் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை பிரிவில் உத்தியோகத்தர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு அவரது மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது....

வெடிவிபத்தில் சிக்கிய முன்னாள் போராளி சாவு!!

நாட்டு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த தகவலை பளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இயக்கச்சியைச சேர்ந்த தங்கராசா தேவதாசன் (வயது-43) என்ற முன்னாள் போராளியே சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். கடந்த 3ஆம் திகதி மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப்...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அங்கஜன் சவால்!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் உறுதிப்படுத்தினால் தான் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த விடையத்தை நிரூபிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறினால் தேர்தலில்...

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி அவர்களில் 210 கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, குறித்த...

சிவாஜிலிங்கத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மல்லாகம் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணிக்கு அவரை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில், எதிர்வரும் 9ஆம் திகதி நாளை மானிப்பாய் நவாலி தேவாலயத்திற்கு முன்பாக...

யாழ். மாவட்ட வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேற்கண்ட...

காங்கேசன்துறை- மஹரகம வைத்தியசாலைக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மஹரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு புதிய போக்குவரத்து சேவை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். குறித்த புதிய பேருந்து நேற்று (திங்கட்கிழமை) இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மஹரகம வைத்தியசாலைக்கு செல்வோரின் தேவை கருதியே பிரதானமாக குறித்த புதிய பஸ்...
Loading posts...

All posts loaded

No more posts