- Saturday
- May 2nd, 2026
வடமராட்சி- பருத்தித்துறை பகுதியில் காணாமற்போயிருந்த இளைஞர் ஒருவர், கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (திங்கட்கிழமை) இரவு, 11மணியளவில் பருத்தித்துறை வல்புரம் குறிச்சிப் பகுதியில் அவர் மீட்கப்பட்டார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. பருத்தித்துறை- வல்லிபுரக்குறிச்சி, சிங்கைநகர் பகுதியிலுள்ள குறித்த வீட்டாருக்கு சொந்தாமாக பிறிதொரு இடத்தில்...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இணைய தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்றார். நிலவும் கொவிட்-19 தொற்று நிலைமையில் அமைச்சரவை கூட்டத்தின் நடைமுறை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் யோசனைக்கேற்ப இந்த அமைச்சரவை கூட்டம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்டது....
தென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின்போதே அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்கள் தென்னிந்தியாவில், ஒரு இலட்சத்துக்கும்...
வல்வெட்டித்துறையில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து அதனை அயலிலுள்ள வளவில் வீசிவிட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து தூக்கத்தால் திடீரென எழுந்த அந்த நபர், நெஞ்சு வலிப்பதால் குடிதண்ணீர் கேட்டுள்ளார்....
யாழ்ப்பாணத்திலுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்துக்குச் சென்று வருவதற்கு, உகந்த பாதை வசதிகள் இன்மையால் அசௌகரியமான நிலை காணப்படுகிறது. இயற்கை அனர்த்தம், புயல் அபாயம் போன்ற இடர்காலங்களின்போது, பொது மக்களுக்குத் தேவையான அவதானிப்புத் தகவல்களையும், தகுந்த முன்னெச்சரிக்கையையும் வழங்குவதில் யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்.மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களம் பெரும் பங்காற்றி வருக்கின்றது. ஆனால், அந்தத் திணைக்களத்துக்குச் செல்வதற்கு உகந்த...
கிளிநொச்சியில் இதுவரை 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் (திங்கட்கிழமை), கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலை...
காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ரன் கல்லூரியில் 20 சதவீத மாணவர் வருகையே காணப்படுகிறது. கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை (நவ.27) உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில்...
யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் முடக்கப்படும் என சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் அனைத்தும் தவறானவை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். அத்துடன், காரைநகரில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செய்யப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் பலருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே காரைநகர் பிரதேசம் மட்டும்...
மொரட்டுவ பகுதியில் இருந்து சாவகச்சேரி பகுதிக்கு தளபாட விற்பனைக்காக வந்த 10 பேர் சாவகச்சேரி சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொரட்டுவ பகுதியில் இருந்து மூன்று வாகனங்களில் தளபாடங்களுடன் வந்த 10 பேர் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி நின்று , கிராமங்களுக்குள் கால் நடையாக சென்று தளபாட விற்பனைகளை மேற்கொள்ள தயாராக இருந்துள்ளனர்....
காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது -19), மாசிலாமணி...
திவிநெகும நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று இந்தத் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்டது. திவிநெகும நிதியத்துக்குச் சொந்தமான 33 மில்லியன் ரூபாயை, 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூரைத் தகடுகளை வழங்க பசில் ராஜபக்ச முறைகேடாகப்...
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள நொதேர்ன் வைத்தியசாலை, யாழ்.வைத்தியசாலை மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுடன் இன்று தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி, மருத்துவர் பாலமுரளி தெரிவித்தார். இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தவிர்ந்த வேறு பணியாளர்களை கடமைக்கு அமர்த்தி மீளத்திறப்பதற்கு...
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் செயற்திறன்மிக்க தலைமையின் கீழ் கௌரவ பிரதமர் அவர்களின் வழிகாட்டலின் மூலம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற விஷேட 1 லட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கிராமிய வீதிகளை காப்பெற் வீதியாக மாற்றும் சிறப்பு வாய்ந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பாராளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளரும்...
இம்முறை வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்தும் போது கிராமிய குழுக்களினால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்தும் நடவடிக்கை, மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள்...
பலஸ்தீன மக்களுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பான சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினத்தை முன்னிட்டு செய்தியொன்றை வெளியிட கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தேசத்தை உருவாக்கும்போது, நக்பா மற்றும் பலஸ்தீனர்கள் தங்களது இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டனர். அதன்போது இடம்பெற்ற நகரம் மற்றும் கிராமத்தை அழிக்கும் பேரழிவின் எதிரொலியாக 1978ஆம் ஆண்டு ஐக்கிய...
மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ அஹமட் டிடி அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு இடையே கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசனை முத்தரப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக நாட்டிற்கு...
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் அவர்களுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் அவர்கள், கௌரவ இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியொன்றை கௌரவ...
'வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' அபிவிருத்தி செயல்திட்டத்தின் கீழ் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மாகாண மட்டத்தில் நடத்தப்படும் கூட்டம் (2020.12.14) தென் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் என கடந்த 27ம் திகதி முற்பகல் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் மற்றும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும்...
மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ராகமவில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளதுடன், மேலும் 43 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். எனினும் இந்த அனர்த்தத்தில்...
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது தாயார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.. அல்லைப்பிட்டி...
Loading posts...
All posts loaded
No more posts
