- Friday
- April 24th, 2026
அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்து உள்ளனர். அச்சுவேலி சந்தையில் இன்றைய தினம் (புதன்கிழமை) காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தவகையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (15) எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இந்தப் பட்டியல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச அலுவலகங்களுக்கு வாராந்தம் வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான சுற்றறிக்கை இன்று (புதன்கிழமை) இரவு வெளியிடப்படவுள்ளது. அரச சேவைகள், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய...
40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பலொன்று நாளையதினம் (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். எனினும் அந்தக் கப்பல் மூலம் கொண்டுவரப்படும் எரிபொருளை, மின்சாரம், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க...
நாட்டில் 11 நாட்களுக்குப் பின்னர் இன்று (புதன்கிழமை) முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முதன்மையாக வணிகங்கள், தகனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயு இருப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளுக்கு எரிவாயுவை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலின் எரிவாயு...
போதியளவு டீசல் இல்லாத பட்சத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் 20 வீதமே இன்று சேவையில் ஈடுபடுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். தற்போதைய நிலைமை காரணமாக இலங்கை...
இலங்கைக்கு எதிராக பல்லேகலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் பகல்-இரவு கிரிக்கெட் போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைமைப்படி (DLS) 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 301 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான, ஆனால் எட்டக்கூடிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 13ஆவது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 72...
விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 318 நபர்கள் மற்றும் 4 அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. எவ்வாறெனினும் இவ்வாறு தடை நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை....
மிகப்பெரிய விமான விபத்தை தவிர்ப்பதற்காக லண்டனில் இருந்து பயணித்த UL 504 விமானம் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. துருக்கிய வான்வெளியில் இருக்கும் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் UL 504 விமானம் நேருக்கு நேர் மோதுவதனை தவிர்ப்பதற்காக இவ்வாறு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 275 பயணிகள் மற்றும்...
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் தரப்பில் சுமார் 3,000 பிரித்தானிய தன்னார்வலர்கள் தற்போது போராடி வருவதாக ஜார்ஜிய தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் தற்போது 20,000 வெளிநாட்டு வீரர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன்படி, உக்ரேனிய கட்டளையின் கீழ் உள்ள மற்றொரு இராணுவப் பிரிவானது பெரும்பாலும் வெளிநாட்டினரை உள்ளடக்கியது. இதன்படி, தற்போது உக்ரைன் தரப்பில் சுமார் 3,000...
உள்ளக மற்றும் வெளியரங்குகளில் தொடர்ந்து முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம் தமக்கு அதிருப்தி அளிக்கிறது என்றும் மேலும் முகக்கவசம் அணிவது தற்போதைய நிலையில் ஆரோக்கியமானதாகவும் தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ நிபுணர் சங்கம் தொடர்ந்து பொதுமக்களிடம் முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம்...
மிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்குஅகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலைப்பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு இனங்காணப்பட்ட தொல்பொருள் இடத்தில் புதிதாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அப்பகுதி மக்கள்...
நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம், சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைப் பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது இவ்வாறு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்...
தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு, நாட்டின் பொருளாதாரம் உறுதித்தன்மைக்கு வருவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது பெரும் டொலர் நெருக்கடி மற்றும் கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான தனியார் கடனாளிகள் காரணமாக சிரமங்களை...
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. யூரோவுக்கு 40.7 சதவீதமும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக 39.8 சதவீதமும் ஜப்பானிய யெனுக்கு எதிராக 35.1 சதவீதமும் மற்றும் ஆஸ்திரேலிய டொலருக்கு எதிராக 43.1 சதவீதமும் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த...
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் பொது நிர்வாக அமைச்சினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. எனினும் அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமங்களையும் மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை நடத்துவதில் ஏற்படக்கூடிய சிரமங்களையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அரச...
உக்ரைனில் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். தனது தினசரி காணொளி உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டின் கிழக்கில் ரஷ்ய துருப்புக்களின் கைப்பற்றும் நடவடிக்கைகளை தமது ஆயுதப்படைகள் தடுத்து வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய முன்னேற்றத்தைத் தடுத்து...
நாடுகளுடனும் ரஷ்யா நல்லுறவைப் பேணி வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்தார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இளம் தொழில்முனைவோர்களுடன் அவர் வியாழக்கிழமை உரையாடினார். அந்த நிகழ்ச்சியில் இந்தியா, சீனாவுடனான ரஷ்யாவின் நல்லுறவு குறித்து பேசப்பட்டது. அப்போது விளாடிமீர் புடின் தெரிவித்ததாவது, இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷ்யா நல்ல உறவைப் பேணி வருவது குறித்து...
Loading posts...
All posts loaded
No more posts
