இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார்

ரஜினிகாந்த, கமல் ஹாசன், சுஜாதா, சரிதா, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நடிகர்-நடிகையரை அறிமுகப்படுத்தியதுடன் சமூக சீர்திருத்த கருத்துகளுடன் கூடிய கதையம்சத்துடன் அமைந்த பல புரட்சிப் படங்களை இயக்கியதன் மூலம் ‘இயக்குனர் சிகரம்’ என புகழப்பட்ட கே.பாலசந்தர் இன்றிரவு காலமானார். தஞ்சை மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி கிராமத்தில் 9-7-1930 அன்று பிறந்த கே.பாலசந்தர், மேடை நாடகத்...

இன்னும் ஒரு சமூக வலைத்தளம்

Face book போலவே இன்னும் ஒரு சமூக வலைத்தளம்(http://www.TSU.co) உருவெடுத்துள்ளது அதில் இணைந்து பங்களிப்பவர்களுக்கு பணமும் தருவதாக கூறுகிறார்கள் . TSU நிறுவனம் 90 வீதமான வருமானத்தினை பயனாளர்களுக்கு பகிர உள்ளார்களாம்.ஒக்டோபர் 2014 இல் இருந்து புதிய மெருகூட்டப்பட்டு இந்த தளம் பல மில்லியன் பயனாளர்களை தாண்டிவிட்டதாம் Face book இதை செய்தால் நிச்சயம் நன்றாயிருக்கும். வருமானத்தின்...
Ad Widget

அனுமதிப் பத்திரம் இன்றி வடபகுதிக்கு வந்த வெளிநாட்டுபயணி ஒமந்தையில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்!!

அனுமதிப் பத்திரம் இன்றி வடபகுதிக்கு யாழ் தேவி ரயிலில் பயணித்தார் என்று கூறி வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை ஓமந்தைச் சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் இறக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் அடித்துநொறுக்கப்பட்டுள்ளது

சாவகச்சேரி, கச்சாய் அம்மன் கோயில் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் நேற்று திங்கட்கிழமை இரவோடிரவாக அடித்துநொறுக்கப்பட்டுள்ளது என்று கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பிறந்த தினத்தின்போது குறித்த கட்சியினர் ஆலயத்தில் பொங்கல் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டனர் என்றும், இதனைத் தொடர்ந்து ஆலய மண்டபம் ஒன்றில் பொருட்களை வைத்த அவர்கள் சில...

காங்கேசன்துறைக்கான புகையிரத சேவை 2 ஆம் திகதி ஆரம்பம்.

யாழ்தேவி ரயில் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் காங்கேசன்துறை வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வரவுள்ள அன்றைய நாள் உத்தியோகபூர்வமாக புகையிரத சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்தநிலையில் புகையிரத புனரமைப்பு வேலைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே காங்கேசன்துறைக்கான...

யாழ். புகையிரத நிலையத்தில் ஓவியம்

யாழ். புகையிரத நிலையத்திலுள்ள நிலக்கீழ் சுரங்கப் பாதையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓவியரான ரோஸ் ரொபின் என்னும் பெண்மணியால் வரையப்பட்டுள்ள சுவர்ஓவியங்களை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா திங்கட்கிழமை(22) பார்வையிட்டார். அத்துடன் ஓவியரை பாராட்டி, அவருக்கு நினைவு பரிசில் ஒன்றையும் வழங்கினார். கடந்த டிசெம்பர் 3ஆம் திகதி...

ஆன்மீகத்தின் மூலமே சிறந்த சமுதாயம் மலரும் – சைவ மகா சபை

ஆன்மீகத்தின் மூலமே சிறந்த சமுதாயம் மலரும். திருவெம்பாவை காலத்தில் அனைவரும் சமய, சமூக பணிகளில் ஈடுபட வேண்டும் என சைவ மகா சபையின் பொதுச் செயளாலர் ப.நந்தகுமார், திங்கட்கிழமை (22) வேண்டுகோள் விடுத்தார். சைவ மகா சபையின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துக்கூறுகையிலேயே நந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

17 மாவட்டங்களை எதிரணி வெற்றிக்கொள்ளும் – மனோ கணேசன்!

ஜனாதிபதித் தேர்தலில் 17 மாவட்டங்களில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவே வெற்றிபெறுவார். - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன். பொது எதிரணி வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து தெல்தெனிய, நாவலப்பிட்டி, மாத்தளை, கம்பளை, எட்டியாந்தோட்டை, வலப்பனை, ஹங்குரான்கத, பதுரெலிய ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தொடர் பிரசார கூட்டங்களில் உரையாற்றிய போதே...

புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வாராம் மஹிந்த ராஜபக்‌ஷ!

தனது மூன்றாவது பதவிக்காலத்தில் பிளவுபடாத இலங்கையை உறுதிசெய்வதுடன் புதிய அரசமைப்பொன்றை அறிமுகம் செய்வார் என்று உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டைத் துண்டாடுவதற்கு சர்வதேச, உள்நாட்டு சக்திகள் விரும்புகின்றன. இந்த சக்திகளுக்கு நான் சிறிதளவும் இடமளிக்கமாட்டேன்...

வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் பெயரில் தேர்தல் மோசடி – கபே

குவைத்தில் தொழில் புரியும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்களை பயன்படுத்தி பாரிய தேர்தல் மோசடியில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்ட இலங்கையர்களின் பெயர் விபரங்களை குறிப்பிட்ட வேட்பாளர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், இந்த...

வடக்கு மாகாணசபை வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றவில்லை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வடமாகாணசபை தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றை சுழற்சி முறையில் வழங்குவதாக வழங்கிய உறுதிமொழிக்கு ஏற்றவாறு வழங்கவில்லையென வவுனியா மாவட்ட பொதுமக்கள் அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர். வடமாகாணசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை சுழற்சி முறையில் ஐவருக்கு...

மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தல், வாக்களிப்பு நிலையம் மூடப்பட்டது!!

மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை தொந்தரவு செய்தமையால் தபால்மூல வாக்களிப்பு நிலையம் ஒன்று காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. மீதொட்டுமுல்லை, இலங்கை போக்குவரத்து சபை கட்டடத்தில் இன்று இயங்கிய தபால்மூல வாக்களிப்பு நிலையமே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கென வந்த ஊழியர்களை, ஆளும் கட்சி ஆதரவாளர்கள் சிலர் மகிந்தவுக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்தியதில் ஏற்பட்ட முறுகல் நிலைமையே இதற்கு காரணம் என...

“உலகத்தை வெல்லும் வழி!” வெளியானது மஹிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம்(நேரடி ஒளியலை வரிசை)

இழுபறி நிலையில் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டது. இந்த விஞ்ஞாபனம் இன்று 23.12.2014 முற்பகல் 9 .30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் வெளியிடப்பட்டது. “மஹிந்த சிந்தனை – உலகத்தை வெல்லும் வழி” என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான...

நாட்டின் சில பாகங்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்?

நாட்டின் சில பாகங்களில் இன்று (23) மாலை வேளையில் இடியுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாகவும், வடக்கு மத்திய வடமத்திய கிழக்கு ஊவா மாகாணங்களில் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் நிலவுவதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மற்றும் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய...

தேவையென்றால் 2ம், 3ம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும்!- மஹிந்த தேசப்பிரிய

எதிர்வரும் ஜனாதிபதி தோதலின் போது தேவையென்றால் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டில் தாம் வாக்களிக்கும் வேட்பாளரின் சின்னத்திற்கு எதிரில் 1 என்ற இலக்கத்தை எழுதுவதன் மூலம் முதலாம் விருப்பத் தெரிவினை செய்ய முடியும். மேலும் இரண்டு வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கினை அளிக்க...

திஸ்ஸ அத்தநாயக்கவின் இரகசிய உடன்படிக்கை குற்றச்சாட்டு பொய்யானது!– ரவி கருணாநாயக்க

சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் இரகசிய உடன்படிக்கை குற்றச்சாட்டு பொய்யானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனூடாக வடக்கின் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதுடன், படையினர் சர்வதேச நீதிமன்றில்...

புதிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் சபை!

இந்திய கிரிக்கெட் சபை வீரர்களுக்கான புதிய ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது. இதில் புவனேஸ்வர் குமார் 'ஏ' தரத்துக்கு முன்னேறினார். அத்துடன் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். உலகக்கிண்ண அணிக்குத் தேர்வானோரே இந்தப் புதிய பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஒப்பந்த விவரம் வருமாறு: தரம் 'ஏ' - (வருட சம்பளம்: ஒரு கோடி...

தபால்மூல வாக்கெடுப்பு: மனச்சாட்சிப்படி வாக்களிக்குமாறு அரச ஊழியருக்கு மு.கா. அறிவிப்பு!

சமூகம் மற்றும் கட்சி ஆகியவற்றின் பாதுகாப்பையும் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக உரிமைகளையும் முதன்மைப்படுத்தி இன்று 23ஆம் திகதியும், நாளை 24ஆம் திகதியும் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பின்போது தமது மனச் சாட்சியின்படி வாக்களிக்குமாறு அரச ஊழியர்களிடம் முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின...

‘தோல்வியடைந்தால் அமைதியான ஆட்சிமாற்றம்’ – மகிந்த

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், வெற்றிபெற்ற தரப்பிடம் தனது அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். பிரிட்டனிலிருந்து வெளியாகும் ஃபைனான்ஸியல் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு அளித்த பதிலிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். எனினும், 'நான் தோல்வியடைப் போவதில்லை' என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள...

3இல் மூழ்கி 2ஐ இழந்தது அரசாங்கம்

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வரம் கிடத்த போதிலும் அவர் தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம், நாடாளுமன்றத்தில் இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நேற்று திங்கட்கிழமையுடன் இழந்தது. நாடாளுமன்றத்தில் 163 உறுப்பினர்களை அரசாங்கம் கொண்டிருந்தது. எனினும், அந்த எண்ணிக்கை நேற்றுடன் 148ஆக குறைந்துள்ளது. இதேவேளை, ஆளும் கட்சியிலிருந்து...
Loading posts...

All posts loaded

No more posts