கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: மாவை, சம்பந்தனின் உருவபொம்மைகள் எரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால், இன்று சனிக்கிழமை (04) இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, மார்டின் வீதியில் அமைந்துள்ள...

இலங்கை ஜனாதிபதியின் உருவபொம்மையை எரித்த 13 பேர் கைது

தமிழகத்தின் தஞ்சாவூர் ரயிலடியில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவபொம்மையை எரித்ததாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த 13 பேரை பொலிஸர் நேற்று கைது செய்துள்ளனர். இதில், எல்லை தாண்டி மீன் பிடிக்கத் தமிழக மீனவர்களை அனுமதிக்க மாட்டோம். எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்படுவர் எனக் கூறிய இலங்கை ஜனாதிபதியைக்...
Ad Widget

ஐ.நா.வின் துணை பொதுச்செயலர் இன்று இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகளின் துணை பொதுச்செயலர் ஹவுலி யேங் சு, இலங்கைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்யவிருக்கின்றார். அவர், எதிர்வரும் 10ஆம் திகதி வரையிலும் இலங்கையில் தங்கியிருப்பார் என்று ஐ.நா.வின் கொழும்பு காரியாலயம் தெரிவித்தது. நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற புதிய அபிவிருத்தி தேவைகளை இனங்கண்டுகொள்வதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமுகத்தினரை சந்தித்து...

இனவாதம் பேசுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிடுவோர் மற்றும் எழுதுவோருக்கு எதிராக இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான தீர்மானத்தை நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சரவையில் முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர்...

66 நாட்கள் கடலில் தவித்தவர் உயிருடன் மீட்பு

சுமார் இரண்டு மாதங்களாக கடலில் தன்னந்தனியாகத் தவித்துவந்த ஒருவர் தற்போது மீட்கப்பட்டுள்ளார். மீன்களை உண்டும் மழை நீரைக் குடித்தும் அவர் உயிரைத் தக்கவைத்திருந்தார். வியாழக்கிழமையன்று நார்த் கரோலினாவுக்கு 200 மைல் தொலைவில் தவித்துக்கொண்டிருந்த லூயிஸ் ஜோடர்ன் என்ற 37 வயது நபரை அந்த வழியாகச் சென்ற ஜெர்மன் நாட்டு டேங்கர் கப்பல் ஒன்று பார்த்தது. அவர்...

தலாய் லாமாவுக்கு இலங்கை விசா வழங்குமா?

இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. அவரை ஆண்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது அரசியல் தலைவராகப் பார்ப்பது என்பது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. இலங்கை ஒரு அமைதியான பௌத்த நாடு என்பதால் தலாய்...

இறுதிப்போர் இறுவட்டு விற்பனை குற்றச்சாட்டிலிருந்து இளைஞர் விடுவிப்பு

இறுதிப்போர் தொடர்பான காட்சிகள் அடங்கிய அரசுக் கெதிரான இன வாத உணர்வுகளை தூண்டுகின்ற இறுவட்டுக்களை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் நீதிமன்றால் அந்தக் குற்றச்சாட்டி லிருந்து விடுவிக்கப்பட்டார். குறித்த இளைஞருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றில் தீர்ப்புக்காக எடுக்கப்பட்டது....

யாழ். இந்துக்கல்லூரியில் ‘சபாலிங்கம் அரங்கம்’ திறந்துவைப்பு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்றி இருபத்ததைந்தாவது ஆண்டு நிறைவையொட்டி முன்னாள் அதிபர்களில் ஒருவரான சபாலிங்கம் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட சபாலிங்கம் அரங்கம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் முன்னாள் அதிபர்களில் ஒருவரான க.பொன்னம்பலத்தினால் திறந்து வைகப்பட்டது. முன்னதாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் இருந்து விருந்தினர்கள் மேளவாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள். இந்த...

போகோ ஹராம் தீவிரவாத அமைப்புக்கும் மஹிந்தவின் மருமகன் ஆயுதம் விநியோகம்!

உக்ரேன் பிரிவினைவாதப் போராளிகளுக்கு, ஆயுதங்களை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மரு மகனும், அவரது ஆட்சிக்காலம் முழுவதும், ரஷ்யாவுக்கான தூதுவராகப் பணியாற்றியவருமான உதயங்க வீரதுங்க, நைஜீரியாவில் இயங்கும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் விற்பனை செய்திருக்கலாம் என இலங்கை அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது. [caption id="attachment_42831" align="aligncenter" width="494"]...

புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை உடன் நீக்கமுடியாது!

மஹிந்த ஆட்சியில் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கிவிட முடியாது என்றும், இதுபற்றி ஆழமாக ஆராயப்படவேண்டும் என்றும் புதிய அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது, "புலம்பெயர் அமைப்புகள் மீதும், தனிநபர்களுக்கு எதிராகவும்...

மானிப்பாயில் கைக்குண்டுகள் மீட்பு

மானிப்பாய் பகுதியில் வெற்றுக்காணியில் இருந்து எஸ்.எஸ். ஈ. 87 ரக இரண்டு கைக்குண்டுகள் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு, இராணுவத்தினரால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. மானிப்பாய் கட்டுடை பகுதியில் கடந்த வியாழக்கிழமை குறித்த கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தோட்டக்காணிக்கு பக்கத்தில் உள்ள வெற்றுக்காணிக்குள் சென்ற போது, அங்கு இரண்டு கைக்குண்டுகள் இருப்பதை...

இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட முடியாத சூழ்நிலை

இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் களம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன்படி நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 8ம் திகதி முதல் தொடங்கி மே 24ம் திகதி வரை நடைபெறவுள்ளன....

எல்லை தாண்டிய மீனவர்கள் 37 பேர் கைது

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து மீனவப்படகுகளும் இதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் கைதான மீனவர்களும் கைப்பற்றப்பட்ட படகுகளும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நடு இரவில் பாடலை வெளியிடும் இயக்குனர் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் துல்கர் சல்மான்-நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணிரத்னம் தன்னுடைய சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் புகைப்படங்கள், டீசர், மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி இப்படத்தின் மீது பெரும்...

வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘காக்கி சட்டை’. இப்படத்தையடுத்து தற்போது ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பொன்ராம் இயக்கி வரும் இப்படத்தை இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது....

வேகப்புயல் பிரட் லீ நடிக்கும் ’அன் இண்டியன்’ திரைப்படம்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் புயல் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ நடித்து வரும் ’அன் இண்டியன்’ [Un indian] திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ முதல் முறையாக இந்தியாவை மையப்படுத்திய ”இந்தியன் அல்லாதவன்” [UNINDIAN] என்ற சினிமா படத்தில் நடத்தி வருகிறார்.அந்த திரைப்படத்தின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த...

புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் குடியமர்வு

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் ஆயிரத்து நூறு ஏக்கர் முழுமையாக விடுவிக்கப்பட்டு அதில் மக்களின் மீள்குடிய மர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்படும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலதிகமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளது. இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிதிவெடி அகற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 7...

வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது – இராணுவத் தளபதி

வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து அகற்றப்படமாட்டாது என,இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டிசில்வா,தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் மீண்டும் ஆயுதக்கிளர்ச்சி ஏற்படாமல் தடுப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.தேசிய பாதுகாப்புக்கோ அல்லது...

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் : ஐ.நா சிறப்பு தூதுவரிடம் வலியுறுத்தியது த.தே.கூ

"இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா. விசாரணை அறிக்கையையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். ஐ.நா. விசாரணை அறிக்கையின் பிரகாரம் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.''என்று, ஐ.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப்பிடம் நேரில் வலியுறுத்தினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

தேர்வாளர் குழுத் தலைவர் பதவியிலிருந்து சனத் இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் தேர்வாளர் குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அவர், அனுப்பிவைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரிய கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவுக்குழு...
Loading posts...

All posts loaded

No more posts