மக்கள் வெளியேற்றப்படுவதை தடுத்து நிறுத்தினார் விஜயகலா

நாவற்குழியில் உள்ள அரச காணியில் தற்காலிக குடிசைகள் அமைத்து வசித்து வந்த 12 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். நாவற்குழி ஐயனார் கோவிலடி பகுதியில் அரச காணியினுள் தற்காலிக குடிசைகள் அமைத்து 12 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களை உடனடியாக அந்த...

யாழில் கஷ்ட,அதிகஷ்ட பிரதேசங்களுக்கு ஆசிரியர்களை இடமாற்ற நடவடிக்கை

பல்வேறு காரணங்களைக் கூறி வன்னி மற்றும் தீவகப் பகுதிகளில் கடமையாற்றாது உரிய வயதெல்லையைக் கடந்த ஆசியர்கள் வலிகாமம் பகுதியில் உள்ள கஷ்ட,அதி கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப் படவுள்ளதாக வலிகாம வலயக் கல்விப் பணிப்பாளர் செ.சந்திரராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். வன்னி மற்றும் தீவகக் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பல்வேறு...
Ad Widget

சம்பூர் கடற்படை முகாம் பொதுமக்களின் விவசாய நிலத்துக்கு மாறுகிறது!

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலிருந்து கடற்படை வெளியேறுவதாக கூறியபோதிலும், மக்களின் விவசாய நிலங்களில் கடற்படை முகாம்களை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த மாதம் சம்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்படையினரின் வசமிருந்த 40 ஏக்கர் நிலப்பரப்பை மக்களிடம் கையளித்தார். எனினும் குறித்த பகுதியிலிருந்து கடற்படையினர் வெளியேறுவதற்கான முயற்சிகளை...

நாட்டில் இடம்­பெற்ற யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உண்மை அறி­யப்­ப­ட­ வேண்டும்! – இரா.சம்­பந்தன்

ஒரு நியா­ய­மான நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வைப்­பெற்று அந்த அர­சியல் தீர்வு பாரா­ளு­மன்­றத்தில் பெரு­பான்­மைப்­ப­லத்­துடன் நிறை­வேற்­றப்­பட்டு நாட்டு மக்­களின் ஆணை­யைப்­பெ­ற­வேண்டும் அது தான் எமது இறுதி இலக்கு. இவ்வாறு எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் நேற்று தெரி­வித்தார். தொடர்ந்து இவர் கருத்து தெரி­விக்­கையில் - நாட்டில் இடம்­பெற்ற யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உண்மை அறி­யப்­ப­ட­...

“வடக்கின் வல்லவன்” நாவாந்துறை சென் மேரீஸ்

சனிக்கிழமை இரவு மின்னொளியில் இடம்பெற்ற “வடக்கின் வல்லவன் 2015” ஆம் ஆண்டிற்கான உதைபந்தாட்டப் போட்டியில் வடக்கின் வல்லவனுக்கான பட்டத்தை தனதாக்கிக் கொண்டது யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரீஸ் விளையாட்டுக் கழகம். மின் ஒளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கில்லரி வி.க எதிர்த்து நாவாந்துறை சென்.மேரிஸ் வி.க மோதியது. மைதானத்தினை சுற்றி நிரம்பிய ரசிகர் கூட்டத்துடன் பிரம்மாண்டமாக...

தேர் திருவிழாவின் போது 16 பவுண் நகைகள் திருட்டு

வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது 16 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்திருவிழா சனிக்கிழமை(26) இடம்பெற்றது. இதன்போது பெண்கள் அணிந்திருந்த 7 பவுண், 5 பவுண் தாலிக் கொடிகள் மற்றும் இரண்டு சிறுமிகள் அணிந்திருந்த இரண்டு பவுன் சங்கிலிகள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு...

தம்பதியரைக் காணவில்லை!

மக்கா புனித தலத்துக்கு யாத்திரை சென்ற இரு இலங்கை யாத்திரிகர்களைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த அபூபக்கர் அசீஸ் (வயது 58), ரோஷன் அப்துல் அசீஸ் (வயது 55) தம்பதியினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள் இருவரையும் தேடும் பணியை விரைவாக செயற்படுத்தபடுவதாக மக்கா யாத்திரையில் ஈடுபட்டிருந்த அப்துல் காதர் தெரிவித்துள்ளார்....

ஐ.நா. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்ககை! பான்கீ மூனுக்கு ஜனாதிபதி உறுதி!!

ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரேரணையில் அடங்கிய யோசனைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் எப்போதும் மீள் நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் உறுதியளித்துள்ளார். மேலும் ஐ.நா. பிரகடனங்களுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கம் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும்...

உள்ளக விசாரணைகளுக்காக 3 விசேட குழுக்கள்! சர்வதேச விசாரணை இல்லவே இல்லை!!

மூன்று விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணை நடத்தப்படும். எனவே சர்வதேச விசாரணை என்று சிலர் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். இதில் எவ்வித உண்மைகளும் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பரணகம ஆணைக்குழுவை அமைத்து சர்வதேச சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்றவர் மஹிந்த ராஜபக்‌ஷவே ஆவார் என்றும் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். ஊடகத்துறை சார்ந்த...

நாடு முழுவதும் மழைக்கான காலநிலை தொடரும் சாத்தியம்?

நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்று (28) மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. இம் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றரை தாண்டலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்துடன் ஊவா கிழக்கு மாகாணங்களில் மாலை...

நாடு பூராகவும் மின் தடை – காரணம்..?

நேற்று நள்ளிரவு நாடுபூராகவும் மின்சாரம் தடைப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் நிலைமை அதிகாலை 03.30 - 04.00 மணிவரையான காலப்பகுதிக்குள் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக, இலங்கை மின்சாரசபை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். தொழிநுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இது குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இனிமேல் இவ்வாறு நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனால்...

கமலை தொடர்ந்து ரஜினி படத்தில் நடிக்கும் கிஷோர்

கன்னட படங்களில் பிசியாக நடித்து வந்த கிஷோர் தமிழில் ‘ஜெயங்கொண்டான்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இப்படத்தில் இவரின் நடிப்பு வரவேற்பு பெறவே, இவருக்கு அடுத்தடுத்து வில்லன், போலீஸ், குணச்சித்திர வேடங்கள் அமைந்தது. முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் படத்தில் நடித்த கிஷோர், கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தூங்காவனம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில்...

மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் விக்ரம்

'ஐ’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ‘கோலி சோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மூலம் ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து...

முடிவுகளில் குறையிருந்து எடுத்துக் காட்டினால் “எதிர்ப்பு அரசியல்வாதி” என்கின்றார்கள் ! -முதலமைச்சர்

யாழ்.இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று (27) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது முழுமையான உரை வருமாறு அதிபர் அவர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே, பல நாடுகளிலும் இருந்து இங்கே வந்திருக்கக்கூடிய பழைய மாணவர்களே, பழைய மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளே, கல்விமான்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே,...

பொதுசுகாதார பரிசோதகருடன் இராணுவத்தினர் வீட்டுக்குச் செல்வது குறித்து மக்கள் விசனம்

வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதார பரிசோதகர்களுடன் இரா ணுவத்தினர் செல்வது தொடர்பில் பொது மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். எனினும் சுகாதார பரிசோ தகர்களுடன் இராணுவத்தினர் செல்வதற்கு தாம் அனுமதிய ளிக்கவில்லை என யாழ். மாநகர சபையின் ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார். அண்மைய நாட்களாக யாழ். மாநகர சபைக்குட்பட்ட...

யாழ். பஸ்நிலைய தாக்குதலுக்குள்ளான தம்பதியரில் கணவன் மரணம்

யாழ். பஸ் நிலைய பகுதியில் மது போதையில் நின்ற ரவுடிகளின் தாக்குதலுக்குள்ளாகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தம்பதியரில் கணவன் நேற்று முன்தினம் 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை இரவு10.30 மணியளவில் யாழ். பஸ் நிலையத்துக்குப் பின்பாக உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்தியுள்ளனர்....

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து அஹிம்சை வழியில் போராடி தனது உயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று சனிக்கிழமை மாலை யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய மாணவர்கள் சிலர் அங்கு பிரத்தியேகமான இடம் ஒன்றில் திலீபனின் உருவப்படத்துக்கு மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்...

யாழில் 6 மாதங்களில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்

யாழில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சிறுவர் அலுவலக மேம்பாட்டு அதிகாரி வி.கௌதமன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ் மாவட்டத்திலே கடந்த 06 மாதங்களில் 27 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகத்திற்கு...

யாழ்ப்பாணத்தின் 90 வீதமான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த நீதிபதி இளஞ்செழியன் கூறும் வழிகள்!

யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் குறித்தும், அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியபோது தெரிவித்ததாவது: பாடசாலை மாணவர்கள் பகிரங்க இடங்களில் மது அருந்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன. அவ்வாறான மாணவர்களை சாராயப் போத்தல்களும் கையுமாகக் கைது செய்ய வேண்டும். மாணவர்கள் பாடசாலை நேரத்தில் சீருடையில் வீதிகளில் காணப்பட்டால் அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்....

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் இன்று இரத்ததானம் ! 206 பேர் பங்கேற்பு!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில்  கல்லுாரியின் 125 வது ஆண்டு நிறைவை முனை்னிட்டு இன்று(26) இரத்ததானம் இடம்பெற்றது இதில் பெருமளவில் பழையமாணவர் பங்கேற்றனர். நிகழ்வு ஆறு திருமுருன் , சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகியது . இன்றைய நாளில் விழாக்கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் இந்த இரத்ததானம் மட்டும் நிகழ்ந்தது....
Loading posts...

All posts loaded

No more posts