- Sunday
- April 12th, 2026
இந்தியாவின் நட்பு நாடு அல்லாத, இந்து சமுத்திரப்பிராந்தியத்தைச் சாராத சீனா, இப்பிராந்தியத்தின் பிறிதொரு நாட்டில் முன்னெடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் இந்தியாவுக்குப் பாதுகாப்புக் கரிசனைகளைத் தோற்றுவிப்பது முற்றிலும் நியாயமானது என சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்தியாவின் கரிசனைகளுக்கு முரணான எந்தவொரு செயற்பாட்டையும் தாம் ஆதரிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்...
இலங்கையில் மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் மருந்துகள் மற்றும் பல்வேறு நோய்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பல குழுக்களில் அங்கம் வகிக்கும் இலங்கை மருத்துவ சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணரான ஆனந்த விஜேவிக்ரம, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், அந்த தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு பல்வேறு சிக்கல்களின்...
பிரிகோஜின் மரணத்திற்குப் பின்னர் ரஷ்யாவின் விசுவாச பிரமாணத்தில் கையெழுத்திட வாக்னர் கூலிப்படையினருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியான நிலையில், கூலிப்படையினரை தன்னிடம் விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்குமாறும் உறுதிமொழி எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க சேனல் NBAC-ன் அறிக்கையின்படி, புடின் வெள்ளிக்கிழமை உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்....
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு முன்னால் பெருமளவு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டக்குழுவொன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பிலுள்ள வீடிருக்கும் பகுதிக்கு விரைவதாக தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே அப்பகுதியில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று...
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து இன்று (25) அடையாள கண்டன போராட்டம் ஒன்று சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர புதன்கிழமையன்று (22) முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும், நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் பாராளுமன்றில் ஆற்றிய உரையை...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் அரபு நாடு ஒன்றுக்கு வேலைக்காகச் சென்றிருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், அவர் வியாழக்கிழமை...
வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் நேற்று நண்பகல் டிப்பரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதான சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். இவ்விபத்தில் மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் வளைவு பகுதியில் திரும்பிய போதே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும், இதன்போது...
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கசின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் ஆகியோரும் இவர்களுக்கு பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்த பரமேஷ் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களுக்கு இலங்கை பாதாள உலகத்துடன் தொடர்பு இருப்பதை...
உலகக் செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் நோர்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவின் இளம் வீரரான பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். எனினும் தமிழக வீரரான பிரக்ஞானந்தாவின் திறமைக்கு இந்திய பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகளிலும் உலகின் முதல் தர வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு சமநிலையில் (Draw)...
வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரை ரஷ்ய அரசு திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்னர் படை குற்றம்சாட்டியுள்ளது. மாஸ்கோவில் இருந்து சென்ற தனியார் வர்த்தக விமானம், புறப்பட்டு 100 கிலோ மீட்டரில் வானில் இருந்து புகையுடன் கீழே விழுந்து நொறுங்கியது. 3 விமானிகளுடன் பயணம் செய்த 7...
வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேநபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள...
மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 மற்றும் 53 வயதானவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பள்ளிமடு, உலியன்குளம் பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்தனர். சடலங்கள் சம்பவ இடத்திலயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்கேநபர்களை கைது செய்வதற்கான...
யாழ் மாவட்ட கூட்டுறவு சபையினால் இன்று 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அத்துடன் இந்நிகழ்வின் போது போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநரால் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும்...
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் வகையில் செயற்பட்ட, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக் கொண்டார். முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நேற்று சரத் வீரசேகரவினால் தெரிவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக, இன்று நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர்...
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்தது. இச்சம்பவம் இன்று (24) அதிகாலை 4:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவம் குறித்து பஸ்ஸின் சாரதி கூறுகையில், புதன்கிழமை (23) இரவு...
யாழ்.மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியும் இதுவரை எழுத்து மூலமான உரிய பதில் கிடைக்கவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்.நல்லூரில் ஒரு கப் பால் தேனீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவது தொடர்பில் அரசாங்க அதிபரை தொடர்பு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விடயம் தொடர்பில்...
சண்டிலிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டடிலில் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 23, 24 வயதைதுடைய மானிப்பாயைச் சேர்ந்த சந்தேகநபர்களை கைதுசெய்ததுடன் வன்முறைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய ஒரு...
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) இடம்பெற்ற நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான நிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர் ஜனக குமார தெரிவித்துள்ளார். உடலால் உணரப்படும் இந்த வெப்பநிலையை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் அதிகூடிய வெப்பநிலை திருகோணமலை மாவட்டத்தில் நேற்று முன் தினம் பதிவாகிய நிலையில்,...
சந்திரயான் -3 விண்கலனில் அனுப்பப்பட்ட லேண்டர் கலன் நிலவின் மேற்பரப்பு படங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு (இஸ்ரோ) அனுப்பியுள்ளது. இதன்மூலம் நிலவில் தரையிறங்கிய பிறகு லேண்டர் கலன் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டுள்ளதையும் இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள சமூகவளைதள பதிவில், சந்திரயான் -3 திட்டத்தின் லேண்டர் கலனுக்கும் பெங்களூருவிலுள்ள கட்டுப்பாட்டு...
Loading posts...
All posts loaded
No more posts
