Ad Widget

வாக்னர் கூலிப்படையினருக்கு புடின் பிறப்பித்துள்ள உத்தரவு!!

பிரிகோஜின் மரணத்திற்குப் பின்னர் ரஷ்யாவின் விசுவாச பிரமாணத்தில் கையெழுத்திட வாக்னர் கூலிப்படையினருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியான நிலையில், கூலிப்படையினரை தன்னிடம் விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்குமாறும் உறுதிமொழி எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க சேனல் NBAC-ன் அறிக்கையின்படி, புடின் வெள்ளிக்கிழமை உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

இதன் கீழ், அனைத்து கூலிப்படையினரும் ரஷ்யாவிற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அனைவரையும் வலியுறுத்தியுள்ளார்.

பிரிகோஜினின் மரணத்திற்கு பழிவாங்குவதாக வாக்னர் போராளிகள் சமீபத்தில் புடினை அச்சுறுத்தியதை அடுத்து இந்த உத்தரவு கையெழுத்தானது.

புடின் கையெழுத்திட்ட உத்தரவின் கீழ், புதிய விதிகள் வெள்ளிக்கிழமை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.

ரஷ்யாவின் பாதுகாப்பின் ஆன்மீக மற்றும் தார்மீக அடித்தளங்களை உருவாக்குவதற்காக இந்த உத்தரவு விளக்கப்பட்டுள்ளது.

Related Posts