- Sunday
- April 12th, 2026
புடினுக்கு எதிராக ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்ட வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார். விமான விபத்தொன்றில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்வெர் பிராந்தியத்தில் உள்ள குசென்கினோ கிராமத்திற்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானதாக ரஷ்ய அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. இதேவேளை விபத்து நடந்த இடத்தில் எட்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில்...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்த அமெரிக்க தூதர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார். தொடர்ந்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு, விஜயம் செய்து...
பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனஅழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இந்நோய்கள் வரும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், சிறு வயதிலேயே மாரடைப்பு அபாயத்தை தவிர்க்க முடியும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (22.08) முன்னெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர். இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி...
வடமாகாண சுற்றுலாப் பணியக அதிகாரிகள், நேற்று முன்தினம் (21) வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ”சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு வருகை தரும் கோர்டிலியா என்ற உல்லாசப்பயணக்கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு விசேட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது” தொடர்பில் இக்கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட காணி ஆணையாளர், யாழ் இந்திய...
லைக்கா குழுமத்தின் தலைவர் கலாநிதி அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த நிகழ்வு வணக்கத்துக்குரிய மகா சங்கத்தினரின் முன்னிலையில் நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்பு மிக்க மாத்தறை வெஹேரே ஸ்ரீ பூர்வராம விகாரையில் இடம்பெற்றிருந்தது. சிறந்த சேவை, உள்ளார்ந்த திறமை மற்றும் தகுதியான நடத்தை...
உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் சக்தி வாய்ந்த போர் விமானமொன்று தீக்கிரையானதாக தகவல் வெளியாகியுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் தெற்கே Soltsy-2 இராணுவ விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த Tupolev Tu-22 போர் விமானமே இவ்வாறு தீக்கிரையானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Tu-22 போர் விமானமானது ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது மற்றும் உக்ரைனில் உள்ள நகரங்களை...
குருந்துர் மலை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மூலம் மூக்குடைபட்ட பௌத்த இனவாதிகள், தற்போது முல்லைத்தீவு நீதவானை குறிவைத்துள்ளனர். முல்லைத்தீவு நீதவானுக்கு எதிராக, சிங்கள அடிப்படைவாத கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் நேற்று (21) எழுத்துமூல கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயம், அங்கு கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது. தற்போது நாளுக்கு நாள் குருதிக்கான தேவை அதிகரித்துச் செல்வதினால் இதனால் நோயாளர்களுக்குத் தேவையான குருதியை வழங்க முடியாதுள்ளது. ஆகவே 18 – 55 வயதிற்கு இடைப்பட்ட, 50 கிலோகிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட நிறையும் கொண்ட...
யாழில் திருடர்களுக்குப் பயந்து குப்பைகளோடு குப்பையாக வைத்திருந்த 8 பவுன் பெறுமதியான தங்க நகைகள் எதிர்பாராத விதமாக வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி மண்டுவில் வட்டாரப் பகுதியேிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுன் பெறுமதியான நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும்...
“தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது” என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வு...
சண்டிலிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதோடு, வீட்டின் பொருட்களும் சேதமடைந்துள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடு ஒன்று நால்வர் கொண்ட இனந்தெரியான கும்பலினால் தாக்கப்பட்டுள்ளது. முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர், அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில் தனது கிளை நிறுவனம் ஒன்றினை நேற்றைய தினம் ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் நேற்று...
விடுதலைப்புலிகளின் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை, அவர்கள் நாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு மரியாதை தந்திருந்ததோடு பௌத்தத்திற்கும் பாதுகாப்பையே வழங்கியிருந்தனர் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார் வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில் இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக...
பரந்தனில் வெடிபொருட்கள் மீட்பில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள கிணறொன்றைத் துப்புரவு செய்யும் பொழுது பல்வேறு வகையான வெடி பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் காணி உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று குறித்த கிணற்றில் இருந்து...
யாழின் வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று (21.08.2023) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினமே சட்டவைத்திய...
உக்ரைன் - ரஷ்யா போரில் ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகளும் அழிந்துவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'ரஷ்யாவுக்கு இந்தப் போராட்டத்தில் நிலைத்திருப்பதைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் காணவில்லை. போரின் முடிவு...
நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்குமென யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்றைய தினம்(21) ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று...
வட மாகாணத்தில் ஒருவருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு வருட காலப்பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்களும் தாதியர்களும் நாட்டை விட்டு...
தழிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போலியான நாடகங்களை முன்னெடுத்துள்ளதாக தழிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தழிழ் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பது போன்ற...
Loading posts...
All posts loaded
No more posts
