பாடசாலை நேரங்களில் மாற்றமா?- கல்வியமைச்சர்!

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். காலியில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்தது சினோபெக் நிறுவனம்

இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சினோபெக் நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நேற்று முதல் (30) ஆரம்பித்துள்ளது.​ () இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று முதல் Sinopec என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 22 ஆம்...
Ad Widget

மோசமான இரவை எதிர்கொள்ளும் புடின்! ட்ரோன் தாக்குதலினால் திணறும் ரஷ்யா!!

உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் நான்கு இராணுவ விமானங்கள் சேதமடைந்துள்ளமை ரஷ்யா எதிர்கொள்ளும் மிக மோசமான தாக்குதல் சம்பவம் என தகவல் வெளியாகியுள்ளது. 10 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் பிஸ்கோவ் பகுதியில் உள்ள விமான தளத்தை தாக்கியதாக கூறப்படுகின்றது. எஸ்டோனியா மற்றும் லாட்வியாவின் எல்லைக்கு அருகில் இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த...

ஆரம்பமானது ”யாழ் முயற்சியாளர் – 2023” கண்காட்சி!!

யாழில் ”யாழ் முயற்சியாளர் – 2023”என்ற விற்பனைக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியானது இன்றைய தினமும், நாளைய தினமும் யாழ்ப்பாணம், நல்லூர்,முத்திரைச்சந்தி அருகாமையில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது. சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும் அவற்றிற்கான சந்தை வாய்ப்பை...

யாழில் மாவா போதை பொருளுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது !

யாழ்.தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மாவா போதை பொருளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக, ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிஸார் நீதிமன்றத்தில்...

பொலித்தீன் பைகளை வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!

நல்லூர் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பைகளை வைத்திருந்த 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால் நேற்றைய தினம் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் கடந்த 08 மாத கால பகுதியில், தடை செய்யப்பட்ட பொலித்தீன்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நல்லூர்...

ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி பலி!

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் , போதைக்கு அடிமையானவர்...

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விசேட செயற்திட்டம்!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி குறிப்பிட்டார். அதன்படி 40 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம்...

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழில் போராட்டம்!!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்குப் EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை (28) மதிய 12 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட பரிந்துரையின் மூலமாக ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி...

வவுனியாவில் 8 வயது சிறுவன் துஸ்பிரயோகம்!! : 15 வயது சிறுவன் கைது!!

வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் வவுனியா பொலிசாரால் நேற்றையதினம் (28) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவன் ஒருவனை அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நேற்று முன்தினம் (27) மாலை 15...

பெற்றோருக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய...

வடக்கு, கிழக்கில் 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

ஆலய வளாகத்தில் அங்கப்பிரதிஷ்டை செய்த ஒருவர் உயிரிழப்பு!!

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வளாகத்தில் அங்கப்பிரதிஷ்டை செய்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (28.08.2023) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 57 வயதுடைய சின்னையா சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்கான காரணம் மரண விசாரணையின் பின்னர் அறிவிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கவனயீர்ப்பு போராட்டம்!!

தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (29.08.2023) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்து, நாளை (30.08.2023) மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவாள்ளது. "எமது மக்களின் எதிர்ப்பைக்க காட்ட அனைவரையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்" என தமிழ்...

ஜி20 மாநாட்டுக்கு அழைப்பு: மோடிக்கு பதில் வழங்கிய புடின்

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க இயலாதது குறித்து பிரதமா் நரேந்திர மோடியிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதின் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக ரஷ்ய தரப்பில் வெளியுறவு அமைச்சர் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்பாா் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா தலைமை வகிக்கும் நிகழாண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு, வரும்...

யாழில் நகை திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி நகை திருடும் மூன்று சம்பவங்கள் இவ் வாரம் இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு சம்பவங்கள் ஏற்கனவே பதிவாகியிருந்த நிலையில் நேற்று (27) அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கிலியன் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள்...

மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தவர் கீழே விழுந்து உயிரிழப்பு!!

தெல்லிப்பழை மகாஜன கல்லுரி ஒன்று கூடலில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நபரே சனிக்கிழமை (26) திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். மல்லாகம் பகுதியைச் சேர்ந்த நாகராஜா சசிதரன் (வயது 61) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். தெல்லிப்பழையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில், மஹாஜனா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களது ஒன்றுகூடல்...

யாழில் தொடரும் கடும் வறட்சி : குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு!

யாழ். மாவட்டத்தில் 22 ஆயிரத்து 044 குடும்பங்களை சேர்ந்த 70 ஆயிரத்து 408 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் அண்மையில் வறட்சி தொடர்பிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இவற்றில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, மருதங்கேணி, சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவுகளில் குடிநீர்ப் பற்றாக்குறையான பகுதிகளுக்கு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின்...

நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல : தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளையே எதிர்க்கிறோம் – கஜேந்திரகுமார்

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் உரிமை சகலருக்கும் உண்டு. இருப்பினும் நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்ல. மாறாக எமது மக்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடியவகையிலும், தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடியவகையிலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளையே நிறுத்துமாறு கோருகின்றோம் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெற்கில் அனுபவிக்கும்...

இன்று முதல் 10 நாட்களுக்கு சூரியன் நேரடி உச்சம்!!

இன்று திங்கட்கிழமை முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பலப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று (28) மதியம் 12.11 மணியளவில் கோவிலன் முனை மற்றும் மல்லாகம் (யாழ்ப்பாணம்...
Loading posts...

All posts loaded

No more posts