ஆலய வளாகத்தில் அங்கப்பிரதிஷ்டை செய்த ஒருவர் உயிரிழப்பு!!

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வளாகத்தில் அங்கப்பிரதிஷ்டை செய்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (28.08.2023) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 57 வயதுடைய சின்னையா சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்கான காரணம் மரண விசாரணையின் பின்னர் அறிவிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts