Ad Widget

சிறுமி வைசாலி விவகாரத்தில் மூன்று பேரை உடனடியாக கைது செய்ய கோரிக்கை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி வைசாலியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் மூன்று பேரை உடனடியாக கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துண்டிக்கப்பட்ட கை தொடர்பில் மருத்துவப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வைத்தியர்...

மருத்துவத் தவறினால் கை அகற்றப்பட்ட விவகாரம்; மீண்டும் பாடசாலை கற்றலை ஆரம்பித்தார் சிறுமி

யாழ். போதனா வைத்தியசாலையில், மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியை வரவேற்றுள்ள பாடசாலை சமூகம் அவர் கற்றலைத் தொடர்வதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
Ad Widget

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, காய்ச்சல் காரணமாக கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 12 இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது...

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

08 வயது சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகள் முடிவடையவில்லை எனவும் , அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும்...

8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி : தொலைபேசி பாவனைக்கு தடை !!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கையடக்க தொலைபேசியை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு இடது கை...

சிறுமியின் கை அகற்றப்பட்டதற்கான காரணங்கள் எவை? மருத்துவர்கள் குழுவின் நிபுணத்துவ ஆலோசனையை கேட்டுள்ளது நீதிமன்று

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள தகுதி வாய்ந்த மருத்துவர்கள் குழு சார்பில் மருத்துவ வல்லுநரின் ஆலோசனையை நீதிமன்றுக்கு முன்வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த கட்டளையை நேற்று வழங்கினார். காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச்...

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தாதிக்கு பயணத் தடை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் பாதிப்புக்கு உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன்...

யாழில் சிறுமிக்கு கை அகற்றப்பட்ட சம்பவம்: நீதி கோரும் ஆசிரியர் சங்கம்

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவியின் கை அகற்றப்பட்டமைக்கு நீதி விசாரணை வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சகல துறையிலும்...

யாழ் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்; உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்- சுகாதார அமைச்சு

யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில் மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை அகற்றப்பட்ட சம்பவம்தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய கருத்துத் தெரிவிக்கையில் ”இந்த விடயத்தில் வைத்தியர்கள் தவறிழைத்திருப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். வைத்தியசாலை...

கை துண்டிக்கப்பட்ட வைசாலிக்கு நீதி வேண்டி யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன் போராட்டம்!

கடந்தவாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது. இந்த செயற்பாடு தாதியரின் அசமந்தப் போக்கு காரணமாகவே இடம்பெற்றது என்றும் இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருவதுடன், இந்த விடயம் இலங்கையின் நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி தற்போது யாழ்ப்பாணம்...

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: தாதியர்கள், வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி முத்துக்குமாரு உதயஸ்ரீ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

யாழில். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்; நீதி கோரி நிற்கும் பெற்றோர்

யாழ். போதனா வைத்தியசாலையில், நேற்றைய தினம் மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தின் பிரதிகளை வடமாகாண ஆளுநர் , மனிதவுரிமை...

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது என்றும் உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தொலைபேசி ஊடாகவும் எழுத்து மூலமாகவும் அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது...