. மாவீரர் நாள் – Jaffna Journal

தடைகளுக்கு மத்தியில் யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாலும் மாவீரர்களுக்கு மாணவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலை வளாகத்தினுள் 26ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதி ஆகிய தினங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்தக் கூடாது என மாணவ... Read more »

கொடிகாமம், வடமராட்சியில் இராணுவத்தினரின் தடையை மீறி மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு

கொடிகாம் மற்றும் வடமராட்சியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சுடரேற்ற முற்பட்டபோது இராணுவத்தினர் அதனை தடுத்தி நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து இராணுவ முகாமுக்கு அருகில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதிப் போரில் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவுதின நிகழ்வுகள் தமிழர்கள் செறிந்து... Read more »

யாழ்.பல்கலை. வளாகத்துக்குள்ளிலிருந்து அனைவரையும் வெளியேற உத்தரவு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பிற்பகல் 2 மணியுடன் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேறுமாறு நிர்வாகம் பணித்துள்ளது. அனைத்துப் பீட மாணவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடையையும்... Read more »

தடையை மீறி யாழ்.பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!!

தடைகளை மீறி யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு மாணவர்கள் உணர்வூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில்... Read more »

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக இராச பாதை வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள்... Read more »

நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த புதிய அரசாங்கம் ஆவன செய்யும் – சி.வி.விக்னேஷ்வரன்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையூறுகளும் இன்றி நடைபெறுவதற்கு புதிய அரசாங்கம் ஆவன செய்யும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்!

யாழ். நல்லூர் பகுதியில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன. குறித்த பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக குறித்த கல்வெட்டுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் மறுநாள் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன.... Read more »

வாள்வெட்டுக் கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்புள்ளதா? – சிவாஜிலிங்கம்

வாள்வெட்டுக்கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தொடர்புள்ளதா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நண்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கிலும்... Read more »

வவுனியாவில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய புலனாய்வாளர் – நெகிழ்ச்சியில் தமிழர்கள்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் புலனாய்வாளர் ஒருவர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த மாவீரர்களுக்கு மெழுகு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியமை அங்கிருந்த... Read more »

மாவீரர்தினத்தை ஒழுங்கமைத்தவர் வீடு அடித்துடைக்கப்பட்டது!

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் நேற்று மாவீரர்தினத்தை ஒழுங்கமைத்து, படைத்தரப்பின் அச்சுறுத்தலையும் கணக்கிலெடுக்காமல் அஞ்சலி நிகழ்வை நடத்தியவரது வீடு நள்ளிரவில் தாக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு அவரது வீட்டுக்கு சென்ற இனம்தெரியாத நபர்கள், வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு சென்றுள்ளனர். நேற்று (27) பருத்தித்துறை சுப்பர்மடத்தில் பொதுமக்களால்... Read more »

உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

தேசிய மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்த போதிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தமிழீழ மாவீரர் நாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர்நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. இந்நிலையில்... Read more »

தமிழர்களின் முன் இரண்டு தேர்வுகளே உள்ளன – நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்தி

அரசியல் யதார்த்தத்தை நன்கு ஆராய்ந்து பார்ப்பின் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர்... Read more »

துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, வாகரை மற்றும் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லங்களில், நாட்டப்பட்ட நடுகற்கள், பொலிஸாரின் உத்தரவின் பேரில், நேற்று மாலை பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளன. மாவீரர் நாளான இன்று மாலை, துயிலுமில்லங்களில் ஈகச்சுடர் ஏற்றுவதற்காக, புதிதாக நடுகற்கள் நாட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், நேற்று மாலை... Read more »

புதுப்பொலிவு பெற்றுள்ள யாழ். பல்கலை வளாக மாவீரர் நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ள மாவீரர் நினைவிடத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த போராளிகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர், யுத்த மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர். தமிழ்... Read more »

கோப்பாய், நல்லூரில் விளக்கேற்றி அஞ்சலி!

மாவீரர் நாளான இன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் இன்று யாழில் இரண்டு இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி நிகழ்வில் ஈடுபட்டார். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு எதிராக உள்ள பிரதேசம், நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடம் ஆகியவற்றில் அஞ்சலி செலுத்தினர்.... Read more »

புதுக்குடியிருப்பில் திடீரென பறந்த புலிக்கொடி!

இம்முறை மாவீரர்தினத்தில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், கொடி உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கிலும், கிழக்கிலுமாக இரண்டு இடங்களில் புலிக்கொடி பறக்கவிடப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு அருகில் இனம்தெரியாதவர்கள் புலிக்கொடியை பறக்க விட்டிருந்தனர். மத்திய கல்லூரிக்கு... Read more »

இன்று மாவீரர் தினம்!

ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளை பெற்று, சுதந்திர இனமாக வாழ வேண்டுமென்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் நாள். ஈழ விடுதலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் மொத்தமான 30,000 வரையான மாவீரர்கள் ஆகுதியாகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த... Read more »

புலிகளின் பாடல்களை அங்கஜன் ஒலிபரப்பியபோது என்ன செய்தீர்கள்?: பொலிசாரை தொண்டைப்பிடி பிடித்த நீதிவான்!

சாட்டி துயிலுமில்லத்தில் விடுதலைப்புலிகளின் கொடி, இலட்சினை, சீருடைகளை பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகளின் கொடி, இலட்சினை,மற்றும் புலிகளின் சீருடையுடனான உருவப்படங்களை பயன்படுத்துவதை தடை செய்வதாகவும் பாடல்கள் ஒலிபரப்பவும் இறந்தவர்களை நினைவுகூர... Read more »

மாவீரர் நாளை தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க ஏற்பாடு!

தமிழீழ மாவீரர் நாள் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன. இன்று மாலை 6.05 மணிக்கு அக வணக்கம்,... Read more »

விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடிகள், உருவப்படங்கள் காட்சிப்படுத்த தடை

யாழ்ப்பாணம், வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சீருடைகள், அவற்றை அணிந்த உருவப்படங்கள், கொடிகள் என்பவற்றை காட்சிப்படுத்த ஊர்காவற்துறை நீதவான் அ.ஜூட்சன் தடையுத்தரவு வழங்கியுள்ளார். சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு தடையுத்தரவு வழங்க... Read more »