- Saturday
- August 22nd, 2026
மிகவும் பிரபலமான சமூகவலைத்தளமான பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தற்போது புதிய பிரச்சனையில் சிக்குண்டுள்ளனர். பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியில் தங்களின் பேஸ்புக் கணக்கின் ஊடாக வைரஸ் ஒன்று பரவி வருகின்றது. குறித்த வைரஸ் ஆனது பேஸ்புகில் காணொளி இணைப்பை தமது டைம்லைனில் பகிர்ந்துள்ளதாக அறிவிப்பு செய்யும், குறித்த அறிவிப்பினை கிளிக் செய்யும் போது உங்கள் பேஸ்புக் கணக்கில் ஊடாக...
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிடப்பட்டு பிறிதொரு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. இலங்கை கனணி அவசரப் பிரிவுக்கு இது தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மின்னஞ்சல் ஊடாக பொருட்களை பதிவு செய்யும் நபர்கள் இந்த மோசடிக்குள் சிக்கியுள்ளதாக கனணி அவசரப்பிரிவின் ஊடகப் பேச்சாளரும்,...
அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களான ஜெரி யங், டேவிட் பிலோ ஆகியோர் கூட்டாக இணைந்து 1994ல் யாகூ நிறுவனத்தை உருவாக்கினர். இன்டர்நெட்டில் வலைதள நிறுவனங்களின் முகவரிகளை தேடித் தரும் முன்னோடி தேடல் பொறி என்ற சிறப்பு யாகூ வலைதளத்திற்கு உள்ளது. இந்த நிலையில் ‘யாகூ’ வலைதள நிறுவனத்தை தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த வெரிசான் கம்யூனிகேஷன்ஸ்...
'இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயாகும்' என்று கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரமணி ரட்ணவீர தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், 'தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமானது, கல்வியுடன் ஒன்றிணைந்த ஒரு சாதனமாகும். ஆனால், அவ்வாறான இணைய மற்றும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு நபருடைய மனநலத்தை பாதிக்கும்'...
தொழில்முறை வலையமைப்பு இணையதளத்தை வாங்குவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து மைக்ரோசாப்ட் வாங்குகின்ற லிங்கிடு இன் தான் இது வரை இந்த பெரிய மென்பொருள் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்குகின்ற இணையதளமாகும். உலகின் மிக பெரிய தொழில்முறை சமூக வலையமைப்பான, இந்த லின்க்ட் இன் இணையதளத்தை வாங்கியிருப்பதன் மூலம்...
Techstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம்திகதி இரவு 9 மணிவரை யாழ் ரில்கோ விடுதியில் நடாத்தப்படஉள்ளது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இலங்கைக்கான சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடும்பெறுவது இதுவே...
பேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகளை தெரிவிக்க உதவும் ’ரியாக்சன்’-களை பயனர்கள் பயன்படுத்த வேண்டாம் என பெல்ஜியம் பொலிசார் எச்சரித்துள்ளனர். பேஸ்புக்கில் ’லைக்’ பட்டன் இருப்பது போல் ‘டிஸ்லைக்’ பட்டன் இருக்க வேண்டும் என பயனர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் பேஸ்புக் நிறுவனம் கோபம், சிரிப்பு, சோகம், ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும்...
இலங்கையில் வைபை வசதியை மேலும் விரிவுபடுத்துவதற்காக கூகுள் பலூன் வேலைத் திட்டத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கும் அமெரிக்காவின் Social Capital நிறுவனத்தின் நிறுவுனரான ஷமத் பலிஹபிட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் வைபை வசதியை மேலும் வலுப்படுத்தும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கடந்த வருடம் ஜூன் 28ம் திகதி கூகுள் மற்றும்...
உதடுகளின் அசைவை வைத்து பேசுவதை இனங்காணும் தொழில்நுட்பம் ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சி.சி.டிவியில் பதிவாகியுள்ளவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும். குற்றம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதற்கு இது உதவும் என இதனை உருவாக்கியுள்ள பிரிட்டனில் உள்ள ஈஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் கணிணி விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இது...
கம்பியில்லா இணையத்தள வசதியை இலங்கை முழுவதும் குறைந்த கட்டணத்தில் வழங்கும் கூகுள் லூன் பலூன் செயற்திட்டம் இன்று மீண்டுமொரு முறை தோல்வியடைந்துள்ளது. சீகிரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யொவுன்புர இளைஞர் ஒன்றுகூடல் மைதானத்தில் இருந்து கூகுள் பலூனை வானுக்கு ஏவும் செயற்திட்டத்தின் இரண்டாவது முயற்சி இன்று மேற்கொள்ளப்பட இருந்தது. எனினும் பலூனுக்கு காற்றைச் செலுத்தும் முயற்சியின் போது...
கூகுள் நிறுவனம் இலங்கையில் கூகுள் வீதிப் படங்களை வெளியிட்டுள்ள நிலையில், அதில் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளைப் பார்வையிட முடியாதுள்ளது. கூகுள் வீதிப் படங்கள் எடுப்பதற்காக கடந்த காலங்களில் யாழ்ப்பாண வீதிகளில் கூகுள் நிறுவன கார் ஒன்று வீதிகள் அனைத்திலும் சென்றது. ஆனால், அந்தக் கார் வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லவில்லை என்பது...
கூகுள் வரைப்படத்தில் (Google Maps) இப்போது இலங்கை பாதை படம்(Street view) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. உலகம் முழுவதும் வசிக்கும் உள்ள மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத் தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும். கிடைக்கும் பாதை படத்தை(Street view) மக்கள் ஆராய்ந்து தங்கள் செல்ல...
இணையத்தள சேவையை துரிதப்படுத்துவதற்கான கூகுள் பலூன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி சிகிரியாவில் நடத்தப்படவுள்ளது. இதன்போது இளைஞர்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த பலூன் பரிசோதனை தொடர்பில் தெளிவூட்டப்படவுள்ளதாக தொழில் நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கூகுள் நிறுவனத்தினால் அண்மையில் பலூன் பரிசோதனை...
பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த பெங்களூரை சேர்ந்த ஹேக்கருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் பிளிப்கார்ட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார். பேஸ்புக்கின் இந்த குறையை பயன்படுத்தி பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும்...
இ-மெயிலை நான் கண்டுபிடித்தேன், ஆனால் நிற துவேசம் காரணமாக அதற்கான அங்கீகாரம் வேறொருவருக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழர் சிவா அய்யாதுரை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த ரேமண்ட் டாம்லின்சன் (74) அண்மையில் உயிரிழந்தார். அவர்தான் இ-மெயிலை கண்டுபிடித்தவர் என்றும், இ-மெயிலின் தந்தை என்றும் அனைத்து ஆங்கில செய்தி மற்றும் சில தமிழ் நிறுவனங்களும் புகழாரம்...
புறாவின் இறக்கையில் கட்டி கடிதம் அனுப்பியது, குதிரை வீரன் மூலம் தூது அனுப்பியது, பின்நாளில், லாந்தர் விளக்கை ஏந்தியபடி, இரவு-பகல் பாராமல் ஓயாது ஓடிய அரசுப் பணியாளர்கள் மூலம் தகவல் பரிமாறியது, பின்னர் தந்தி மற்றும் தபால் சேவையின் மூலம் அஞ்சல் அனுப்பியது உட்பட அத்தனை பழங்கால வழக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘இமெயில்’ எனப்படும்...
இலகு ரக விமானங்களைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது மொரட்டுவை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு. இந்தக் குழுவினால் ஆளில்லா இலகு ரக விமானங்கள் நான்கு தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களைப் பயன்படுத்தி நாட்டில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை கண்டறியவும், வானிலை பற்றிய தகவல்களை அறியவும் விவசாய பயிர்ச் செய்கைகளின் சேதம் குறித்த ஆய்வுளை செய்ய இந்த விமானங்களைப் பயன்படுத்த...
கூகுல் பலூன் வேலைத்திட்டம் சோதனை முயற்சி மாத்திரமே என்ற நிலையில், அது குறித்து யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பதுளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் துளியளவு முதலீடு கூட இன்றி இந்த வேலைத்திட்டத்தை அமெரிக்க நிறுவனம் முன்னெடுக்கிறது. கடந்த காலத்தில் பொது மக்களின்...
மற்றுமொரு கூகுள் பலூனை விண்ணில் செலுத்தவுள்ளதாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் நிறுவனத்தின் வேலைத்திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுபோன்று மேலும் சில கூகுள் பலூன்களை அந்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கூகுள் நிறுவனத்தினால் அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில், முன்னதாக பரிட்சார்த்தமாக செலுத்தப்பட்ட பலூன்...
கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லை என கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பலூன், சோதனை நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கூகுள் நிறுவனம் இலங்கையில் வை-பை இணைய சேவையை வழங்குவதற்காக இலங்கைக்கு மேல் இணைய சேவையை...
Loading posts...
All posts loaded
No more posts
