- Monday
- September 14th, 2026
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கின் சிறந்த மைதானமாக விரைவில் தரமுயர்த்தப்படவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை இன்று (திங்கட்கிழமை) காலை பார்வையிட்டதோடு குறித்த விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர்...
வல்வெட்டித்துறையில் இடம்பெறும் வல்வை உதைபந்தாட்ட பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் அணி ஒன்றின் கொடியில் உறுமும் புலிகளின் சின்னம் இருந்தமையால் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வல்வெட்டித்துறை ஊரணி மைதானத்தில் இந்த உதைபந்தாட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகி இடம்பெறுகிறது. அந்த சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவதற்கோ அல்லது காட்சிப்படுத்துவதற்கோ...
தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன்,...
கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணம் பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் இறுதிப்போட்டியில் ஊழல் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ள முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை விசாரணைக்காக சர்வதேச கிரிக்கெட் சபையிடம் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த தன்னிடமுள்ள ஆதாரங்களை சர்வதேச கிரிக்கெட் சபையிடம் சமர்பிக்கவேண்டும் என்பதுடன் உரிய விசாரணைகளுக்கு வேண்டுகோள்...
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமானது. இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் இடையேயான நூற்றாண்டு...
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பெண்கள் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரி மற்றும் பராக்கிரமபாகு மத்திய மகாவித்தியாலய அணிகள் மோதின ஆட்ட நேரமுடிவில் தெல்லிப்பளை மகாஜனா பெண்கள் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று தேசிய சம்பியனாகியது மகாஜானாவின் வெற்றிக்கொலினை தேசிய அணி வீராங்கனை சாணு அவர்கள் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இப்...
உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதல்முறையாக உலக கிண்ணத்தை கைப்பற்றியது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்பத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக...
லண்டனில் உள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறையாகும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது பதவிக்காலம் வரும் ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி ஒரு...
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சுற்றுக் கிண்ணத்துக்கான ஆட்டத்தில் 187 ஓட்டங்களால் வென்றது சென். பற்றிக்ஸ். யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இந்த ஆட்டம் இடம்பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 இலக்குகளை...
டக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 113 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்கின்றது. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடும் சென்.ஜோண்ஸ்...
உலக உடற்கட்டழகர் மற்றும் உடலமைப்பு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உடற்கட்டழகர் போட்டியில் 100 கிலோ கிராமுக்கு மேற்பட்டோர் பிரிவில் தெற்காசியாவின் கறுப்பு சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற தேசிய உடற்கட்டழகர் சம்பியனான இலங்கைத் தமிழர் லூசியன் புஷ்பராஜ் வெற்றி பெற்றுள்ளார். தாய்லாந்தில் இடம்பெற்ற 10 ஆவது உடற்கட்டழகர் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசியன் வெற்றி பெற்றுள்ளார்....
இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது. அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர். இந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...
19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த மதுஷன் மற்றும் விஜயகாந் ஆகியோருக்கே அந்த இடம் கிடைத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தியத் தொடருக்கான இலங்கை அணியில்...
கிரிக்கெட்டில் ஆஸியின் மோசமான செயல் ; ஐ.சி.சி.யின் அதிரடித் தீர்ப்பு ; பதவி விலகினர் ஸ்மித், வோர்னர்
கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலிய அணி தனது மோசமான செயலை வெளிக்காட்டியுள்ளதால் அவ்வணியின் தலைவர் ஸ்மித், உபதலைவர் வோர்னர் ஆகியோர் பதவியிலிருந்து விலகியுள்ளதுடன் அணித் தலைவருக்கு அபராதமும் போட்டித் தடையும் மற்றைய வீரரான போன்கிராப்ட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்கே இவ்வாறு அபராதமும் தடையும் மேற்கண்ட வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது....
இலங்கையின் சுதந்திர கிண்ணத்திற்கான முக்கோணத்தொடரில் பங்களாதேஷ் அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இந்திய அணி சுந்திர கிண்ணத்தை கைப்பற்றியது. ஆரம்பம் முதல் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி ஒரு பந்தில் 6 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் ஆடுகளத்தில் இருந்த டினேஷ் கார்த்திக் அந்த ஒரு பந்தை எதிர்கொண்டு 6...
கிரிக்கட் கனவான்களின் விளையாட்டு என்பதைக் கேள்விக்குட்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் நேற்று கொழும்பு கெத்தாராம கிரிக்கட் மைதானத்தில் அரங்கேறியுள்ளன. நேற்றைய பரபரப்பான போட்டியில் தாயக மண்ணிலேயே இலங்கையிடம் இருந்து சுதந்திரக்கிண்ணத்தைப் பறித்தெடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கட்டுக்களால் வெற்றிபெற்று இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றமையைக் கூட மறக்கும் வகையில் மைதானத்தில் இடம்பெற்ற மோதல்கள், வாக்குவாதம், சர்ச்சைகள்...
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தின் பங்களாதேஷ் வீரர்கள் உடை மாற்றும் அறையில் இடம்பெற்ற வெற்றி...
சுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கியமான நேற்றய போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் தோற்கடித்த பங்களாதேஷ் அணி இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறும் முக்கியமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இப் போட்டியில் ஆரம்பம் முதல் இலங்கை...
2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயார் செய்யும் வகையில்இ கிரிக்கெட் வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவர்களின் திறன்இ உடல்தகுதிஇ காயம் ஏற்படாமல் தடுத்துல் போன்ற பணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணியில் வீரர்களுக்காக செய்யப்பட்ட இந்த அதிநவீன முறை இப்போது இலங்கை வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது இதற்காக இலங்கை...
Loading posts...
All posts loaded
No more posts



