கிரிக்கெட்டில் களம் இறங்கும் பெண் நடுவர்கள்!

கிரிக்கெட்டின் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் நடுவர்களை நியமித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது ஐ.சி.சி. இன்று முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரை, தாய்லாந்தில் நடக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு, இந்நால்வரும் நடுவர்களாக செயல்படவுள்ளனர். உள்ளூர் மகளிர் போட்டிகளில் மட்டும் அதிகப்படியாக பெண் நடுவர்கள் செயல்பட்டு வந்த நிலையில், ஒரு...

மும்பை இண்டியன்ஸ் ஆலோசகர் பதவி: கும்ப்ளே ராஜிநாமா

மும்பை இண்டியன்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை ஆலோசகர் பதவியை அனில் கும்ப்ளே ராஜிநாமா செய்துள்ளார். 2013 ஜனவரி முதல் மும்பை அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்த கும்ப்ளே, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள மற்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தனது பதவியை ராஜிநாமா செய்ததாக தெரிவித்துள்ளார். இரட்டை ஆதாய பதவிகளுக்கு எதிராக பிசிசிஐ தீவிர நடவடிக்கை...
Ad Widget

இனி நாணய சுழற்சி தேவையில்லை!

138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது பகல்-இரவு ஆட்டமாக புது பரிமாணம் பெற்றுள்ளது. தற்போது மீண்டும் ஒரு பரிணாமமாக நாணயம் (டாஸ்) சுண்ட தேவையில்லை என்ற முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. இங்கிலாந்தில் கவுன்டி போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள். இதில் கவுன்டி...

பகல்–இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3–வது நாளிலேயே இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா– நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பகல்–இரவு மோதலாக கடந்த 27–ந்தேதி அடிலெய்டில் தொடங்கியது. இது, வரலாற்றின் முதல்...

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ரவிசாஸ்திரி பதிலடி

இந்திய ஆடுகளங்கள் குறித்து புகார் கூறிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு, இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் விளையாடி வரும் அம்லா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் (பிட்ச்) தாக்குப்பிடிக்க முடியாமல் மிரண்டு வருகிறது. மொகாலி மற்றும் நாக்பூரில் நடந்த டெஸ்டுகளில் தென்ஆப்பிரிக்கா வெறும் 3 நாட்களில் ‘சரண்’...

இதுபோன்ற சவால்களை நாங்கள் சந்தித்ததே இல்லை – அம்லா

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நாக்பூர் டெஸ்டில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்த தொடரில் மூன்று ஆடுகளமும் முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்க சாதகமாக இருந்தது. தென்ஆப்பிரிக்காவின் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணமாக...

அரைசதம் இல்லாத டெஸ்ட்

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நாக்பூர் டெஸ்டில் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் நேற்று தொடர்ந்து ஆடினர். சுழல் ஜாலத்தின் ‘கிடுக்குபிடி’ கொடிகட்டி பறந்த இந்த டெஸ்டில், ஒரு பேட்ஸ்மேன் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்தியாவின் முதலாவது இன்னிங்சில் முரளிவிஜய் எடுத்த 40 ரன்களே அதிகபட்சமாகும். 40 விக்கெட்டுகளும் முழுமையாக சரிந்த ஒரு டெஸ்டில் எந்த ஒரு பேட்ஸ்மேனும்...

சிக்கலான படத்தால், சிக்கலில் மாட்டிய இலங்கை கிரிக்கேட் வீரர்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களில் ஒருவர் குஷல் ஜனித் பெரேரா. எல்லா போட்டிகளிலும் பிரகாசிக்காத போதிலும், அப்பப்போது எதையேனும் செய்து அதாவது அதிரடியாக ஆடி பெயரைக் காப்பாற்றிக்கொள்வார். அதிரடி வீரராக அறியப்படும் இவர் , அதிரடியான சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். ஆம், கட்டிலில் பெண்ணொருவருடன் இருந்தவாறு அவர் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படும் அந்தரங்க செல்பியொன்று தற்போது இணையத்தில்...

இந்தியாவுடனான தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் அனுமதி

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லாததால் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் அல்லது வேறு ஏதாவது பொதுவான இடத்தில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்துவது என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதனடிப்படையில்...

138 ஆண்டுகளின் பின் நடெபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி அடிலெய்டில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறுகின்றது. 138 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் பகலிரவாக நடைபெறவுள்ள முதல் போட்டி இதுவாகும். வழக்கமாக டெஸ்ட் போட்டிகளின் போது சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். ஆனால் இந்தப்...

சிதம்பரநாதன் சுரேந்தினி இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தெரிவு

இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணான சிதம்பரநாதன் சுரேந்தினி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரும் மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளரும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளருமான சிதம்பரநாதன் சுரேந்தினி ஆவார். இதேவேளை, இவர் தென்கிழக்காசிய நாடுகளின் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றமில்லை

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றமில்லை. நாக்பூர் (நவ.25-29), டெல்லி (டிச.3-7) டெஸ்ட் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:- விராட் கோலி (கேப்டன்), முரளிவிஜய், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே, ரோகித் சர்மா, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன்,...

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ஜான்சனுக்கு சச்சின் வாழ்த்து

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிச்சேல் ஜான்சன். 34 வயதான இவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று அறிவித்தார். நியூசிலாந்துக்கு எதிராக பெர்த் மைதானத்தில் முடிந்த டெஸ்டோடு ஜான்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். மிச்சேல் ஜான்சன் 73 டெஸ்டில் விளையாடி 311 விக்கெட் கைப்பற்றியுள்ளார். சராசரி 28.52...

2வது போட்டியிலும் சச்சின் அணி தோல்வி: தொடரை வென்றது வார்னே டீம்

கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடரின் 2வது போட்டியிலும் வார்னே வாரியர்ஸ் அணியிடம் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி தோல்வியடைந்ததால் இந்த தொடரை இழந்தது. ஓய்வு பெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும், 3 டி20 போட்டிகள் கொண்ட, கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் தொடர் அமெரிக்காவில் 3 நகரங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான சச்சின் பிளாஸ்டர்ஸ்...

இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது....

எங்கள் மகிழ்ச்சியை கெடுத்து விடாதீர்கள் -மலிங்கா, மேத்யூஸ்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அசத்தி வரும் இலங்கை வெற்றிகளை குவித்து வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை அணி, ஒருநாள் தொடரையும் முழுமையாக 3-0 என்று கைப்பற்றியது. இந்நிலையில் முதல் டி20 போட்டியிலும் அசத்திய இலங்கை அணி, 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நாங்கள் சிறப்பாக...

ஐசிசி சேர்மன் பதவியிலிருந்து என்.சீனிவாசன் அதிரடி நீக்கம்: புதிய சேர்மன் சஷாங்க் மனோகர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சேர்மன் பதவியிலிருந்து என்.சீனிவாசன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர், புதிய சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசியில் சேர்மன் பதவி வகிக்கும் இந்தியாவின் முறை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. அதுவரை சஷாங்க் மனோகர் அந்தப் பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்...

முதலாவது போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 30 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி...

கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் டி20 : சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது வார்ன்’ஸ் வாரியர்ஸ்

கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், வார்ன்’ஸ் வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது. உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் மூன்று நகரங்களில் டி20 போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் தலைமையிலான...

19 ஓட்டங்களால் இலங்கை வெற்றி வாகை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 3-0 என வசப்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இழந்தது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட...
Loading posts...

All posts loaded

No more posts