இங்கிலாந்து அணி அபார வெற்றி

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வந்தது. கடந்த 22-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 254...

நான் துரோகி என்றால் இலங்கை கிரிக்கட் சபை அதைவிடத் துரோகி!

அவுஸ்திரேலியப் பந்துவீச்சு அணிக்கு ஆலோசகராக இருக்கும் என்னைத் துரோகி என்றால் இலங்கையிலுள்ள சிறந்த வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்புக்கொடுக்காத இலங்கை கிரிக்கட் சபை அதைவிடப் பெரிய துரோகி என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில், அவுஸ்திரேலிய அணிக்கு போட்டிக்கு 10 நாட்களுக்கு முன்பே...
Ad Widget

அஸ்வின் சுழலில் வீழ்ந்தது மே.இ.தீ.அணி

ஆண்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா, மேற்கிந்திய தீவகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 93 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன்படி, முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில்,...

முரளியின் செயற்பாடுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கவலை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகரான, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் செயற்பாடுகள் குறித்து வருந்துவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. முரளிதரனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். அணி முகாமையாளர் சரித் சேனாநாயகவை கடுமையாக சாடியமை, அனுமதியின்றி பல்லேகல...

அவுஸ்திரேலியாக்கு எதிராக 5 புதுமுக வீரர்களுடன் களமிறங்கும் இலங்கை

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாமில் 5 புதுமுக வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 18 வயதான வேகப்பந்து வீச்சாளர் அசித பெனார்ண்டோ மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான விஷ்வ பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் துடுப்பாட்ட வரிசையில் ரொஷான் சில்வா மற்றும் சகலதுறை ஆட்டக்காரரான தனஞ்சய டி சில்வா இணைத்தக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இடது கை பந்தவீச்சாளர் லக்ஷான் சந்தகன்...

சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் விளாசினார் விராட் கோஹ்லி

மேற்குகிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்தார். கோஹ்லி தலைமையிலான, இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் நாட்டில், சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி, நேற்று இந்திய நேரப்படி...

மேத்யூஸ் தலைவர் பதவிக்கு தகுதியானவரா?

இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலன் சமரவீரா, இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை அணி சமீப காலமாக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கூட இலங்கை அணி தோல்வியை சந்தித்து நாடு திரும்பியது. இந்த நிலையில் அனைத்துப் போட்டிகளுக்கும் தலைவராக உள்ள மேத்யூஸை தலைவர்...

வென்றது அவுஸ்திரேலியா

இலங்கை பதினொருவர் அணிக்கெதிராக கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற மூன்று நாள் பயிற்சியாட்டத்தில், இன்னிங்ஸ் மற்றும் 162 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவின்போது, தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணி, ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 431 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், நேற்றைய மூன்றாவது நாள்...

ஜாம்பவானிடம் பொன் வார்த்தைகளை பெற்ற இந்திய வீரர்கள்

விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில உள்ள நார்த் சவுண்டின் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக போட்டியில் விளையாடுவதற்கு இரண்டு பயிற்சி ஆட்டங்களை முடித்துள்ள இந்திய அணி செயின்ட்...

இங்கிலாந்தை சொந்த மண்ணில் வென்ற பாகிஸ்தான் (காணொளி இணைப்பு)

நேற்று நிறைவடைந்த பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்போட்டியில் 75 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 339 ஓட்டங்களை பெற்றது.இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 272 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்...

சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் மைதானம்

சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் மைதானமொன்று அமைக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் சுமார் 400 மில்லியன் ரூபா செலவில் மைதானம் அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதமளவில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளில் மைதானம்...

கவாஸ்கர் சாதனையை முறியடித்தார் குக்

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராகவும், கேப்டனாகவும் செயல்படுபவர் அலைஸ்டர் குக். 31 வயதான இவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். 2006-ல் இந்தியாவிற்கு எதிராக அறிமுகமான இவர் தொடர்ந்து 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். சிறந்த பேட்ஸ்மேன் ஆன இவர் ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார். 8900 ரன்னைக் கடக்கும்போது டெஸ்டில் அதிக...

புதிய அவதாரத்தில் டோனி (படம் இணைப்பு)

இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும் விக்கெட்காப்பாளருமான மகேந்திர சிங் டோனி தனது புதிய அவதாரத்தை தனது மகளுடன் இணைந்து உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். வழமையாகவே தனது சிகையலங்காரத்தால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள மகேந்திர சிங் டோனி, தற்போது தனது தாடி அமைப்பிலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளார்.

இலங்கையை வீழ்த்தத் திட்டமிடும் முரளி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கைக்குமிடையிலான கிரிக்கெட் தொடரின் தயார்படுத்தல்களில், அவுஸ்திரேலிய அணி ஈடுபட்டுவரும் நிலையில், அவ்வணிக்கான சுழற்பந்துவீச்சு ஆலோசகராகச் செயற்பட்டுவரும் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், தனது பணியை நியாயப்படுத்தியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் பலர், வெளிநாடுகளைச் சேர்ந்த அணிகளால் ஒப்பந்தம் செய்யப்படுவதொன்றும் புதிதன்று. குறிப்பாக, இலங்கை கிரிக்கெட்...

மீண்டும் ‘வோண் முரளி’ கிண்ணம்

உலகில் தோன்றிய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் இருவராகக் கருதப்படும் இலங்கையின் முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோண் ஆகியோரின் பெயரைத் தாங்கிய வோண் - முரளி கிண்ணம், இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடரின் வெற்றியாளர்களுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ளது. இதுவரையில் 3 தொடர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவை மூன்றிலுமே அவுஸ்திரேலிய அணி...

முதன் முறையாக யூரோ கிண்ணம் போர்ச்சுக்கல் அணிக்கு!

யூரோ கிண்ணம் 2016 கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் சாம்பியன் பட்டத்தை வென்றது. செயின்ட் டெனிஸில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இந்த விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அபாரமாக வீழ்த்தி...

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடுவேன்: வார்னர்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் விளையாடினார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் பீல்டிங் செய்யும்போது அவரது இடதுகை ஆள்காட்டி விரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த தொடரில் இருந்து விலகினார். தற்போது முறிந்துபோன கைவிரலுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி...

பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இலங்கை அணி தோல்வியுற்றது

இங்கிலாந்து தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இலங்கை அணி தோல்வியை தழுவியதாக இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய இலங்கை அணி,இங்கிலாந்து தொடர் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு மெத்யூஸ் தெரிவித்தார். இங்கிலாந்து சுற்று பயணத்தின் போது...

கிரிக்கெட் வீரர் கித்ருவனுக்கு தடை

இலங்கை அணி வீரர் கித்ருவன் விதானகேவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 26ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஒரு வருடங்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஒழுக்க மீறல் குற்றச்சாட்டு தொடர்பிலேயே கித்ருவானுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் அஸ்வின் தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்: முரளிதரன்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் இலங்கை அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து கூறியதாவது:- தற்போதைய காலக்கட்டத்தில் இந்திய வீரர் அஸ்வின் சிறந்த டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர். டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து...
Loading posts...

All posts loaded

No more posts