- Monday
- September 14th, 2026
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரவிந்த டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறினார். எவ்வாறாயினும் அவரின் பதவி விலகலை...
மலிங்கவுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை மருத்துவகுழு பார்த்துக்கொள்ளும். குறிப்பாக லசித் மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் என்று நான் நம்புகின்றேன் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக குறுகிய காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அலன் டொனால்ட் தெரிவித்தார். இலங்கை அணிக்கு...
இலங்கை கிரிக்கட் அணியின் வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி வெற்றியாளர் கிண்ணத்தை முன்னிட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இலங்கை அணியின் வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக சம்பிக்க ராமநாயக்க செயற்படுகிறார்.இந்நிலையில் எலன் டொனால்ட் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக...
தான் இன்னும் முழுநேர பயிற்சியாளருக்கு தேவையான பக்குவத்துடன் இல்லையென்பதாலேயே இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹில்ல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் ஐ.பி.எல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு துடுப்பாட்ட ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் உள்ள மஹில்ல ஜயவர்தன, இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கை...
தனது 44 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்காருக்கு வாழ்த்துத் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரவிடம் பிறந்ததின பரிசொன்றை சச்சின் கேட்டுள்ளார். கடந்த 24 ஆம் திகதி சச்சின் டெண்டுல்கார் தனது 44 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் குமார் சங்கக்கார டுவிட்டரில் சச்சினுக்கு...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திலகரட்ண டில்ஷானைக் கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (25) இரத்துச் செய்தது. தனது முந்தைய மனைவியான நிலங்கா விதாங்கிக்கு மாதாந்தப் பராமரிப்புப் பணமாக 20,000 ரூபாயையும் தனது மகனுக்கான காப்புறுதிப் பணத்தையும் டில்ஷான் செலுத்தி வந்தார். அந்தத் தொகையைச் செலுத்தாமை காரணமாக,...
இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் திலகரட்ன தில்ஷானை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கொன்றிற்கு தில்ஷான் முன்னிலையாகாத காரணத்தால் கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டாரவால் இந்த உத்தரவு வௌியிடப்பட்டுள்ளது.வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதி நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் ,...
இங்கிலாந்தில் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான இலங்கை அணி தலைவராக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், உப தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாமில், இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சிலர் இணைக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக தமது திறமைகளை வெளிப்படுத்திவரும்...
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இது சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் ஆகக்கூடிய உயர்வான விருது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிலர் இன்று காலை மீதொட்டமுல்ல பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளனர். கடந்த 14 ஆம் திகதி ஏற்பட்ட குப்பை மேட்டு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கவும், அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, அம்மகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கிலும் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களின் முகாம்களுக்கு விஜயம்...
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவனுமாகிய குமார் சங்கக்கார எதிர்வரும் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் புதிய அவதாரமெடுக்கவுள்ளார். இதனை சர்வதேச கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சம்பியன் கிண்ண தொடரில் குமார் சங்கக்கார கிரிக்கெட் வர்ணனையாளராக...
மீதொடமுல்ல குப்பை மேடு சரிவு அனர்த்தத்துக்கு முகம்கொடுத்த சகலரும்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்ஜலோ மெதிவ்ஸ் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வனுதாபச் செய்தியை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த அனர்த்த நிலைமைகள் மிக விரைவாக சீராகி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் எனவும் பிரார்த்தித்துள்ளார்.
2017ம் ஆண்டில் முன்னணி கிரிக்கட் வீரராக விராட் கோலியை கிரிக்கட் உலகின் விவிலியம் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை தெரிவுசெய்துள்ளது. விஸ்டன் சஞ்சிகையின் இந்த வாரத்திற்குரிய பதிப்பில் விராட் கோலி பற்றிய ஆசிரியர் தலையங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கூடுதலான கனவுகளை நனவாக்கியவர் விராட் கோலி என்று பத்திரிகை ஆசிரியர் லோறன்ஸ் பூத் குறிப்பிட்டுள்ளார். ரெஸ்ட்...
சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 20 க்கு 20 போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 6 விக்கட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை பெற்றது. இதன்படி, இலங்கை அணி 156 என்ற ஓட்ட இலங்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நிலையில் 18.5 ஓவர்கள்...
இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மற்றும் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருடனும் சுமுகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, கிரிக்கட் விளையாட்டின் மேம்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். கடந்த இரண்டு வருட...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபது 20 போட்டித் தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை பங்களாதேஷ் அணி சமநிலைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபது 20 போட்டித் தொடர் இலங்கை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை இந்தியாவில்...
இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் பெற்ற மோசமான தோல்வியினையடுத்து, அணியில் இரு மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் குலசேகர மற்றும் நுவான் பிரதீப் அணிக்குள் அழைக்கப்படலாம் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று...
பங்களாதேஷிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றதற்கு காரணம் களத்தடுப்பாளர்கள்தான் என்று தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் போட்டி குறித்து விளக்கமளிக்க அந்தந்த அணியின் வீரர் ஒருவர் அழைக்கப்படுவார். அந்த வகையில் இந்தப் போட்டி குறித்து பேச சந்திமால் வந்திருந்தார். அவரும் தோல்விக்கு காரணத்தை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஒவ்வொரு ரசிகனுக்கும் பார்வையாளனுக்கும் தேவை...
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸாரால் புதுவருட தினத்தை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்ம ரட்ண தெரிவித்தார். புதுவருட தினத்தை முன்னிட்டு வருடாந்தம் பொலிஸாரால் நடாத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
Loading posts...
All posts loaded
No more posts
