- Monday
- June 29th, 2026
சொந்த காணிகளில் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என அரசாங்கம் அன்று ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதியை முறையாக கடைப்பிடிக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி காணி அதிகாரங்களும் முழுமையாக மத்திய அரசிடம் காணப்படுவதால் எம்மால் ஒரு காணிகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். கிளிநொச்சி இரணைதீவு மக்களை நேற்று(திங்கட்கிழமை) சந்தித்த...
இரணைதீவில் தமது பூர்வீகக் காணிகளில் மீள்குடியமர்த்த வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இன்று நேரில் சென்று சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டு வருகிறார். வடக்கு மாகாண அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பொ.ஐங்கரநேசன், பா.கஜதீபன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் ஆகியோரும் முதலமைச்சருடன் இரணைதீவுக்குச்...
கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பறிமுதல் செய்யப்பட்ட, பல நூறு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலிகாமம் தெற்கு, பலாலி விமான தளத்தை அண்டிய காணிகளும் அதில் உள்ளடங்குவதாகவும், இராணு முகாம்கள் மற்றும் விமான தளத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுவரொட்டி கட்டுவன் சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு சட்டத்தின் பிரிவு 38(A) யின் கீழ் 07.08.1987 ஆம் திகதி பிரிசுரிக்கப்பட்ட 465/14 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலுக்கு...
இலங்கை கடற்படையினரால் 1992 ஆம் ஆண்டு விரட்டியடிக்கப்பட்ட கிளிநொச்சி இரணைதீவு மக்கள் தமது சொந்த இடங்களுக்கு தாமாகவே திரும்பியுள்ள போதிலும் அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அம் மக்களுக்கு தேவையான தற்காலிக கூடார கொட்டகைகளை அமைத்து கொடுக்கும் நோக்கில் கிடுகுகள் மற்றும் தென்னை ஓலைகளை, ஈழமக்கள்...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று (09.05.2018) இரணைதீவு மக்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியதுடன் அம்மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தேவாலயத்திலிருந்து மக்கள் குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் பாதையும் துப்பரவு செய்து கொடுக்கப்பட்டள்ளது. இரணைதீவு மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் குடியேறியதையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கடந்தவாரம்...
புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்று பார்வையிட்ட வடக்கு முதல்வர், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். ஜனாதிபதியுடன் இவ்விடயம் தொடர்பாக தான் கதைத்ததாகவும், அவரும் இதுகுறித்து புரிந்துகொண்டபோதிலும், அதனை...
முல்லைத்தீவு மாங்குளம் 574 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்துள்ள காணியை இராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காக அளவீடு மேற்கொள்ளும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த முகாம் அமைந்துள்ள இந்த காணிகளை விடுவிக்குமாறு பலதடவைகள் மக்கள் கோரியும் இந்த காணிகள் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நில அளவை திணைக்கள அதிகாரிகள் குறித்த காணியை அளவீடு செய்வதற்காக சென்ற போது, மக்கள்...
கிளிநொச்சி – இரணைதீவில் கிராம மக்களது போரட்டம் தொடர்பில் அரச நிர்வாகத்திற்கு எதிராக யாழ். மனித உரிமை ஆணைகுழுவிடம் முறை பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது சொந்த கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த கிராம மக்களே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த பிரச்சினைகளுடன் சம்மந்தப்பட்ட...
வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கட்டுவன் வீதியின் மேற்கு புறமாகவுள்ள (ஜே-240- தென்மயிலை, (ஜே 246 மயிலிட்டி வடக்கு), (ஜெ-247 தையிட்டி கிழக்கு) கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் தமது காணிகளை உடனடியாக தமது கிராம சேவகரிடம் பதிவினை மேற்கொள்ளுமாறு தெல்லிப்பளை பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ கேட்டுகொண்டுள்ளார். காணிகளை...
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள பகுதி கிணறுகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும், பற்றைகளை துப்புரவு செய்து வீதிகளை அமைக்கும் பணிகளையும், மீள்குடியேறிவரும் மக்களுக்கான குடிநீர் வசதிகளையும் வலி,வடக்கு பிரதேச சபை செய்து வருவதாக பிரதேச சபையின் தலைவர் எஸ்.சுகிர்தன் கூறியுள்ளார். கடந்த 13ம் திகதி வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த சுமார் 683 ஏக்கர்...
வலி. வடக்கு – மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுதக் களஞ்சியசாலை அங்கிருந்து நேற்று (திங்கட்கிழமை) வெளியேற்றப்பட்டது. குறித்த பகுதியில் கடந்த 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டமையை தொடர்ந்து இந்த ஆயுதக் களஞ்சியசாலை மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் என்பன இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டன. அங்கு பொருத்தப்பட்ட இரும்புக் கூரையினை இராணுவத்தினர் கழற்றி வாகனங்களில்...
வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு அமைச்சரவைப் பத்திரங்களை தமது அமைச்சு தயாரித்து வருவதாக மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மீளக் குடியேறிய கடற்தொழிலாளர்களுக்கு உதவித்...
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அங்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள் முகாம்கள் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். பலாலி விமான நிலையத்திற்கு அண்மைய காணிகள், வறுத்தலைவிளான், கட்டுவன் சந்தி அச்சுவேலி வீதி, கட்டுவன்- மயிலிட்டி வீதி அதனை சுற்றியுள்ள காணிகள், மயிலிட்டி...
“இந்த வீடுகள் மற்றும் வசதிகளை உங்களுக்கு வழங்குவதை போன்று மீண்டும் எங்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்” என இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார். தெல்லிப்பளையில், ‘நல்லிணக்கபுரம்’ என பெயர் சூட்டப்பட்ட கிராமத்தில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த வார்த்தையை...
பொலிஸாரின் பயன்பாட்டிலுள்ள யாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தையும், கிணற்றையும் உடனடியாக விடுவிக்க வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள்...
யாழ்ப்பாணம் கோட்டையை வழங்கினால் இராணுவ முகாங்களை அங்கு நகர்த்திவிட்டு மக்களின் காணிகளை விடுக்க முடியும் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழ். செயலகத்தில் இடம்பெற்றது. இராணுவம் மற்றும் பொலிஸார் வசமுள்ள மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான கோரிக்கை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்போதே மாவட்டச் செயலர்...
கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவம் அதனை விடுவிக்கவேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நேற்றுடன் (01.03.2018) ஒருவருடம் ஆனதையிட்டு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது அதிகளவான பொலிஸார் நேற்று காலைமுதல் அப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் மக்களின் பிரதி நிதிகளை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு...
மயிலிட்டி துறைமுகத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்ய நோர்வே அரசு சுமார் ஒரு பில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் இலங்கைகான உதவி உயர்ஸ்தானிகர் மொனிக்கா ஸ்வென்ஸ்கெட் தெரிவித்துள்ளார். நோர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் யாழ் காங்கேசன்துறை தெற்கு பளை வீமன்காமம் பகுதியில் சுமார் அறுபது லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தினை நோர்வே நாட்டின்...
28 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட, பருத்தித்துறை- பொன்னாலை வீதி நேற்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டது. மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட பின்னர் பருத்தித்துறை – பொன்னாலை வீதியை திறக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே குறித்த வீதி மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த வீதி திறந்து வைக்கப்பட்டதன் ஊடாக, இப்பகுதி மக்களுக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
