- Friday
- August 1st, 2025

இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையினால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்பு செய்யமுடியா திருப்பதன் காரணமாக அவர் தனது பதவியை துறக்க வேண்டுமென அந்த கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் கைது செய்யப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த அந்தோனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகிய இருவரும் தடை பட்டியலில்...

ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இன்றி பிரவேசிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாத அணுகலை பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டம் உடன் அமுலுக்கு வருவதாகவும் 2024 மார்ச் 31 ஆம் திகதி வரை தொடரும்...

யாழில் மாணவி ஒருவர் தனது வீட்டில் குளித்துக்கொண்டிருக்கும் போது அதனை மறைந்திருந்து கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்தார் என சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று ஜன்னல் வழியாக கையடக்க தொலைபேசி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி உடனே சத்தமிட்டுள்ளதுடன், இது...

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் லெபனான் நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள தனது கணவரை மீட்ட , நாட்டுக்கு அழைத்து வருமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் சயந்தன் எனும் இளைஞன்...

போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கட்டார் விமான சேவை ஊடாக டோகா நோக்கி செல்ல முற்பட்ட போது விமான நிலைய அதிகாரிகள் அவரது விசா பரிசீலிக்கப்பட்ட போது விசா போலியானது...

இணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்தார். இணையத்தளங்கள் ஊடாக சூது போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் இளைஞர்கள் பல இலட்ச ரூபாய்க்களை முதலீடு செய்து அவற்றை இழந்து வருகின்றனர். விளையாட்டின் அறிமுகத்தின் போது...

கொத்மலை வெவத்தென்ன கிராமத்தை அச்சமூட்டும் வகையில் பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம சத்தம் குறித்து கிராம மக்கள் அச்சம் கொள்ள எந்த காரணமும் இல்லை என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அப்பகுதியில் கண்காணிப்புப் பயணத்தில் ஈடுபட்டிருந்த மூத்த பேராசிரியர் கூறுகையில், பூமியில் உள்ள ஓட்டை வழியாக...

நாளையதினம் வடக்கு கிழக்கு முழுவதும் ஹர்த்தாலினை அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பேருந்துகளின் சேவையானது எவ்வாறு அமையும் என எதிர்வுகூற முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில், பாடசாலைகளில் தவணைப் பரீட்சை இடம்பெற்று வருகிறது. தரம் 6-9 வரையான மாணவர்களுக்கு வலய ரீதியிலான பரீட்சையும், தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு மாகாண ரீதியிலான பரீட்சையும்...

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. “ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம்” “ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படடது

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மாங்குளம் புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதங்கள் உட்பட்ட அனைத்து புகையிரதங்களும் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. முறிகண்டி மற்றும் மாங்குளம் ஆகிய இரண்டு புகையிரத நிலையங்களில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் புகையிரத சேவைகளை பெற்று வருகின்றனர். இந்த இரண்டு புகையிரத நிலையங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுக்கான புகையிரத சேவைகளை...

வடக்கு – கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். உயிரச்சுறுத்தல் காரணமாக நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியமை குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவதை சுட்டிக்காட்டியும், தமிழ்த் தேசிய கட்சிகள்...

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் வடக்கு, கர்நாட்டுக்கேணி பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டம் நாசமாகியுள்ளது. இதனால் யானைகளின் அட்டகாசத்தை நிறுத்த தமக்கு வழிவகை செய்யுமாறு கோரி குறித்த கிராம மக்கள் நேற்று புதன்கிழமை (18) அப்பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர். குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதி மக்களால் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு...

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நாளை வெள்ளிக்கிழமை (20) முதல் நிறுத்தப்படும் என்று இந்திய துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 14 ஆம் திகதி ஆரம்பித்ததது. இந்தக் கப்பலில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை...

வடக்கு, கிழக்கு முழுவதும் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி யாழில் இன்று புதன்கிழமை (18) துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கக் கோரி வடக்கு கிழக்கு முழுவதும் துண்டுப் பிரசுர விநியோகம் ஆரம்பிக்கப்கட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி மற்றும்...

யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலைச் சேர்ந்த மேலும் ஜவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

பொது முடக்கத்திற்கு, தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம் என எட்டு கட்சிகள் கூட்டாக கோரியுள்ளன. யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்து, 75 வருடங்கள் கடந்து விட்ட போதிலும்,...

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு நேற்று (17) புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது குருந்தூர்குளம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். கடந்த மாத இறுதியில் குருந்தி ராஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் பகுதிக்கு சொந்தமில்லாத காணியில் இருந்து 3...

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு தமிழரசுக்கட்சி பூரண ஆதரவு அளிக்கவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியும் நீதவானாகவும் இருந்த திரு சரவணராஜா, தனது நீதித்துறை கடமைகளை செய்த காரணத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மே 18 நினைவுத் தூபியை மீண்டும் அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு பல தரப்புகளும் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரும், விசுவமடு மற்றும் கட்டுடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமகன்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இருவருமாக மேற்கொண்ட முறைப்பாடுகளையடுத்து அது தொடர்பில் தீவிர விசாரணைகள்...

All posts loaded
No more posts