- Wednesday
- July 30th, 2025

குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை மேற்கொள்ளும் நெடுந்தீவு பயணிகள் படகுகளிற்கே இறங்கு துறையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், நேர அட்டவணைப்படி சீராக இறங்கு துறையில் படகுகள் தரித்து மக்களுக்கு அசௌகரியமற்ற சேவை வழங்குவதை ஒழுங்குபடுத்தி...

இலங்கைக்கு வருகை தந்துள்ள ‘உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட்‘ தலைமையிலான குழுவினர் இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த குழுவினர் உலக வங்கியின் நிதியுதவியில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தைப் பார்வையிட்டனர். இவ்விஜயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,...

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் 20 மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணை எடுத்து கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இன்றையதினம் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ அவர்கள்...

கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மறுபுறம் சீனா போன்ற நாடுகளிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறும் நிலையில் அது குறித்து விழிப்படைய வேண்டும் என்றும் இல்லாவிட்டால்...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியவருகிறது. பலநோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களப் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வெற்றிடங்களுக்குப்...

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளைய தினமும் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த போராட்டமானது தமது வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருளின் அளவை அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின்...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நவிண்டில் மற்றும் செம்பியன்பற்று பகுதியில் இராணுவ முகாமில் படையினர் நடாத்தும் சிகை அலங்கரிப்பு நிலையங்களை தடை செய்து எமது வாழ்வாதாரத்திற்கு உதவுங்கள் என யாழ். மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் கூட்டுறவுச் சங்க பிரதிநிதி கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ்...

அதிகளவு போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை கழிப்பறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பி வரவில்லை. இந்நிலையில்...

காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால், காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது. அது தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த 33 வருட காலத்திற்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதியில் இருந்து...

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்படவுள்ளது. மேலும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் தீப்பந்த ஊர்வல போராட்ட பேரணியொன்று நேற்று வியாழக்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். நல்லூர் பகுதியிலுள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பந்த ஊர்வல பேரணியானது இளங்கதிர் சனசமூக நிலையம் வரை சென்று...

யாழ்ப்பாணத்தில் கேஸ் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை (26) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 கேஸ் சிலிண்டர்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நகர் பகுதி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகள், உணவகங்களில் கேஸ் சிலிண்டர்கள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்த நிலையில், அது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவு...

பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஐனாதிபதி மாளிகை கட்டடத்தை உரிய நடைமுறைகள் அனுமதிகள் பெறப்படாது எவ்வாறு தனியாருக்கு வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நேற்று (26.10.2023) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஐனாதிபதியின் இந்தச் செயற்பாடு...

இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்ட 4 பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பக்கவாதம் தொடர்பான சங்கத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணரான ஹர்ஷ குணசேகர விடுத்துள்ளார். ஒருவருக்கு ஒருமுறை பக்கவாதம் ஏற்பட்டால், அவர்களில் 25 வீதமானவர்களுக்கு மீண்டும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக நரம்பியல் ஹர்ஷ...

யாழில் இயங்கும் சட்டவிரோத மதுபான சாலைகள் மற்றும் அவை குறித்த முழுமையான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டவிரோத மதுபான சாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள்...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டு திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 8 திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் (26) ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்குவதற்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி...

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் கிராமத்தின் வீதியில் இளம் குடும்பஸ்தரின் சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நவரத்தினராசா மதுஸன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சடலம் நேற்று (25) இரவு 8.30 மணியளவில் பொது மக்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது....

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று(26) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்று(26) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் பிரதி ஆணையாளர் நாயகம் லசிக சமரகோன் தெரிவித்தார். இதேவேளை, தவணைப் பரீட்சைகள் நடைபெறுவதனால் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் விடைத்தாள்...

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 1,000 ரூபாவாக இருக்க வேண்டும் என இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத்...

இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையினால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்பு செய்யமுடியா திருப்பதன் காரணமாக அவர் தனது பதவியை துறக்க வேண்டுமென அந்த கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....

All posts loaded
No more posts