- Wednesday
- July 30th, 2025

தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து, புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இப்புதிய சமூக புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் இடம்பெற்றுவரும் தவறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் விதமாகவே இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் வைத்தியசாலைகளிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய...

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்...

மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 40 பேர் அகால மரணமடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 பேர் உயிரிழப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. மதுவின் வருமானத்தை விட மதுவினால் நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார சேதம் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது. கடந்த 2015ம்...

கிராம உத்தியோகத்தர் பதவிக்கு சுமார் 3000 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சித் திட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர்...

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை (03) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இன்று காலை 8 மணியிலிருந்து நாளை சனிக்கிழமை (03) காலை 8 மணி வரை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது வைத்திய அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாவட்ட காணி பதிவுத் திணைக்களத்தின் நிகழ்நிலை (online) ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை (online) சேவை ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும், யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தின் ஊடாக அந்த சேவைகளைப் பெற...

தனது வீட்டை அரசியல் கட்சியிடம் இருந்து மீட்டுத் தருமாறு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்த அவர் அளித்துள்ள முறைப்பாட்டில் ”யாழ்ப்பாணம் , சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டில் அரசியல் கட்சி ஒன்றின் மக்கள் தொடர்பு அலுவலகமொன்று இயங்கி வருகின்றது. குறித்த கட்சியினரை வெளியேறுமாறு நான் பல தடவைகள் கோரிய...

யாழில் ஆலய வழிபாட்டுக்குசெல்லும் பெண்களைக் குறிவைத்து அண்மைக்காலமாக திருடர்கள் தமது கைவரிசைகளைக் காட்டிவருகின்றனர். அந்தவகையில் இன்று ஆலய வழிபாட்டுக்குச் சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு அவரிடமிருந்து 10 பவுண் தங்க நகைகள் மற்றும், 7 கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்றையும்...

நேற்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டது. அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழீழ வுடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்துருந்தார்....

இன்று முதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக குறைந்துள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல்3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒடோ டீசல்...

யாழ்ப்பாணத்தில் Pick Me செயலி ஊடாக கிடைக்கப்பெற்ற வாடிக்கையாளரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது , தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகேயே நேற்றையதினம் இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் நின்று ஒருவர் “Pick...

எரிபொருட்களின் விலைகளில் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் 9 ரூபாய் குறைந்து 356 ரூபாவிற்கு விற்பனையாகின்றது, ஒக்டேன் 95 பெட்ரோல் 3 ரூபாவால் அதிகரித்து 423 ரூபாவிற்கு விற்பனையாகின்றது, இதேவேளை ஒட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரித்து 356 ரூபாவிற்கு விற்பனையாகின்றது, மேலும் மண்ணெண்ணெய்...

கொடிகாமம் – பருத்தித்துறை பயணிகள் பஸ்ஸொன்று இன்று (31) காலை முள்ளிப்பகுதியில் வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. பயணிகளுடன் கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை சாரதியின் நித்திரை காரணமாக பஸ் தடம்புரண்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக...

நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன் நேற்றைய தினம் (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கை சேர்ந்த குணராசா தனுஷன் எனும் 25 வயது நிரம்பிய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞனின் உறவினர்கள் வெளியூரில் வசிக்கும் நிலையில் அவர்களின் வீட்டினை இளைஞனே பராமரித்து வருவதுடன் , வீட்டின் பாதுகாப்புக்காக அந்த வீட்டில் தங்கியும் இருந்துள்ளார்....

வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும் , தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கல்விக்காக பெருமளவான நிதியை செலவழித்து வருகிறது. இளம் வயதினர் கல்வியில் சிறந்து விளங்கினால் தான் நாடு முன்னோக்கி செல்லும்...

பேஸ்புக் மூலம் காதல் வயப்பட்டு 16 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் திரட்டிய இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார். வட மாகாண இராணுவ முகாமில் பணி புரியும் இராணுவ வீரர் பேஸ்புக் மூலம் பாடசாலைக்கு செல்லும் 16 வயது மாணவியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். அதன் மூலம் , குறித்த...

குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை மேற்கொள்ளும் நெடுந்தீவு பயணிகள் படகுகளிற்கே இறங்கு துறையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், நேர அட்டவணைப்படி சீராக இறங்கு துறையில் படகுகள் தரித்து மக்களுக்கு அசௌகரியமற்ற சேவை வழங்குவதை ஒழுங்குபடுத்தி...

இலங்கைக்கு வருகை தந்துள்ள ‘உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட்‘ தலைமையிலான குழுவினர் இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த குழுவினர் உலக வங்கியின் நிதியுதவியில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தைப் பார்வையிட்டனர். இவ்விஜயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,...

All posts loaded
No more posts