Ad Widget

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் ; கல்வி நடவடிக்கைகள், பரீட்சைகளை பாதிக்குமா?

நாளையதினம் வடக்கு கிழக்கு முழுவதும் ஹர்த்தாலினை அனுஷ்டிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பேருந்துகளின் சேவையானது எவ்வாறு அமையும் என எதிர்வுகூற முடியாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், பாடசாலைகளில் தவணைப் பரீட்சை இடம்பெற்று வருகிறது. தரம் 6-9 வரையான மாணவர்களுக்கு வலய ரீதியிலான பரீட்சையும், தரம் 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு மாகாண ரீதியிலான பரீட்சையும் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் நாளையதினம் பாடசாலையை நடாத்துவதா ? இல்லையா ? என அந்த அந்த கல்வி வலயங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரன்ஸ் ஹர்த்தால் தொடர்பில் வினவிய போது தெரிவித்தார்.

இது தொடர்பில் வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் பிரெக்ட்லியிடம் வினவிய போது,

” ஒரு கல்வி வலயம் பரீட்சையை வைத்து, ஒரு வலயம் பரீட்சையை பிற்போட்டால் அந்த பரீட்சை வினாத்தாள்கள் வெளியாகிவிடும். இதனால் பிற்போடப்படும் பரீட்சைகள் மூலம் பிரயோசனம் இருக்காது ஏனெனில் நாளையதினம் மாணவர்களின் வருகையை வைத்தே பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும்” என்றார்.

இது குறித்து செய்தி வெளியிட்டு மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்திற்கு ஒரு தெளிவான பதிலை வழங்குவதற்காக ஊடகவியலாளர் ஒருவர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் இரண்டு தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் அவர் கூட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் பரீட்சையை நடாத்தினால் பேருந்தில் பாடசாலைக்கு வரும் மாணவர்களால் பாடசாலைக்கு வருகை தர முடியாது இருக்கும். இதனால் அவர்கள் பாதிக்கப்படுவர். இதற்குரிய முடிவை உரிய அதிகாரிகள் ஒருமித்து எடுக்க வேண்டும் என மாணவ சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts