திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் கைது!!

வவுனியாவில் நூதனமான முறையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா சந்தை வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி இரண்டு தொலைபேசிகள் திருடப்பட்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா தீர்க்கப்படாத...

வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஏற்பாடு!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது. வடக்கு மாகா­ணத்­தைச் சேர்ந்த அனைத்­துப் பட்­ட­தா­ரி­க­ளை­யும் ஒன்­றி­ணைத்து இன்று முற்­ப­கல் 9.30 மணி­ய­ள­வில் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து ஆரம்­ப­மா­கும் பேரணி, யாழ்.நகர் நோக்­கிச் சென்று அங்­கி­ருந்து கண்டி வீதி வழி­யாக யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்தை அடை­யும் என்றும், வடக்கு...
Ad Widget

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போதைய தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது நியமனம் தொடர்பான அறிவுறுத்தல்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் இன்று இது பற்றிய உத்தியோக பூர்வ அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வாள் வெட்டு: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களின் போது படுகாயமடைந்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கு இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே கருத்து முரண்பாடு...

ஜனாதிபதியின் கருத்திற்கு தக்க பதில் வழங்குவேன்! சம்பந்தன்

போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துகளுக்கு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் உரிய பதில் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை குறித்து அரச தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துகள்...

மூல்லைத்தீவில் சோகம் : பிறந்து ஒரே நாளேயான சிசுவை தீ வைத்து கொளுத்திய தாய்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் இந்த குழந்தையை பிரசவித்து, எரித்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்....

நல்லூரில் மாடுகளை திருடிய நபர் சிக்கினார் : நையப்புடைத்த மக்கள்

யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் வீதியில் கன்று ஈன்று ஒரு சில நாட்களேயான பசு மாடு ஒன்றினை இறைச்சிக்காக கடத்த முயன்ற நபர் ஒருவர் அப் பகுதி இளைஞர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் குறித்த நபர் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனுடன் வந்த மற்றுமொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளார். இதேவேளை...

நெப்போலியனை நாடுகடுத்தும் ஏற்பாட்டுக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

கடந்த 2001ஆம் ஆண்டு யாழ்.ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன் என்று அழைக்கப்படும் எஸ்.ரமேஸ் மற்றும் மதன் என்று அழைக்கப்படும் நடராஜா மதனராசா ஆகியோரை இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன்...

ஊர்காவற்துறை படுகொலை சந்தேக நபர்கள் 5 இலட்சம் ரூபா பேரம் பேசியதாக குற்றச்சாட்டு

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி, அடையாள அணிவகுப்பின் போது தம்மை அடையாளம் காட்ட வேண்டாம் என தெரிவித்து 5 இலட்சம் ரூபா பேரம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின்...

7ஆம் திகதி வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 7ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 7ஆம் திகதி காலை 8 மணிமுதல் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை இளைஞர்களின் இளமைக்காலம் பேஸ்புக்கில் கரைகிறது!

“பேஸ்புக்கில் (FACEBOOK) அடிமையாகி இருப்பதனால், இலங்கை இளைஞர்களின் பெறுமதிமிக்க இளமைக்காலம் கரைந்தே போய்விடுகின்றது” என, பிரித்தானியாவின் சரே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். “பேஸ்புக் மட்டுமே சமூக ஊடகமாகும் எனத் தவறாக புரிந்துகொண்டமையால், தங்களுடைய பெறுமதியான இளமை காலத்தை, இலங்கை இளைஞர்கள் இழந்துவிடுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அலைபேசிகளை, சரியானமுறையில்...

அரசாங்க பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான 2017 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை , முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடைவதுடன் இரணடாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை...

வேலணை பிரதேச வைத்தியசாலை புதிய வெளிநோயாளர் கட்டடம் திறப்பு

யாழ்.வேலணை பிரதேச வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளி நோயாளர் பிரிவு கட்டடம் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாகக் கொண்டு GFATM திட்ட உதவியுடன் வேலணை பிரதேச வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு கட்டடம் அமைக்கப்பட்டது. இந்த...

மின்சார கட்டணத்தை உயர்த்துவது பற்றி தீர்மானமில்லை

மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்திவலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் எதிர்காலத்திலும் எதிர்பார்ப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டார். நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவாக இருக்கின்ற போதும், தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு அதிக செலவு ஏற்பட்டாலும் மின்சார விநியோகத்தை...

இலங்கையில் மீண்டும் H1 N1 தொற்று பரவும் அபாயம்

இலங்கையில் எச்1 என்1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து காணப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாத காலத்தில், நாடு முழுவதும், 500ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்திய மாகாணத்தில் எச்.1 என்1 வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய மாகாண சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக...

விமல் மீண்டும் மறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கோட்டை நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் அவரது பிணை கோரிய விண்ணப்பம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக...

வடக்கில் யாழ் மாவட்டத்திலேயே பால் உற்பத்தி அதிகம் ஆனால், பால் நுகர்வு வெகுகுறைவாக உள்ளது : பொ.ஐங்கரநேசன்

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் யாழ் மாவட்டத்திலேயே கூடுதலான அளவு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், பால் நுகர்வு மிகக் குறைவாக உள்ளது. பால்மாவே மிக அதிகஅளவில் நுகரப்படுகிறது. இதற்குப் பால்மா நிறுவனங்களே அடிப்படைக் காரணம் என்று வடக்கு கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். தென்மராட்சி சரசாலையில் நேற்று கிராமிய அமைச்சின் கீழ் உள்ள மில்கோ...

வடக்கில் 44 மாதிரிக் கிராமங்கள்!

வடக்கு மாகாணத்தில் 44 மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த கிராமங்களில் 2500 வீடுகள் அமைக்கப்படவுள்ளன எனவும் இதற்கான 1267 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தும் அனைவருக்கும் நிழல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் இது அமுல்படுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய...

யாழில் மீண்டும் பயங்கர வாள்வெட்டு!

சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று இரவு மட்டுவில் வடக்கு முத்துமாரி அம்பாள் ஆலயதிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இனந்தெரியாத நான்குபேர் வீதியோரத்தில் கதைத்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிவிட்டு...

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம்: வடக்கு முதல்வர்

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட்பீறியுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த...
Loading posts...

All posts loaded

No more posts