வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனைத்துப் பட்டதாரிகளையும் ஒன்றிணைத்து இன்று முற்பகல் 9.30 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகும் பேரணி, யாழ்.நகர் நோக்கிச் சென்று அங்கிருந்து கண்டி வீதி வழியாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை அடையும் என்றும், வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் உடனடியாகத் தீர்வுகள வழங்கவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாண மாவட்டச் செயலரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.