- Saturday
- August 22nd, 2026
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும் சொல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அறிவித்தலையடுத்து அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த சனிக்கிழமை (17) கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் உலக தமிழ் சங்கம் அன்பளிப்புச் செய்த திருவள்ளுவர் சிலை...
வடக்கு மாகாணத்தின் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஜனநாயக மரபுகளைகாப்பாற்றி பதவி விலக வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக தனியார் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவைத்தலைவருக்கு அரசியல்ரீதியான மரபுகளும், நடைமுறைகளும் நிச்சயம் தெரிந்திருக்கும். வடக்கு மாகாணசபை பிழையான...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் துணுக்காய் பாண்டியன்குளம் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் 20-06-2017 சமகால அரசியல் நிலை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடகங்களுக்கு கூறிய கருத்துக்களை கீழ் உள்ள காணொளியில் பார்வையிடலாம். https://www.youtube.com/watch?v=nAkew2i-oTM&feature=youtu.be
யாழில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கணவன் மனைவி உட்பட நால்வர் கோப்பாய் பொலிசாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு உள்ளனர். இருபாலை பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரவு வீடு புகுந்த இருவர் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். அது தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய்...
அவைத் தலைவர் என்ற கடமையில் இருந்து நான் நடுநிலை தவறியதாக இதுவரை யாரும் சொல்லவில்லை. நான் அப்படி நடக்கவும் இல்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை அவைத்தலைவர் ஆளுனரிடம் கையளித்தமை சட்டத்திற்கு முரணானது என வடமாகாண முதலமைச்சர் கூறிய கருத்து தொடர்பில் அவைத்தலைவரிடம் வினாவிய போதே அவர் அவ்வாறு...
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து இதுவரை எழுத்து மூலம் தெரியப்படுத்தப்படவில்லை என, ஆளுநர் ரெஜினோல் குரே குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சம்பந்தன் தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ள போதிலும், எழுத்து மூலம் இதுவரை அறிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு எதிராக அண்மையில்...
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாகாண அவைத்தலைவர் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளது. கடந்த 14ஆம் திகதி, வடமாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதான விசாரணைக்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் சபையில் சமர்ப்பித்தார். இதன்போது, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர்...
வவுனியா – புளியங்குளம் இந்துக்கல்லூரி அருகாமையில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் இந்த சிலையை திறந்துவைத்தார். குறித்த திருவள்ளுவர் சிலையை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் அமைப்பில் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதன்போது, புதிய அரசியல் அமைப்பில் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். புதிய அரசியல் அமைப்பின்...
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணங்களை 6.28 சதவீதமாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது குறைந்தபட்ச பேருந்து கட்டணமாக உள்ள 9 ரூபா, ஜூலை மாதம் முதலாம் திகதியில் இருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது....
கந்தளாய் - பேரமடுவ பிரதேசத்தில் 10 வயது மாணவி மீது வீதியில் வைத்து ஊசி ஏற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.குறித்த மாணவி கடந்த 17 ஆம் திகதி மேலதிக வகுப்பொன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய வேளை உந்துருளியில் பின்தொடர்ந்து வந்த இருவர் இவ்வாறு அவர் மீது ஊசியை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.உந்துளியில்...
இம்மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதாகவும், இதனால், ஏற்படும் வெள்ளம் மற்றும் மண் சரிவு என்பவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற, முன் ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாபா தெரிவித்துள்ளார். இந்த தயார்படுத்தல்,...
உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன ஒருமனதாக தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய...
கடன் அட்டைகளுக்காக அறவிடப்படுகின்ற வட்டி வீதத்தினை, மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கையினை வணிக வங்கி மேற்கொண்டுள்ளது. இதனால் வருடாந்தம் நூற்றுக்கு 24 வீதமாக்கப்பட்டிருந்த வட்டி வீதம், எதிர்வரும் ஜீலை முதலாம் திகதி முதல் 28 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.
தொடருந்துடன் ஆபத்தான வகையில் செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது என்று ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். ரயில்வே கட்டளை சட்டத்துக்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள் இவ்வாறு ஆபத்தான செல்பி புகைப்படங்கள் எடுக்க கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புகைப்படங்கள் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான...
வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்துள்ளார்.தொலைபேசி ஊடாக அவர் இதனைக் கூறியதாக யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் அந்த கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.மாகாண அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை...
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று காலை 8.30 முதல் மாலை 6.00 மணிவரை மின்சார விநியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தின், மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை,...
விசாரணை குழுவுக்கு எதிராக நீதிமன்றை நாடவுள்ளதாக வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , விசாரணை அறிக்கையில் எந்தவெரு இடத்திலும் வடக்கு விவசாய அமைச்சர் ஊழல் மோசடி செய்தார் என்றோ இலஞ்சம்...
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக, கடந்த வியாழக்கிழமை கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, நேற்று (19) வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது. வடமாகாண சபையைச் சேர்ந்த அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்த நால்வரில் இருவரை, அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்யுமாறும், இருவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,...
தனியார் வைத்தியசாலைகள் , இரசாயன கூடங்களில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை மற்றும் டெங்கு இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணம் நேற்று முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் வேண்டுகோளுக்கமைவாக நேற்று முதல் குறைக்கப்படுகின்றது. இதற்கமைவாக தனியார்வைத்தியசாலைகளில் முழுஅளவிலான இரத்த பரிசோதனைகளுக்கு 250 ரூபா ( Full...
Loading posts...
All posts loaded
No more posts
