இலங்கையின் முதலாவது பெண் நீதிபதியான சிவகாமசுந்தரி காலமானார்

இலங்கையின் முதலாவது பெண் நீதிபதியான சிவகாமசுந்தரி தனது 81 ஆவது வயதில் நேற்று நியூசிலாந்தில் காலமாகியுள்ளார். யாழ்.புலோலி மேற்கைப் பிறப்பிடமாக கொண்ட இவர் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியில் கற்று சட்டதுறைக்குள் பிரவேசித்து 1972 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வழக்கறிஞ்ஞர் ஆனார். பின்னர் 1988 ஆம் ஆண்டு, மாவட்ட நீதிபதியாக...

இரணைதீவை விடுவிக்க கோரி ஏ-32 வீதியில் மறியல் போராட்டம்

பூர்வீக நிலமாக இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்;தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான பதிலை அரசு வழங்காத நிலையில் குறித்த மக்கள் ஏ-32 பூநகரி மன்னார் வீதியினை மறித்து போராட்டத்pல் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக கடல் வளம் கொண்ட பகுதியாகக் காணப்படும் இரணைதீவில் வாழ்ந்த மக்கள் கடந்த 1992ம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து...
Ad Widget

வடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற நிதி நிறுவனங்களின் கொள்கை என்ன? டக்ளஸ் தேவானந்தா

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சில நிதி நிறுவனங்கள் குடும்பங்களை குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்களை மாத்திரமே இலக்கு வைத்து, இந்த நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதன் பின்னணி என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றய தினம் (22) நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடயம்...

பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை : முழங்காவில் பெரும் பதற்றம்

சுமார் முந்நூறுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 17 ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக்...

ஆசிரிய நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பில் அதிரடி நடவடிக்கை : ஜனாதிபதி

ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியகள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பொலநறுவை, சுங்காவில முஸ்லிம்...

சிறிலங்காவின் ரூபா பாரிய வீழ்ச்சி!

வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 155 ரூபாவைத் தாண்டியுள்ளது. சிறிலங்கா மத்திய வங்கி நேற்று வெளியிட்டுள்ள வங்கிகளுக்கு இடையிலான வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, விற்பனை பட்டியலில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 155.01 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதேவேளை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி, 151.21 ரூபாவாக...

மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காலவரையறையற்ற போராட்டம்

கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிமுதல் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் என நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டம் காரணமாக நோயாளர்கள் பெரிதும்...

`மெர்சல்’ பெயர் சூட்டியது ஏன்? : படக்குழு விளக்கம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு `மெர்சல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே `மெர்சல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது போஸ்டரும் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், விஜய் படத்துக்கு மெர்சல் பெயர் சூட்டியது ஏன்? என்பது குறித்து ரசிகர்கள்...

சர்ச்சைகளின் பின்னர் நடைபெறும் வட. மாகாண சபை அமர்வு

வடக்கு மாகாண சபையின் 97ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் கட்டத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறும் இந்த அமர்வில், நகை அடகு பிடிப்பவர்களுக்கான நியதிச்சட்டம் குறித்த குழு நிலை விவாதம் நடைபெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் அண்மைய காலமாக...

வடமாகாண சபைப் பிரச்சினை கிரிக்கட் போன்றது! : ஆளுநர் ரெஜினோல்ட் குரே

வடமாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை, கிரிக்கெட் போட்டி போன்று இருந்தது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடமாகாண விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுகளை முதலமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டதுடன் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்ற நிகழ்வுகள், ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (21) மாலை இடம்பெற்றன. இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்...

வடக்கு முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்பட்டது

வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மாகாண சபை உறுப்பினர்களால் உத்தியோகபூர்வமாக ஆளுநரிடம் இருந்து மீளப்பெறப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அஸ்மின் அயூப் ஆகியோர் நேற்று புதன்கிழமை (21) வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் இருந்து மனு ஒன்றினை கையளித்ததன் ஊடாக நம்பிக்கை...

சில வீரர்கள் இந்தியாவிற்காக விளையாடுகின்றனர் : விளையாட்டுத்துறை அமைச்சர்

சில இலங்கை வீரர்கள் உடற்தகுதியை பெற்று இந்தியாவில் கிரிக்கட் போட்டிகளில் கலந்து கொள்வதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக தெரிவிக்கையில், சிக்கார் தவான் 100க்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்த பின்னர் களைப்பின்றி களத்தடுப்பில் ஈடுபட்டார். இதற்கு காரணம் அவர்களது உடற்தகுதியாகும் என்று...

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக காவல்துறை விசாரணை!

வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காக் காவல்துறை அறிவித்துள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இனங்களுக்கெதிராக கருத்துக்கள் வெளியிட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து அவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவர் பேசிய பேச்சுக்கள் இனவாதத்தைத் தூண்டியுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களமே முடிவெடுக்கவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை...

வடமாகாண அவைத்தலைவரின் சிம்மாசனம் 90ஆயிரம் ரூபா!

வட மாகாண அவைத்தலைவருக்கென புதிதாக வடிவமைக்கப்பட்ட சிம்மாசனத்தின் பெறுமதி 90ஆயிரம் ரூபாவெனத் தெரியவந்துள்ளது. அண்மையில் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு சோழ மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிம்மாசனம் போன்ற ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது அச்சிம்மாசனத்தின் பெறுமதி 90ஆயிரம் ரூபாவெனவும், கடந்த 14ஆம் நாள் அமர்வில் சி.வி.கே சிவஞானம்...

வடமாகாணத்தைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டு! : இராதாகிருஷ்ணன்

தமிழர்கள் செறிந்துவாழும் வடமாகாணத்தை நாம் நழுவவிட்டால் ஏனைய மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கும் சாத்தியக்கூறு உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் மதிப்புக்குரிய ஒரு தலைவர், அதேபோல் இரா.சம்பந்தனும் மரியாதைக்குரியவர். இந்நிலையில் இவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த பல்வேறு சக்திகள் முனைகின்றன. மட்டக்களப்பு பன்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்...

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மேலதிக அமைச்சுப் பொறுப்புக்கள்!

வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சராக தற்காலிகமாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் முதலமைச்சர் நேற்று(புதன்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் குருகுலராஜா இருவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளமையை நிரூபித்து விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது....

மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை வீச்சு: 30 பேர் காயம்

சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல்களினால் காயமடைந்த 30 பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரி பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (புதன்கிழமை) சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் சுகாதார...

காணாமல் போனோர் விடயத்தில் ஈ.பி.டி.பி.க்கு நேரடி தொடர்புண்டு: சரவணபவன்

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் காணாமல் போனோர் குறித்த சம்பவத்திற்கும் நேரடி தொடர்புள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் 450 பேர் வரை காணாமல் போயுள்ளனர்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில்...

பிணையில் விடுவிக்கப்பட்ட ஞானசார தேரர் கைது

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் பொலிஸ் புலானாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகடை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் மீளவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தற்போது தேரரை புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஞானசார தேரர்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து, ஞானசார தேரரை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார். நீதிமன்றத்தை அவமதித்ததாக ஞானசார தேரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை, தேசிய பல சேனா அமைப்பின்...
Loading posts...

All posts loaded

No more posts