- Sunday
- August 23rd, 2026
காரைநகர் கடற்பரப்பில் நேற்று(28) ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காரைநகர் கடற்படையினர் தெரிவிக்கின்றனர் குறித்த ஆண் யார் என அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் உருக்குலைந்த நிலையில் உள்ளது. குறித்த சடலத்தை அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணையினை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படை வரலாற்றில் முதலாவது தொழில்நுட்பக் கப்பலை இந்தியாவிடம் இருந்து இலங்கை கொள்வனவு செய்துள்ளது. இதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர், இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு குறித்த கப்பலை நிர்மாணிப்பதற்காக இலங்கையால் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது....
வடக்கு மாகாணசபை மூன்றரை வருடங்களைக் கடந்துவிட்ட போதும் ஊழல்கள் செய்ததைத் தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை. பிரேரணைகளை நிறைவேற்றியுள்ளதே தவிர வினைத்திறனாகச் செயற்படல்லை என்று சிலரால் மாகாணசபையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவர்கள் மக்கள் மத்தியிலும் இதே கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். வடமாகாண சபை வினைத்திறன் அற்றதென்று இவ்வாறு விமர்சிப்பவர்கள் திட்டமிட்டு அரசியல் உள்நோக்கத்துடனேயே அதனைச் செய்து...
This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மிக மோசமாக செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மருத்துவ தேவை உடையவர்களை...
எதிர்பாராத விதமாக நாட்டில் இன்றைய தினம் மின்சாரம் தடைப்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின்சார உற்பத்தியில் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு ஓர் நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளது. ஒரு பகுதியில் அதிகளவான மின்சாரம் தேவைப்படும் போது அங்கு மின்சார தடை ஏற்படும் என மின்சாரசபையின்...
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தம் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால் பயிர்செய்கை நிலங்களிற்கு நீர் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரணைமடு திட்ட விவசாயிகள் இணைந்து குளத்தின் பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தி நீரை...
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயத்தை தாம் வலியுறுத்தியதாக முன்னணியின் தவிசாளர் தெரிவித்தார். இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன்...
ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ”ராமன் மக்சாசே” விருது இலங்கைத் தமிழ்ப் பெண் கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்படவுள்ளது. 82 வயதுடைய இவர் இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துள்ளார். இந்த விருது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக பிலிப்பைன்ஸில் வைத்து வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. 1957 காலப்பகுதியில் பிலிப்பைன்ஸின் அரச...
மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் ஆணைக்கு அமைவாக மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் பெறுநர் குழுவால் கையேற்கப்பட்டுள்ளதாக, சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் திருமதி யு.யசோதா அறிவித்தார். “மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் ஆணையின் பிரகாரம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெறுநர்களாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் பதிவாளர், இந்துக் குருமார் ஒன்றியத்தின் 2 மூத்த குருக்கள், யாழ்ப்பாண மேலதிக...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள கடற்படை அதிகாரி பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரவிராஜின் கொலை வழக்கை மீள விசாரிக்குமாறு கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி,...
வவுனியாவில் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்சி சார்ந்த ரீதியில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாக நேற்று மாலை 4 மணியளவில் பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் ஒன்றிணைந்த அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர். வவுனியா பாரதிபுரம் பகுதியில் பொருத்து வீடு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 20 பேருக்கு பொருத்து வீடு வழங்குவதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு...
வடமாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 48 இலட்சம் ரூபாவும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 21 இலட்சம் ரூபாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 30 இலட்சம் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு மூன்றரை இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டிருப்பதாக...
அத்தியாவசிய சேவைகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துவது ஜனநாயக விரோத செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அத்தியாவசிய மக்கள் சேவைகள் சட்டத்தின் கீழான ஏற்பாடுகள் மீதான விவாதத்தில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த சேவைகளை முடக்குவதன் மூலம் அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியாது. கூட்டு எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் கும்பல், வேலை...
மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலு சக்தி அமைச்சு மக்களை கேட்டுள்ளது. நீர் ஏந்து பிரதேசங்களில் பொதியளவு மழைபெய்யாததினால் மின் உற்பத்திக்கான நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது. தொடர்ச்சியான மின்விநியோகத்திற்காக மக்களின் ஒத்துழைப்புகள் தேவை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தப்படும் மாலை 6.00 மணி முதல்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டமையானது, தமிழ் மக்களின் அரசியலை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றதென அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். குறித்த தடை நீக்கம் தொடர்பாக கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இனவாதத்தை பாதுகாக்கும் அரசாங்கம் இதனை பாதிப்பாக...
யாழ். திருநெல்வேலி கலட்டி சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புலோலி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தினேஸ்குமார் சலோஜிதன் என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கலட்டிப் பகுதியில் வேலைக்காக வந்த குறித்த இளைஞரை நேற்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த...
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அமைதி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மக்கள், நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு...
சில சில சச்சரவுகள் இருந்தாலும் இதுவரை காலமும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சபை அமர்வுகளை சுமூகமாக முன்னெடுத்து செல்ல ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 100ஆவது சபை அமர்வு இன்றையதினம் வியாழக்கிழமை காலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்ற போதே அவைத்தலைவர் அவ்வாறு தெரிவித்தார்....
யாழில்.பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது இனம் தெரியாதநபர்கள் தாக்குதலினை மேற்கொண்டு உள்ளார்கள். யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிங்கராஜா (வயது 28) என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நெல்லியடியில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்று விட்டு மீண்டும்...
Loading posts...
All posts loaded
No more posts
