Ad Widget

வடக்கு முதல்வரை சந்தித்தார் ஆனந்தசங்கரி!

வடமாகாண முதலமைச்சர், தமது கட்சியின் தலமையை ஏற்க வந்தால், அதனை வரவேற்க தயாராக இருப்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் இல்லத்தில் நேற்றையதினம் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாண முதலமைச்சரை விமர்சிப்பதற்கு இங்குள்ள சிலருக்கு தகுதியில்லை. இந்த சந்திப்பில் நாங்கள் அரசியல் பேசவில்லை அவருக்கு ஆறுதலாக சந்தித்து கலந்துரையாடினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கட்சிக்கு அவர் தலைமையேற்க வருவார் என்றால் அவரை தாங்கள் வரவேற்க தயாரக இருக்கின்றோம் எனவும் அவர் ஒருவருக்கே தலமைதாங்குவதற்கான தகுதி இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய கட்சி ஆரம்பிக்க போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை எனவும் தன்னுடைய கட்சி பழைய தமிழ் தலைவர்களால் உருவாக்கப்பட்ட பழமையான கட்சி. அந்த கட்சியை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கு முதலமைச்சர் தயார் என்றால் வரவேற்போம் எனவும் இதனை தாம் எப்போதே அவரிடம் சொல்லிவிட்டோம் எனவும் இந்த சந்திப்பில் அது பற்றி எதுவும் கதைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். .

அதேவேளை இந்த சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்..

இது அரசியல் சந்திப்பில்லை எனவும் தானும் ஆனந்தசங்கரியும் 55 வருடங்களுக்கு மேலாக நண்பர்கள் எனவும் தன்னைப்பற்றி வந்த விமர்சனங்களை பத்திரிகைகளில் படித்துவிட்டு இந்த வயதிலும் வேகம் கொண்டு தன்னை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தன்னைப்பற்றி தவறாக பேசுவதைக்கண்டு அவரால் பொறுக்க முடியவில்லை எனவும் அதனால் தன்னை தேற்றுவதற்காகவே சந்தித்தார் எனவும் முதலமைச்சர்தெரிவித்தார்.

Related Posts