சிறுவனைப் பயன்படுத்தி துணிகரக் கொள்ளை: மூவர் கைது!

வவுனியாவில் 10 வயதுச் சிறுவனைப் பயன்படுத்தி தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா வேப்பங்குளம், பட்டக்காடு, நெளுக்குளம் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கருதப்படும் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் வயது சிறுவன் மற்றும் அவனது சகோதரரான 18...

டெனிஸ்வரனுக்குப் பதில் விந்தன்: ரெலோ தீர்மானம்!

வட.மாகாண சபையின் புதிய போக்குவரத்து அமைச்சராக விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) பரிந்துரை செய்துள்ளது. வவுனியாவில் நேற்று முன்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்டக் குழுக்கூட்டத்தில் டெனிஸ்வரன் கட்சியிலிருந்து விலக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே தமிழீழ விடுதலை இயக்கம் டெனிஸ்வரனுக்குப் பதிலாக விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்குத் தீர்மானித்துள்ளது. எனினும் தான் ஒரு...
Ad Widget

எதிர்ப்புக்களை மீறி சைட்டத்திற்கு புதிய மாணவர்கள் அனுமதி!

சைட்டம் மருத்துவ நிறுவனத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றாலும் இன்னும் 300 புதிய மாணவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுமதிக்கவுள்ளதாக சைட்டம் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் நெவில் பர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த 200 மாணவர்களும் வெளிநாட்டு மாணவர்கள் 100 பேரும் உள்ளடங்கலாக 300 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சில...

நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!!!

இலங்கை நீதித்துறையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு விசேட அதிரடிப்படையினருடன் கூடிய விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கடமை நேரத்தில் நீதிமன்றத்திலும், அவருடைய வாசஸ்தலத்திற்கும் இந்த விசேட பாதுகாப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. நல்லூர் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தையடுத்து, நீதிபதி இளஞ்செழியனுடன் உடனடியாகத் தொடர்பு கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தச் சம்பவம் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்ததுடன், அவருடைய...

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கு வரி

குளிர்பானங்களில் சேர்க்கப்படும் மேலதிக சீனிக்கு வரி அறவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பிற்கமைவாக 100 மில்லி லீற்றர் குளிர்பானத்திற்கு சேர்க்க வேண்டிய அதிகூடிய சீனியின் அளவு 6 கிராம் ஆகும். அதற்கு மேலதிகமாக சேர்க்கப்படும் ஒவ்வொரு கிராம் சீனிக்கும் ஒரு ரூபாய்...

யாழில் இந்திய பிரஜைகள் 27 பேர் கைது!

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து சட்டவிரோதமான முறையில் வெவ்வேறு வியாபாரங்களில் ஈடுபட்ட 27 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் இரகசிய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக பட்டதாரி ஒருவரும்...

மோட்டார் வாகன இலக்கத் தகடுகளை இணையத்தளத்தில் பார்வையிடலாம்

யாழ்.மாவட்­டத்தில் இது­வரை காலமும் பொது மக்கள் தாங்கள் விண்­ணப்­பித்த வாகன இலக்கத் தக­டுகள் மோட்டார் போக்­கு­வ­ரத்து திணைக்­க­ளத்­திற்கு கிடைக்­கப்­பெற்­றமை தொடர்பில் மோட்டார் போக்­கு­வ­ரத்துத் திணைக்­க­ளத்­தி­லேயே பார்­வை­யிட்டு வந்­தனர். இதனை இல­கு­வாக்கும் முறையில் இணைய சேவை ஊடாக தற்­போது யாழ்.மாவட்ட செய­லக உத்­தி­யோ­க­பூர்வ இணையத்­த­ளத்தில் பொது மக்கள் பார்­வை­யி­டு­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இச் சேவை­யினை www.jaffna.dist.gov.lk எனும்...

கிளிநொச்சியில் நெற்களஞ்சியங்கள் திறந்து வைப்பு!

கிளிநொச்சி இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தினுடைய புனரமைப்புப்பணிகள் இபாட் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதன் ஒரு அங்கமான நெற் களஞ்சியங்கள், நெல் உலரவிடும் தளங்கள் போன்ற கட்டுமானங்களும்...

கண்டியில் மரம் நடுகை செய்யும் கோஹ்லியும் அனுஷ்கா ஷர்மாவும்!!!

இலங்கைக்கு சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து தற்போது ஒரு நாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்றது. இந்த நிலையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, பாலிவூட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து இலங்கையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கு அவசியமான மரக்கன்றுகளை நடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குறித்த செயற்பாட்டுக்காக கண்டியில் அவர்கள்...

முன்னாள் போராளிகள் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி மூன்று முன்னாள் போராளிகள் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரத்தில் சுமார் 20 முன்னாள்...

பரீட்சை வினாத்தாள் வெளியான சம்பவம்: ஆசிரியரிடம் விசாரணை

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு முன்னர் வெளியாகியதாக கூறப்படும் இரசாயனவியல் வினாப்பத்திர வினாக்கள் மூன்று தொடர்பில் விசாரணை நடாத்துமாறு பரீட்சைகள் திணைக்களத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. உதவிப் பொலிஸ் அதிகாரியொருவரின் கீழ் இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துண்டுப்...

அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள்

நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர், அன்றைய மாதாந்தக் கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்தத் தவறிய...

20 ஆயிரம் பட்டதாரிகள் அபிவிருத்தி உதவியாளர்களாக இணத்துக்கொள்ளப்படவுள்ளனர் : பிரதமர்

20 ஆயிரம் பட்டதாரிகள் அபிவிருத்தி உதவியாளர்களாக இணத்துக்கொள்ளப்படவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் என்னைச் சந்தித்து பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக பேசினார்கள். இதுதொடர்பாக கல்வி அமைச்சருடன் பேசி கிழக்கு மாகாணத்தில் 1700 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம் என்றும் பிரதமர் கூறினார். மட்டக்களப்பு ஏறாவூரில் 96 மில்லியன் செலவில்...

யாழில் ஓரளவு மழை : வளிமண்டலவியல் திணைக்களம்

யாழ்மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மேற்கு , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும். ஊவா மாகாணத்தின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று...

வடக்கு முதலமைச்சருக்கு பட்டதாரி நியமனங்களை பெற்றுக் கொடுக்க முடியவில்லை!

வடக்கு கிழக்கில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் கேட்டு பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்ற போதிலும், வடக்கு முதலமைச்சருக்கு கூட இந்த பட்டதாரி நியமனங்களை பெற்றுக் கொடுக்க முடியாமல் போயிருக்கின்றது என மத்திய மாகாண தமிழ் கல்வி மற்றும் விவாசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான ‘இந்து விழி’...

சித்திரவதைகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு மீண்டும் முதலிடம்

உலகளாவிய ரீதியில் அப்பாவிகளுக்கு எதிரான சித்திரவதைகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. பிரித்தானியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும், ப்ரீடம் ப்ரம் டோர்ச்சர் என்ற அமைப்பின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் அப்பாவி மக்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பான ஆய்வொன்றை குறித்த அமைப்பு...

டெனிஸ்வரனை ரெலோவில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கி வைப்பு!

டெனிஸ்வரனை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கி வைப்பதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கட்சிச் செயலாளர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கட்சியின் உயர் மட்டக் குழுக்கூட்டத்திலேயே மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் உயர் மட்டக் குழுக்கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தான் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை...

பிரச்சனைக்குரிய தகவல்களை அனுப்பும்பட்சத்தில், அனுப்பியவரின் தகவல்களை வெளியிடுவோம்: சராஹா எச்சரிக்கை

சராஹா எனும் செயலி கடந்த சில வாரங்களில்உலகமுழுவதும் அதிக பிரபலமாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் உள்ள நண்பர்களுக்கு மொட்டைக் கடுதாசி போன்று தகவல்களை சராஹா மூலம் அனுப்ப முடியும். இதில் குறுந்தகவலை அனுப்புபவர் யார் என்ற தகவல் குறுந்தகவல் பெறுபவருக்கு தெரியாது. எனினும் சராஹா செயலியில் யார் மெசேஜ் அனுப்புகிறார்கள் என்ற தகவலை இதனை உருவாக்கியவரகள்...

வரி குறைப்பு ஜப்பான் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும்

மோட்டார் சைக்கிள்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரி குறைப்பு இந்தியாவில் தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த வரி குறைப்பு ஜப்பானில் தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜப்பான் மோட்டார் சைக்கிள்களின் விலை அதிகம் என்பதால் மீண்டும் ஜப்பான் மோட்டார் சைக்கிள் சந்தையை உருவாக்குவதே இந்த வரி...

22 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள த.தே.கூட்டமைப்பால் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை

ஜே.வி.பி.யில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து பல விடயங்களை செய்யும்போது 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு சில பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் இருப்பது கவலைக்குரியது என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்தார். ஊழல், மோசடிகள் அற்ற நாடு ஒன்றை கட்டியெழுப்ப அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர்...
Loading posts...

All posts loaded

No more posts