இலங்கையின் முதல் பெண் நீதி அமைச்சராக தலதா அத்துக்கோரள பதவியேற்பு

இலங்கையில் புதிய நீதி அமைச்சராக தலதா அத்துக்கோரள இன்று, வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 54 வயதான தலதா அத்துக்கோரள இலங்கையில் முதலாவது பெண் நீதி அமைச்சராவார். அவர் தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். சட்டத்தரணியான இவர்...

கைதிகளின் கோரிக்கை நிறைவேற்றம் : முடிவுக்கு வந்தது உண்ணாவிரத போராட்டம்

அநுராபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் முன்னெடுத்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட் தந்தை சக்திவேல் தெரிவித்தார். குறித்த மூன்று அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து இன்றும் 5 ஆவது நாளாக நடைப்பெற்று வந்த நிலையிலேயே...
Ad Widget

இராணுவத்தினர் மீது வாள்வெட்டு: அறுவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில், இராணுவ வீரர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே, காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரில் ஒருவர், மேலதிக...

விஜயகலாவை கைது செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால், ‘இதுவா நல்லாட்சி’, ‘நீதியரசர் இளஞ்செழியனை சுட...

வவுனியாவில் பண்டார வன்னியனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றியதை நினைவு கூறும் 214 ஆவது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த அனுஷ்டிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை வவுனியாவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள அவரின் நினைவுத்தூபிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நினைவுத்தூபியினை நிறுவிய வவுனியா சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் மலர் மாலை...

அரச ஊழியர்களின் உரிமையை பறிக்க முடியாது! : சம்பந்தன்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்தில் அரச ஊழியர்களை பாதிக்கும் வகையிலான திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள், தேர்தலுக்கு ஒரு வருட காலத்திற்குள் அரச சேவையில் ஈடுபட்டிருக்க முடியாதென உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது....

உயர்தர பொது அறிவுப் பரீட்சை திகதி மாற்றம்!!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொது அறிவு பாடத்துக்கான பரீட்சையை, 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு, கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது என, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் 2ஆம் திகதி, முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தினத்தை கொண்டாடுவதால், அன்று இடம்பெறவிருந்த மேற்குறிப்பிட்ட பாடத்துக்கான பரீட்சையைப் பிற்போடுமாறு,...

சித்தங்கேணியில் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் காணியொன்றில் உள்ள பாவனையற்ற கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அயலவர்களால் குறித்த சடலமானது கண்டுபிடிக்கப்படடுள்ளது. அருகில் இருக்கின்ற வீடுகளில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக தூர்வாடை வீசியதையடுத்து இது தொடர்பாக தேடிப்பார்த்துள்ளனர். இதன்போது குறித்த காணிக்குள் இருந்த பாவனையற்ற கிணற்றுக்குள் பெண்ணொருவரின் சடலம் இருப்பதும், அதிலிருந்தே துர்வாடை...

தமிழ் இராணுவத்தினர் மீது வாள் வெட்டு தாக்குதல்!!!

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை சேர்ந்த இரண்டு தமிழ் இராணுவத்தினர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இருவரினதும் இடது கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த இராணுவ வீரர்களின் நிலமையில் கவலையில்லை என்றும், வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர்களை...

யாழில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.பண்ணை குறுசடி தீவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும் உயிருடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.பண்ணை குறுசடி தீவில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) சென்ற வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்குண்டு ரி. குயின்சன் (வயது...

சுன்னாகத்தில் ரயில் மோதி இளைஞன் உயிரிழப்பு

காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் சுன்னாகம் பகுதியில் வைத்து தண்டவாளத்தில் நின்ற இளைஞன் மீது மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் நேற்று ( வியாழக்கிழமை) மாலை சுண்ணாகம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு...

இந்திய மீனவர்களை தடுக்க புதிய வழிமுறை : கடற்படை தளபதி

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையை தீர்க்க வித்தியாசமான ஒரு நடைமுறை பின்பற்றப்படும் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் இந்திய மீனவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை...

இலங்கை பொருளாதாரத்தில் வளர்ச்சிஅடைந்துள்ளது : உலக வர்த்தக ஸ்தாபனம்

இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சி காணப்படுவதாக உலக வர்த்தக ஸ்தாபனம் தொவித்துள்ளது. மொத்தமாக 164 நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி பற்றி உலக வர்த்தக ஸ்தாபனம் கவனம் செலுத்தியிருந்தது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக உள்ளதென ஸ்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் தெளிவான வளர்ச்சி தென்படுவதை ஆய்வுகள் புலப்படுத்துவதாக...

வடக்கு மாகாண சபைக்குள் கவனயீர்ப்பு போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு மாகாண சபையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 103வது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற நிலையில், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இக் கவனயீர்ப்பு போராட்டம்...

கிளிநொச்சியில் உதயமானது மலையக மக்கள் ஒன்றியம்

வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தின் கிளிநொச்சி கிளை, நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.பி.நடராஜ் தலைமையில், கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு கிழக்கில் உள்ள மலையக சமூகத்தை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே இவ்வமைப்பின் நோக்கம் என ஒன்றியத்தின் இணைப்பாளர்கள்...

புலிகள் மீளுருவாகும் சூழல் இல்லை: கடற்படை தளபதி சின்னையா

டக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மீள உருவாகுவதற்கான எந்த சூழ்நிலையும் தற்போது இல்லையென புதிய கடற்படை தளபதியான வைஸ் அட்மிரால் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். கடற்படை தளபதியாக பதவியேற்ற பின்னர், நேற்று (புதன்கிழமை) முதன்முதலாக செய்தியாளர் சந்திப்பை நடத்திய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து நாடு முழுமையான சமாதானத்தை நோக்கி நகர்ந்து செல்கின்ற நிலையில்,...

1815 கிராம சேவை உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நேர்முகப் பரீட்சை

நாடு முழுவதும் நிலவும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இடைவெளிகளை நிரம்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்கான நேர்முகப் பரீட்சை மிக விரைவில் நடாத்தப்படவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 1815 பேருக்கான இடைவெளி நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டதாகவும், இதில் ஒரு...

டெங்கினால் பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை : யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

டெங்கு நோய் தொடர்பில்இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். டெங்குத் தொற்றால் பல்கலைக்கழக மாணவனொருவன் இறந்ததைதையடுத்து யாழ்.பல்கலைக்கழத்தின் விஞ்ஞான பீடம் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து இது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தியிடம்...

யாழ்.போதனா வைத்தியசாலை குப்பை தொட்டிகளை திருடியது மாநகரசபை!

டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிச் சுற்றுப்புறத்தை துய்மைப்படுத்துவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையினால் உருவாக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை மாநகரசபையானது இரவோடு இரவாக திருடி சென்றுள்ளது. அத்துடன் வைத்தியசாலையை சூழவுள்ள வீதிகளிலும் கழிவு நீர் வாய்க்கால்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை மாநகரசபையானது அகற்றுவதில்லை எனவும் இது தொடர்பாக தாம் வடமாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாகவும்...

குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களின் பதவி ஒரு வாரத்தில் பறிபோகும்? : ஆளுநர் ​றெஜினோல்ட் குரே

வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதலளிப்பதாக, வட மாகாண ஆளுநர் ​றெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடமாகாண ஆளுநருக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு...
Loading posts...

All posts loaded

No more posts