- Sunday
- May 17th, 2026
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் இவ்வாறு பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். பரீட்சை பெறுபேறுகள் கொழும்பு பிரதேச பாடசாலைகளுக்கு முற்பகல் 10 மணியளவில் அனுப்பி...
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மோதல்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பத்து பேருக்கு மேலதிகமாக வீடு வீடாக சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர...
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் யாழ் மாநகரசபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று 26.12.2017 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் கச்சேரி, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் பிற்பகல் 04.30 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு...
கேள்வி: நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன? பதில்: என் கட்சி என்ன? என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள்...
யாழ்.புறநகர் பகுதிகளில் பகல் வேளைகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண் இரவு வேளைகளில் கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்து வந்த நிலையில் மானிப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த 55 வயதான பெண்ணொருவரே கைது செய்யப்பட்டு உள்ளார். அது தொடர்பில் காவற்துறையினர் தெரிவிக்கையில் , “கடந்த காலங்களில் சங்கானையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்...
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகளும், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, சந்தேகநபர்கள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர்...
அரசாங்கத்துடன் இணைந்து யாரெல்லாம் செயற்படுகின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். ஊடகங்கள் தான் அவற்றை தாமதமாக தெரிவிக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நூறு சதவீதம் பெண்களை மாத்திரம் கொண்டு இயங்கும் வகையில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியில் இரண்டு சதவீதம் இவ்வாறான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், இதில் கண்காணிப்பாளர்களாவும் பெண்களே நியமிக்கப்படுவர் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அத்தோடு, வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ரோந்து...
“பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட போதும் உங்களைப் போன்ற தலைவர்களை நேரடியாக பார்க்கவேண்டும் என்பதற்காகவே வந்தேன்” என எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தனை பார்க்க சென்றபோது மஹிந்த உரையாடிய விடயங்களை கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. குறித்த செய்திகளிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீவிர அரசியலில்...
மாநகரசபை முதல்வராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாமல் பணியாற்றுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன் இன்று அறிவித்தார். தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியப் பேரவையினால் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்....
வடமாகாணத்திலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் அடுத்த வருடத்திலிருந்து காலை 8 மணிக்கு ஆரம்பிப்பது தொடர்பில் வடமாகாண சபை அவதானம் செலுத்தியுள்ளது. வடமாகாணத்தின் உறுப்பினர்கள் பலர் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் கந்தையாவை சந்தித்து இதுதொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வடமாகாணத்தின் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாகவும் உறுப்பினர்...
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிவில் உடைதரித்த தமிழ் மொழி பேசும் பொலிஸாரால், இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கைத்துப்பாக்கி காண்பித்து பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று மணி நேரத்தத்துக்குப் பின்னர் மீள கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் யாழ், ஐந்து சந்திப் பகுதியில், கடந்த சனிக்கிழமை (23) பகல் இடம்பெற்றுள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்ட இளைஞர் கருத்துத்...
பணம் வாங்கிவிட்டு நெல்லியடி பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொண்டதாக கூறி, பாதிக்கப்பட்டவரால் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கரவெட்டி - காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே, இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். கரவெட்டி - காட்டுப்புலம் பகுதியில், இளைஞன் ஒருவர்,...
கரையோர பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதினால் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை , வடக்கு ,கிழக்கு, வடமத்தி, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலதிணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் நுவரெலியா, இரத்தினபுரி, காலி ,மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இத்தகவலை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான மேலதிக ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நேரடியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச...
வவுனியாவின், உள்ளூர் பேரூந்து சேவைகளை பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து இரு வாரங்களுக்கு செயற்படுத்துவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் அமைச்சின் சிரேஸ்ட செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியாவில் 195 மில்லியன் ரூபா...
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் நல்லூர் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று 25.12.2017 திங்கட்கிழமை நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் 04 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு...
வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் அரசியல்வாதியாகத் தோற்றுவிட்டார் என்று கூறுபவர்கள் முதலமைச்சர் அவர்களின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சியே அவ்வாறு விமர்சித்துவருகின்றனர் என்று தமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் மத்திய அமைச்சருமான டிலான் பெரேரா, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் சிறந்த நீதியரசராக இருந்தபோதும் அரசியல்வாதியாகத்...
அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து சபைகளின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கொள்ளும் இறுதி தினம் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் ஆராயப்பட்டு யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட...
வடமாகாண தலைமை சங்கநாயக்கரும் ஸ்ரீ நாக விகாரையின் தலைமை விகாராதிபதியுமான மீகஹஜதுரே ஞானரத்ன தேரர் காலமானார். அவர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலமானார். அவரது இறுதிக் கிரியைகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
