- Saturday
- May 16th, 2026
சங்கானையில் ஆலயக் குருக்களை கொலை செய்து அவரது பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்டு நகை மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன், தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தியமைக்கு எதிரிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குருக்கள் மற்றும் அவரது...
தனது சாவிற்கு சட்டத்தரணி ஒருவர் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய நாகேஸ்வரன் கௌசிகா என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ். மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்தில் இவர் நேற்று பிற்பகல் யாரும்...
நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை எதிர்வரும் மாதத்திலும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் பெற்றுள்ள நிலையில், வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு, வளிமண்டலத்தில் நீராவியின் அளவு மேலோங்கியுள்ளதால் இந்த சூடான காலை நிலவுகிறது என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் தனது சகோதரியான ஆசிரியை தற்கொலை செய்யவில்லை. திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சண்முகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் சண்முகராஜா ஸ்ரீஸ்கந்தராஜா ஊடகங்கள் வாயிலான இதன் உண்மைத் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளார். இது குறித்து...
யாழ்ப்பாணம் தாவடிப்பகுதியில் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்த பொலிஸார், வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதாக சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் நேற்று (21) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தாவடி வடக்குப்பகுதியில் வீடு ஒன்றினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 6 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த பொலிஸ் குழு ஒன்று, அங்கு இருந்த...
வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்திற்கு முன்பாக வட.மாகாண தொண்டராசிரியர்கள் நேற்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். நிரந்தர நியமனம் வழங்கத் தாமதமாவதாகத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த தொண்டராசிரியர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே வட.மாகாணசபை முன்பாக தொண்டராசிரியர்கள் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வடமாகாண முதலமைச்சர் அழைத்துச்...
ஊர்காவற்றுறை, கர்ப்பிணி பெண் கொலை வழக்குத் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறித்த கொலை வழக்கு நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. நேற்றைய வழக்கு விசாரணையின் போது ஆரம்பத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தாமதம் காணப்படுவது தொடர்பாக சட்டத்தரணி ஷாலினி...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கையொப்பம் திரட்டும் பணிகள் கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. இந்த கையெழுத்து திரட்டும் பணி வடக்கு மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மேற்கொள்ளப்பட்டது. ஆனந்த சுதாகரின் மனைவி கடந்த 15 ஆம்...
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று புதன்கிழமை (21.03.2018) மாலை 4 மணியளவில் தியாகி திலீபனின் நினைவுத் தூபிமுன் இடம்பெற்ற வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில்...
தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் குடும்ப நிலையையும் குறிப்பாக அவருடைய சிறிய பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்யுமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஐனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த சுதாகரன் கடந்த 2008 ம் ஆண்டு தொடக்கம் அரசியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில...
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியும் நிரந்தர நியமனத்திற்காக தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்ட போதும்,நிரந்தர நியமனம் கிடைக்காத மன விரக்தியில் நேற்று மாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது சடலம் முல்லைத்தீவு மாடவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பன்னங்கண்டிபிரதேசத்தில் வீட்டின் அருகில் வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீட்டினருகில் மலசல கூடம் அமைப்பதற்கு புதிதாக அகழப்பட்ட குழியில் குறித்த வெடிக்காத நிலையில் குண்டு அவதானிக்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நில மட்டத்திலிருந்து 4 அடி ஆழத்தில்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வாக நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழ் சிங்கள பிரதிநிதிகளுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. புலம்பெயர் சிங்கள அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த அமர்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கை மக்களுக்கு எதிராவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய சிங்கள பிரதிநிதிகள், உலக சாசனத்தின் 23/1ஐ...
வழக்குகள் தொடரப்படாமலும், வழக்குகள் தொடரப்பட்டு, கால தாமதங்கள் தொடரும் நிலைமையிலும், வழக்குகள் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும் பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற...
காச நோய் இருப்பது இனங்காணப்பட்டு அதற்கு உரிய சிகிச்சைப் பெறாது உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு சிகிச்சைப் பெறாதிருப்பின் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என, சுவாச நோய் நிபுணர் வைத்தியர் பிரசன்ன மெதகெதர தெரிவித்தார். எதிர்வரும் 24 ஆம் திகதி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியது. கப்பம் பெறும் நோக்கத்திலேயே இவ்வாறு எனது சகோதரர் கடத்தப்பட்டார் என்று ஜெனிவா வந்துள்ள பாதிக்கப்பட்ட ஜயனி தியாகராஜா என்ற பெண் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான...
அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரை விடுதலை செய்யுமாறு அவரது பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றினை நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பியுள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்தவரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் அவர்களின் மனைவியின் இறுதிக் கிரியை கடந்த 18ம்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால் வழங்கப்படும் நட்ட ஈடுகளை முன்னாள் போராளிகளும் பெற முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 23/2 நியதிக் கேள்வி நேரத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,...
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் வடமாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,...
தமது கோரிக்கைகளுக்கு இன்றைய தினத்திற்குள் தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 21 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நாட்டின் சகல பல்கலைக்கழகங்களினதும் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இந்நிலையில், இவர்களுக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உயர்கல்வி அமைச்சு நேற்று குறிப்பிட்டிருந்தது....
Loading posts...
All posts loaded
No more posts
