- Tuesday
- May 12th, 2026
யாழில் நகைகளை கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பலையும், அவற்றை கொள்வனவு செய்து வந்த வர்த்தகர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தென்மராட்சி பகுதியிலுள்ள வங்கி ஒன்றின் முகாமையாளர் கடந்த வாரம் வங்கியிலிருந்து வீடு திரும்பிய வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் முகாமையாளர் அணிந்திருந்த மூன்றரைப் பவுண் தங்க சங்கிலியை அறுத்து சென்றனர். கொள்ளையர்களின்...
ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித்த தெவரப்பெரும மற்றும் கேஷ விதானகே ஆகியோரே சற்றுமுன்னர் அலரி மாளிகைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில்...
இன்று (05) இரவில் தென் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது நவம்பர் 6 - 8 காலப்பகுதியில் மேற்கு - வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கை மற்றும் மன்னார் வளைகுடாவுக்கு குறுக்காக நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட தொகுதியின் காரணமாக...
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார் என்ற மனவிரக்தியில் இளம்பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தற்கொலைக்கு முயன்றார். அவரைத் தடுத்த பொலிஸார், கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அந்த இளம் பெண்ணை பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில்...
யாழில் சட்டவிரோதமாக போலி லேபலுடன் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த சுமார் 6 ஆயிரம் குடிநீர் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய விநியோக வர்த்தக நிலையத்தின் மீது நேற்றையதினம் சுகாதார உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது குடிநீர்ப்போத்தல்கள் நிறுவன பதிவு இலக்கம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அது நடை பெறாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வியாழேந்திரன் கட்சி தாவியமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவரைப் பற்றி எமக்கு...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 320 பேருக்கும், அதனைத் தொடர்ந்து நண்பகல் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 300 பேருக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், அன்று மாலை யாழ்மாவட்ட...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கூறுபோட நினைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் இறுதிக்காலம் ஆரம்பமாகிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக்...
எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அன்றையதினம் முற்பகல் 10 அளவில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருவதன் காரணமாக நாடாளுமன்ற செயற்பாடுகளை...
தற்போதைய அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை கூறினார். இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல்...
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் நானும் நடுநிலைமை வகிக்கத்தயார் என கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,...
நாட்டின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மத்தியகுழு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமர் மாற்றமானது அரசியல் ரீதியாக...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை காரணமாக இரத்தக்களறியேற்படலாம் என ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏஎவ்பிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் இரத்தக்களறியொன்றை தவிர்ப்பதற்கான காலம் குறைவடைந்து வருகின்றது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அதேவேளை எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றம் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காணும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும், ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ”ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் உறுதியற்ற வன்முறையை உருவாக்கும் சாத்தியம்...
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- மாநகரசபை சுகாதர பரிசோதகர்களால், சபை எல்லைக்கு உட்பட்ட குருநகர், வண்ணார்பண்ணை மற்றும் யாழ்.நகர் பகுதிகளிலுள்ள உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது ஏழு உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதனை கண்டறிந்து, அதற்கு...
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள், என்னை வலியுறுத்தினார்களென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக மஹிந்த தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது,...
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி நேற்றையதினம் சபாநாயகரிடம் கையளித்தது. பிரதமர் வெற்றிடம் காணப்படாத நிலையில் அரசியலமைப்புக்கு முரணாக பிரதமர் பதவியேற்றமை தொடர்பிலேயே மகிந்த ராஜபக்ச மீது நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியமைக்கான 2094/43இலக்க வர்த்தமானி அறிவிப்பு மற்றும் அமைச்சரவையைக்...
கட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படும் என நாடாளுமனற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்க தரப்பிற்கு மாறுவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (48 கோடி இலங்கை ரூபாய்) பேரம் பேசப்பட்டதாக ஐ.தே.க....
கூட்டமைப்பின் புளொட் சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மஹிந்த அரசின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிராந்திய அபிவிருத்திக்கான (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சர் எஸ். விஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளநிலையில் அவருடைய கட்சி தாவலிற்கு 48 கோடி கைமாறப்பட்டதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தவிர்ந்த மேலும்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று 02.11.2018 மாலை 5 மணியளவில் சபாபதி வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு பிரிகேடியர் சு.ப....
Loading posts...
All posts loaded
No more posts
