யாழ்ப்பாணத்தில் கொடூரம்: 4 வயதுக் குழந்தைக்கு பாலியல் வதை!! –

4 வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்குட்படுத்திய மிகக் கொடூரமான சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது பெண் குழந்தை அவரது தாயாரால் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். குழந்தை 21ஆம் நோயாளர் விடுதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. குழந்தைக்கு அந்தரங்க உறுப்பிலிருந்து குருதி வெளியேறியுள்ளது. அதனால் குழந்தை சட்ட மருத்துவ அதிகாரியின்...

பிரதமர் பதவி ஜனாதிபதியின் திடீர் தீர்மானம்!!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்குமாயின் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து தொடர்ந்தும் தன்னால் பணியாற்ற முடியாது என்பதால், அது சம்பந்தமாக சிந்தித்து பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை...
Ad Widget

நாடாளுமன்றத்தில் இன்று மேலும் குழப்பங்கள் வெடிக்கும் சாத்தியம்?

அவரது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பது நிருபணமாகியுள்ள நிலையில்,நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன், மகிந்த ராஜபக்சவை பிரதமராக சிறப்பு உரையாற்ற அனுமதிக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் குழப்பங்கள் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. ”புதிதாக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ...

ஜனாதிபதியால் தனது பதவிக்கு ஆபத்தென ரணில் முன்னரே உணர்ந்துவிட்டார்! – சட்டத்தரணி குருபரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து வருமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னரே உணர்ந்திருந்ததாக, யாழ்.பல்கலைக்கழக சட்டபீட தலைவரும் சட்டத்தரணியுமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். அதனாலேயே அரசியலமைப்பில், 19ஆம் திருத்தத்தினைக் கொண்டு வந்து ஜனாதிபதி மைத்திரியின் அதிகாரங்களை, ரணில் விக்ரமசிங்க குறைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு...

வடமராட்சியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வடமராட்சியினை வசிப்பிடமாக கொண்ட இரத்தினம் ரவீந்திரன் (வயது 53) என்பவரே இச்சம்பவத்தில் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் நீரிறைக்கும் மின் மோட்டார் பழுந்தடைந்தமையால் அதனை திருத்துவதற்கு அவர் முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில்...

ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு ; அனைத்து மனுக்களையும் இரத்துச்செய்யுமாறு சட்டமா அதிபர் நீதிமன்றிடம் கோரிக்கை

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம், அரசியலமைப்புக்குட்பட்டதெனத் தெரிவித்துள்ள சட்டமா அதிபர் அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தின் படியே பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார். அரசியலமைப்பின் 19 வது திருத்த சட்டத்தின் 33...

இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும். கிழக்கு மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது....

பாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் ததேகூ கலந்துரையாடல்!!

பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய கட்சிகள் அல்லது அமைப்புக்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட உள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, வெற்றியைப் பெறுக் கொள்வது, வேறு தரப்புக்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்...

7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை

கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்துள்ளார். கொடிகாமம் பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுமி கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி பெற்றோர்கள்...

நல்லூரில் பழமையான மரங்களை பாதுகாக்கத் தீர்மானம்!!

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சபையின் உப தவிசாளர் ஜெயன் பிரேரணை ஒன்றை சபையில் முன்மொழிந்தார். நல்லூர் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு சபை மண்டபத்தில் தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது முன்வைக்கப்பட்ட இந்தப் பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது....

சுதந்திரக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவோம்: பொதுஜன பெரமுன

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித்த அபேகுணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொண்டனர்....

இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். சைவபரிபாலனசபையால் நடாத்தப்படும் சைவசித்தாந்த பிரவேச பால பண்டிதர் பரீட்சையில் சித்தி அல்லது கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை (இந்துசமயம் அல்லது இந்துநாகரீகம் உட்பட) சித்தி அல்லது சைவசமய...

மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

எதிர்வரும் பொது தேர்தலில் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலொன்று இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக கொழும்பில் 19 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், குறைந்தபட்சமாக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 4 பேர் தெரவுசெய்யப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 பேர் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர். யாழப்பாண மாவட்ட வேட்பு மனுவில்...

பொது தேர்தல் குறித்து மைத்திரி- மஹிந்த தீவிர ஆலோசனை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை இச்சந்திப்பு நடைப்பெற்றுள்ளது. இதன்போது எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய இருகட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்...

கள­மி­றங்­கு­கி­றது விக்கி­னேஸ்­வரனின் தமிழ் மக்கள் கூட்­டணி!

பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வடக்கு, கிழக்கில் வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான தமிழ் மக்கள் கூட்­டணி கள­மி­றங்­க­வுள்­ளது. இதற்­கான முன்­னேற்­பா­டு­களில் அந்தக் கட்சி ஈடு­பட்­டுள்­ள­துடன் வேட்­பா­ளர்­களை தெரி­வு­செய்யும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்று வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. முன்னாள் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தனது புதிய கட்சி தொடர்பில் அண்­மையில் அறி­விப்பு வெளியிட்­டி­ருந்தார். வட­மா­காண சபைத் தேர்­தலில் போட்­டி­யிடும் நோக்­கி­லேயே இந்த...

தமிழ் அரசியல் சக்திகள் ஒருமித்து செயற்பட வேண்டும் – தொல். திருமாவளவன்!

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியில் நெருக்கடி நிலைமையில் தமிழ் அரசியல் சக்திகள் ஒருமித்து செயல்பட வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு, தமிழர்களின் தாயகத்தை மீட்க தமிழ் அரசியல்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கிற்கு நிவாரண உதவி!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக கிழக்கிற்கான வெள்ள நிவாரண உதவிப் பொருள்கள் நேற்று (11) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிழக்கிற்கான உறவுப்பாலம் எனும் தொனிப்பொருளில் மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு யாழ் மாவட்டம் உள்ளடங்களாக நடமாடும் சேவையில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் வழங்கி...

மஹிந்த தலைமையில் தேர்தல் களத்தில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள்?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் இருவர் 2019 ஆம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் கூறுகின்றன. இதில் தற்போது கிடைத்த தகவல்களின் படி முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் களுத்துறை மாவட்டம் சார்பில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

பூகோள அரசியல் காய்நகர்த்தல்களே நாட்டின் தற்போதைய நிலை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பூகோள அரசியல் போட்டியின் விளைவாகவே தற்போது நாட்டில் சட்டத்திற்கு முரணான ஆட்சிக் கலைப்பும் நாடாளுமன்ற கலைப்பும் ஏற்படக் காரணமாக இருப்பதாகவும் இவற்றின் பின்னணியின் சீனாவின் செயற்பட்டு வருகின்றது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருந்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்ச்சியில்...

சர்ச்சைகளுக்கு மத்தியில் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்ட அதிரடி அறிவித்தல்!

அரசியலமைப்பிறகு மாறாக நாடாளுமன்றம் கலக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிர்வாக நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணையாளருக்கு மஹிந்த தேசப்பிரிய மாற்றியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், “ஜனாதிபதியால் கடந்த 2019.11.09 ஆம் திகதி...
Loading posts...

All posts loaded

No more posts