தமிழர்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க வேண்டும் – சிவாஜி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்க தமிழ் கட்சிகள் தயாராக வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த சிவாஜிலிங்கம், தேர்தலில் வெற்றியடைந்த பின்னர் தமிழர்களை புறக்கணிப்பது...

பலாலி விமானநிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம்!

பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் கொழும்பு கட்டுநாயக்க, கொழும்பு இரத்மலானை, மட்டக்களப்பு மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் ஆகியவை காணப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணத்துடன் சேர்த்து தற்பொழுது நாட்டில் 5 சர்வதேச விமான நிலையங்கள் காணப்படுகின்றன. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க...
Ad Widget

250 முஸ்லிம் குடும்பங்களைக் குடியமர்த்த யாழ்ப்பாணத்தில் இரட்டைத் தொடர்மாடி – அமைச்சரவை ஒப்புதல்

யாழ்ப்பாணத்தில் காணியற்றவர்களாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 250 முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக இரட்டைத் தொடர்மாடிகளை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தனியார் ஒருவரால் புதிய மூர் வீதியில் அமைந்துள்ள காணி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதிலேயே இந்த இரட்டை தொடர்மாடிகளைக் கொண்ட 250 குடியிருப்புகளை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்டகாலமாக உள்ளக...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் திகதியுடன் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில், இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆவர். ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே. நிரஞ்சன், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் சாம். தியாகலிங்கம்...

ஆசிரியர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்ட தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஒருவார கால தொடர் லேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென எடுக்கப்பட்ட முடிவு மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக அந்த போராட்டத்தை ஒத்திவைத்திருப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்தன. ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட பல...

புலிகளை அழிப்பதற்கு ஒத்துழைத்த சர்வதேசம் இனப்பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டும் – சம்பந்தன்

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய நிலையில், இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு அதிக பிரயத்தனம் கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அந்த சூழலில் பிரித்தானியா உட்பட இணைத்தலைமை நாடுகளாவிருந்த நாடுகளிற்கு இனப் பிரச்சினைக்கு நிச்சயம் அரசியல் தீர்வு காணப்படும் என இலங்கை அரசாங்கம் வாக்களித்திருந்தது என்பதை...

காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், காணி விடுப்பு – உடனடியாக தீர்த்து வைப்போம் என்கிறார் அநுர

மக்கள் சக்திக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்தால் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். இதன்படி காணாமல் போனவர்கள், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் மக்கள்...

தமிழ் மக்கள் பேரவையின் கட்சிகளுடனான சந்திப்பு ஆரம்பம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், புலமைசார் வல்லுநர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்ட சுயாதீனக்குழுவே இந்த சந்திப்பை மேற்கொண்டுவருகிறது. இதன் இரு சந்திப்புக்கள்...

என்னை ஆதரிக்க கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை – சஜித்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை ஆதரிக்க எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்தோடு ஆதரவைப் பெறுவதற்காக யாருடைய நிபந்தனைகளுக்கும் இணங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “தன்னை ஆதரிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு...

ஆனையிறவில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு-இருவர் காயம்

ஆனையிறவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (புதன்கிழமை) அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த இரண்டு லொறிகளுடன் கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் வானின் சாரதி...

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரில் ஆராய்ந்தார் ஆளுநர்!

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேரில் சென்று ஆராய்ந்தார். பலாலி விமான நிலையத்திற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்த ஆளுநர், விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தார். அபிவிருத்தி பணிகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது குறித்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இம்மாதம் 16ஆம் திகதி அல்லது அதனை...

புதிய தேர்தல் கூட்டணி – மைத்திரியை சந்தித்தார் சஜித்!

புதிய தேர்தல் கூட்டணி ஒன்றினை அமைத்துக் கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்றிரவு(செவ்வாய்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புதிய தேர்தல் கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து பேச வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித்...

ஜனாதிபதி தேர்தலுக்கு 13 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்!!

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை, 13 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனரென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று (30) மட்டும் நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். கெடகொட கமகே ஜயந்த பெரேரா, சிறிபால அமரசிங்க, அஜந்தா விஜேசிங்க பெரேரா, அபரெக்கே புஞ்ஞானந்த தேரர், வெலிசரகே சமன்...

தமிழ் மக்கள் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை தமிழத் தேசியக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் ; சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை தமிழத்தேசியக் கட்சிகளோ அல்லது தமிழ் மக்கள் சார்ந்து செயற்படுகின்ற பொது அமைப்புக்களோ விரைந்து முன்னெடுக்கவேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் மக்கள் ஓரணியில் நிற்பது தொடர்பில் பல கருத்துக்கள் வெளிவருகின்ற நிலையில் இதனை யார் முன்னெடுப்பது எனக் கேட்டபோதே அவர் இதனைத்...

காணாமலாக்கப்பட்ட சிறுவர்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். கல்வியங்காடு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடிய காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேரணியாக காணாமல்போனோருக்கான அலுவலகம் வரை செல்லவுள்ளனர். அங்கு மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் பொது அமைப்புக்கள். பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு...

தமிழர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என சஜித் நினைப்பது தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளும் செயல் – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என சஜித் பிரேமதாச நினைப்பது தன்னைதானே ஏமாற்றிக் கொள்ளும் செயலுக்கு ஒப்பானது என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளிக்கும் வகையில் விக்னேஸ்வரண் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இதனை குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ பெரும்பான்மையான...

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!!

கொக்குவில் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த தாக்கியவர்கள் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியும் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். இதற்கமைய யாழிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) அவர்கள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தள்ளனர். அண்மையில் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் பட்டப்பகல்...

வாள்வெட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!

யாழில் வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு உயிரிழந்தார். கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். எனினும் இந்த சம்பவம் தொடர்பாக...

தொடரும் ரயில்வே தொழிற்சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. ரயில்வே தொழிற்சங்க ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவிற்கும் ரயில்வே தொழிற்சங்கத்திற்கும் இடையில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. எனினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய...

நீராவியடி விவகாரம் – யாழில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு அனைவருக்கும் அழைப்பு!!

முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளையை அவமதித்து சட்டத்தை கையில் எடுத்த ஞானசார தேரர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பேரணி எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழில் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் யாழ்....
Loading posts...

All posts loaded

No more posts