கேகாலையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்!!

கோகாலையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இந்த சம்பம் நேற்று (திங்கட்கிழமை) இரவு கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கனேபொல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு, சிறுபான்மை மக்களாகிய மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பலர் சொத்துக்களை இழந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த...

எனது படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் ! அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டார் ஜனாதிபதி கோத்தாபய

அரச அலுவலகங்களில் எனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இன்று பதியேற்றுக்கொண்ட கோத்தாபய ராஜபக்ஷ தனது அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டுள்ளார். இதன்போதே அவர் அரச அலுவலகங்களில் எனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ...
Ad Widget

கமால் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக நியமனம்!!

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை அவர் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன...

“உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு ஜனாதிபதி அழைப்பு!!

நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய 7ஆவது ஜனாதிபதியாக நந்தசேன கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார். அனுராதபுர ருவன்வெலி மகா தூபி முன்பாக, பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய முன்னிலையில் கோத்தாபய ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றார். இந்த பதவியேற்று சுபவேளையில் முற்பகல் 11.45 மணிக்கு ஆரம்பமானது. 11.50 மணிக்கு உறுதியுரை எடுத்துக்கொண்டு கையொப்பமிட்டார். இங்கு அவர் உரையாற்றுகையில்...

சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை – நாமல்

சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பற்றியும், பொதுஜன பெரமுன பற்றியும் அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை என நாமல் ராஜபக்ஷ கூறினார். கூட்டமைப்பின் கருத்தினை மீறி தமிழ் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு...

அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக சுமந்திரன் அறிவிப்பு!!

எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார். கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று...

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் கைது!!

முல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் தருமபுரம் மற்றும் புதுக்குடியிருப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் தாக்குதல் நடத்தச் சென்ற இருவர் சுதந்திரபுரத்தில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்த இருவர்...

கோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன்

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின் எல்லா மக்களுக்கும் வளமானதும் சுமூகமானதும் சுபீட்சமானதுமான எதிர் காலத்தை அவர்...

புதிய ஜனாதிபதியாக கோட்டா அறிவிப்பு – வர்த்தமானி வெளியீடு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 6,924,255 வாக்குகளை (52.25%) பெற்று...

ஜனாதிபதி தேர்தலுக்கு யாழ். மாவட்டம் தயார் நிலையில்!

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் முகமாக தேர்தலை நாளை நடத்துவதற்காக இன்று (15) நாடளாவிய ரீதியில் வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்கு சீட்டுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கு இணைவாக இன்று காலை முதல் மதியம் வரை நாடளாவிய ரீதியில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு...

வாக்­க­ளிக்கும் உரி­மையை அனை­வரும் பயன்­ப­டுத்­த­ வேண்டும்: நல்லை ஆதீன முதல்வர்

ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிக்கும் உரி­மை­யை ­அ­னை­வரும் எவ்­வித தயக்­கமும் இன்றி பயன்­ப­டுத்­த ­வேண்டும். எவரும் தேர்­தலை புறக்­க­ணிக்­கக்­கூ­டாது என்று நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம­சுந்தர­ தே­சிக ஞான­சம்­பந்த பர­மாச்­சா­ர்ய சுவா­மிகள் தெரி­வித்தார். ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் அவர்­மேலும் கருத்துத் தெரி­விக்­கையில், தேர்­தலில் வாக்­க­ளிக்க வேண்­டி­யது ஒவ்­வொ­ரு­வரின் ஜன­நா­யகக் கட­மை­யாகும். அந்தக் கட­மை­யையும் பொறுப்­பையும் ஒவ்­வொ­ரு­வரும்...

கொஞ்சம்கூட இரக்கமற்ற யாழ்ப்பாணச் சமூகம் எப்போது திருந்தும்?

இன்று (13.11.2019) புதன்கிழமை நடந்த சம்பவம் என்னை ஆத்திரம் கொள்ள வைத்தது. இன்று நேற்றல்ல பலநாட்களாக பிரயாணத்தின்போது நடக்கின்ற நிகழ்வுகள்! ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தவர்கள் என்றால் - மற்றவர்களுக்காக பரிவு காட்டும் ஒரு சமூகம் என்று பலராலும் கொண்டாடிய சமூகம் இன்று ஏனோ சுயநலமுடையதாக மாறிவிட்டது. பகிர்ந்து விட்டுக்கொடுத்து பெரியவர்களை கனம் பண்ணிய எமக்கு இதைப்...

மகிந்தவிற்கு எதிராக போராடிய தம்பிராசா எச்சரிக்கப்பட்டு விடுதலை!!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த தம்பிராசா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்ட நிலையில் இரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டார். “ஜனாதிபதி தேர்தல் தபால்மூல வாக்களிப்பின் போது, ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள தபால்மூல...

தனியார் பஸ் துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவை ; வடக்கு ஆளுநர் தலைமையில் அறிமுகம்

வடமாகாண மக்களுக்கு போக்குவரத்தில் உலகதர சேவையை வழங்கலே எனது கனவாகும் என்று தனியார் பஸ் துறையில் புரட்சிகர வலையமைப்பு சேவையின் அறிமுக நிகழ்வில் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். வரையறுக்கப்பட்ட யாழ் தூர சேவை பஸ் உரிமையாளர்களின் நிறுவன அனுசரணையுடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில் பஸ்...

தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் பிரச்சினைகள் ஏற்படலாம் –தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் ஆர்பாட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் தமது நாட்டு பிரஜைகளை அவதானமாக இருக்குமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் விடுக்கப்பட்ட 2ஆவது நிலை பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. பெரிய கூட்டங்கள் அல்லது...

வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறித்த விபரம் வெளியானது!

ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு – டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, ரோயல் கல்லூரி கம்பாஹா – பத்தலகேதர் வித்யலோகா மகா வித்யாலயம் களுத்துறை வடக்கு – முசாயஸ் கல்லூரி கண்டி – மொடல் பாடசாலை மாத்தறை...

கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திற்கு மக்களை வரவைப்பதற்க்காக புலிகளின் புரட்சிப் பாடலை ஒலிபரப்பியவர் கைது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடல்களை ஒலிபரப்ப முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கூட்டமைப்பின் இறுதி பிரசார கூட்டம் இன்று (புதன்கிழமை)...

பாதுகாப்பான ரயில் கடவை கோரி ஆர்ப்பாட்டம்; யாழ். – காங்கேசன் துறை ரயில் சேவை பாதிப்பு

யாழ்ப்பாணம் பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் பாதுகாப்பான ரயில் கடவை அமைக்கக் கோரி, பொது மக்கள் ரயில் பாதையை மறித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அந்த பாதுகாப்புக் கடவையில் இன்று (நவ.13) புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். அதனையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் அந்தப் பகுதி...

நேரகாலத்துடன் சென்று வாக்களியுங்கள்; யாழ்.ஆயர் வலியுறுத்தல்

நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று உங்கள் வாக்குக்களை போடுங்கள் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயக உரிமை. இந்த உரிமையை மக்கள் அனைவரும் எவரின் கட்டாயமுமின்றி தெளிந்த மனதுடனும் தீர்க்கமான முடிவுடனும் பயன்படுத்த வேண்டும்....

தமிழ் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்­பது கோட்டாவிற்கு வாக்களிப்பதற்கு சமம் – சுமந்திரன்

தமிழ் பேசும் வேட்பாளருக்கு வாக்களிப்பது அல்லது தேர்தலை புறக்கணிப்பது மறைமுகமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிப்பதற்கு சமமாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அம்­பாறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “ஸ்ரீலங்கா பொதுஜன...
Loading posts...

All posts loaded

No more posts